மாநபிகள் மணி மொழிகள்
- பாகவி பின் நூரி, சித்தரேவு.
வேண்டாம் ! வேண்டாம் !
தொழுதநிலையில் வானத்தின் பக்கம் பார்க்க வேண்டாம். சிறுநீரில் எச்சில் துப்ப வேண்டாம். அடுப்புக் கரியைக் கொண்டும் எலும்பு கொண்டும் துப்புரவு செய்ய வேண்டாம். சட்டையை புரட்டி அணிய வேண்டாம். நின்ற நிலையில் “ஸுட்” அணிய வேண்டாம். உட்கார்ந்த நிலையில் தலைப்பாகை கட்ட வேண்டாம். சந்திர, சூரிய ஒளியில் மர்மஸ்தானத்தை வெளிப்படுத்த வேண்டாம்.
கடினமான பொருட்களை, பல்லினால் கடித்துத் துண்டிக்க வேண்டாம். சாப்பிட்ட கையை சூப்பி, சுத்தம் செய்யாமல் தூங்க வேண்டாம். வரிசையாகச் செல்லும் இரண்டு ஒட்டகங்க (வாகனங்க)ளுக்கு மத்தியில் நடக்க வேண்டாம். சூடான உணவு, குடிப்பில் ஊதிச்சாப்பிட வேண்டாம். தண்ணீரில் ஊதிக் குடிக்க வேண்டாம். ஸுஜூது செய்யும் இடத்தில் ஊத வேண்டாம். (வாயால் ஊதுதல், மூச்சு விடுதல்)
மற்றவர்களின்மர்மஸ்தானத்தைப் பார்க்க வேண்டாம். பாங்கு இகாமத்திற்கு மத்தியில் (வீண் பேச்சு) பேச வேண்டாம். நீ உனது (இஸ்லாமிய) சகோதரனைப் பற்றி புறம் பேச வேண்டாம். அண்டை வீட்டாருக்கு தொல்லை கொடுக்க வேண்டாம். அருகில் அமர்ந்திருப்பவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம். உனது பின் பக்கம் திரும்பிப் பார்ப்பதை அதிகமாக்க வேண்டாம். உன் நண்பனிடம் சண்டையிட வேண்டாம்.
பரிகசிக்கப்பட்டாலும்உண்மையே பேசு. உண்ணும் உணவை நுகர்ந்து பார்க்க வேண்டாம். தடுக்கப்பட்ட (ஹராமான) தை விட்டும் கண்களை மூடிக் கொள். பேசினால் விளங்கும்படி பேசு. அன்பளிப்பிற்காக அழைத்தால் ஏற்றுக் கொள். நெடிய தூரம் தனிமையில் செல்ல வேண்டாம். கவளத்தைப் பெரிதாகப் பிடிக்க வேண்டாம். வாய்கொள்ளாமல் திணிக்க வேண்டாம்.
உன்னுடைய அறிவு, ஞானத்தைமறைக்க வேண்டாம். உன்னைவிட உயர்ந்த பயபக்தியாளரிடம் ஆலோசனை செய். உன்னைப்பற்றி தற்பெருமை கொள்ளாதே. உன் பகைவன் (குப்ரின்) பக்கம் சாயாதே. உன் குடும்பத்தினரைப் பற்றி பெருமை கொள்ளாதே. எதன் மீதும் பேராசை கொள்ளாதே. உன் கண்ணியத்தைப் பெரிது படுத்தாதே.