அமுத மொழிகள்
ஓளியை மறைக்கத் துணியும் தூசி நுலிலிருந்து...
சென்ற இதழ் தொடர்ச்சி..
மேலே உள்ள திருவசனங்களிலே மக்கள் யாரை வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்றெல்லாம் கூறப்பட்டு உள்ளது. அப்படி வழிபடுவோரெல்லாம் எப்படியிருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது காண்க. ரஸூல் நாயகம் அவர்களைப்புகழ வேண்டாம் என்றும் அவர்களைக் கீழ்த்தரமாகவும் பேசும் வஹ்ஹாபிகள் எப்படித் தான் பின்பற்றுவார்கள்.
அதனால்தான் ரஸுல் நாயகம் அவர்களை அஞ்சல் விநியோகிப்பவர் அஞ்சலைத் தந்துவிட்டுச் சென்றுவிட்டார். இப்போது எங்களுக்கு அஞ்சல் கொண்டுவந்தவர் (போஸ்ட் மேன்) தேவையில்லை. அஞ்சல் (கடிதம்) மட்டும் போதும் என வஹ்ஹாபிக் கும்பல்கள் கூறிக்கொள்கின்றன. பெருமானார் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அஞ்சல் விநியோகிப்பவராம்.
குர்ஆன் கடிதமாம். வாய் கூசாமல், தொண்டை அடைக்காமல், நாவுக்கு பக்கவாதம் பிடிக்காமல் இப்படியயல்லாம் கூறுகிறார்களே. என்ன தான் ஆகப்போகிறதோ! இதனால்தான் குர்ஆனை ஓதாமல், குர்ஆனை மனனம் செய்யாமல் குர்ஆனின் கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைக்காமல் வெறும் புத்தகங்களுக்கு குர்ஆனைவிட மதிப்புக் கொடுத்து நாள்தோறும் வாசித்து
வருகிறார்கள். என்னே அதனாற்கண்ட புண்ணியம்! இதில் பணத்துக்காக ஆலிம்கள் எனச் சொல்லிக்கொள்ளும் சிலரும் சிக்கி ஈமானைப் பறி கொடுக்கிறார்கள். கந்தூரியை இழிவுபடுத்தி மேடைகளில் விக்கி, விக்கிக் கத்துகிறார்கள். நரம்பு வெடித்தால் என்னவருமோ? வீட்டில் படுக்கையில் தான் காலம் கழியும்.
“அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லா(ஹ்) வின் ரஸூல் உங்களிலேயே இருக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் ரஸுல் உங்களுடனேயே இருக்கிறார்கள்.” (அன்னிஸாஉ : 79)
இவ்வாறு அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
அப்படியானால் கருத்தாகவும் (மஉனவிய்யன்) இருக்கலாம். அல்லது உடலுடனும் (ஜஸ்திய்யன்) இருக்கலாம். ஆதலால் இரண்டையும் சிந்திக்கவேண்டி உள்ளது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் எனவும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது. வஹ்ஹாபிகள் ரஸூல் நாயகம் ஹயாதுன்னபிய்யல்ல. மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள் எனக்கூறுகின்றனர். அப்படியாயின் இக்கருத்து குர்ஆனுக்கே முரணானதாகும்.
குர்ஆனுக்கு முரண்பட ஏதேனும் உரைப்பதாயின் குப்று உண்டாகிவிடு மல்லவா? வஹ்ஹாபிகளுக்குக் கடிதம்
விநியோகிக்கும் போஸ்ட் மேன்தான் போயிருப்பான். அவன்தான் இப்போது அவசியமில்ç. ஆனால், சங்கைக்குரிய எம்பெருமானார் ரஸூல் நாயகம் நம் உடனேயே உள்ளார்கள். இதை ஈமான் கொண்டவர்கள் நன்கு அறிவர். வஹ்ஹாபிய மிஸ்டர் மார் அறியமாட்டார்கள். எனவே இந்த வகையில்,
”எவர்கள் அல்லா(ஹ்) வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் தீங்கு (கெடுதி, இடையூறு) செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக இவ்வுலகிலும், அவ் வுலகிலும் சபித்தான். கேவலப்படுத்தும் வேதனைகளையும் அவர்களுக்குச் சேமித்து உள்ளான். ” (அஹ்ஸாப் :56)
எனவே எம்பெருமானாரை நேரிலோ மறைமுகமாகவோ தாக்குபவர்களுக்கு மேலே சொன்ன (அதாபுகள்) வேதனைகள் நிச்சயம் கிடைக்கும். இப்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துகளை எண்ணிப் பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியுள்ளது. தமக்குச் சொந்தமான இடங்களை விட்டும் விரட்டப் பட்டுள்ளார்கள். அகதிகளாய்ச் சொல்லொணாத் துன்பம் அடைகின்றனர்.
தம்மை எதிரிகளிடத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாது தவிக்கின்றனர். நாளுக்கு நாள் இஸ்லாமியர் பலர் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகின்றனர். சில கும்பல்களின் கெடுதியினால் நல்லவர்களும் இந்தச் சாபக்கேட்டை அடைய வேண்டியுள்ளது. அல்லாஹ் நேரிலே வந்து மனிதனைப் போல் உதவி
கொடுப்பதில்லை. அவனுடைய அடிமைகளான படைப்பினங்களின் சக்திகளைக் கொண்டே காப்பாற்றவும் அழிக்கவும் வல்லவனாயுள்ளான். எனவே அல்லாஹ் ஜல்லஉனுஹு வத ஆலாவுக்கும் அவனுடைய ரஸூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் நல்லவர்களாக வாழ முனைய வேண்டும். அல்லா(ஹ்) வுக்கு மிகவும் அஞ்சி நடந்துகொள்ள வேண்டும். அவனுடைய சாபக்கேடு எப்போது இறங்கும் எனக்கூறமுடியாது.
ரஸூல் நாயகம் அவர்களுக்குத் தேவையற்ற வார்த்தைகளைக் கூறி உருக்குலைந்து செத்துமடிந்த கூட்டங்களின் சரித்திரங்கள் நிறைய உண்டு. ஆதலால் அவர்களின் சாபக்கேட்டைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் மிக மிக அறிந்தவன். நான் எல்லாம் அறிந்தவன் என்னும் தற்பெருமையை மனதிலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும். தற்பெருமையைப் பற்றி குர்ஆனில் நிறைய அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்.
ஏனெனில் அவர்கள் அல்லா(ஹ்)வுக்கும் ரஸூலுக்கும் மாறு செய்தார்கள், எவரேனும் அல்லாவுக்கும் ரஸூலுக்கும் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவனை) வேதனை செய்வதில் கடுமையானவனாக இருப்பான். (அன்பால் : 13 )
அல்லா(ஹ்) வுக்கும் ரஸூல் நாயகம் அவர்களுக்கும் எவ்வாறு மரியாதை செய்ய வேண்டும்?
மூத்த மனிதனுக்குச் செய்வது போன்றா?
அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதைப் பாருங்கள்.
ஈமான் கொண்டவர்களே! அல்லா(ஹ்) வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் முன்னே (சொல்லாயினும், செயலாயினும்) நீங்கள் முந்திவிடாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; ஈமான் கொண்டவர்களே! உங்கள் பேச்சு சப்தத்தை நபியவர்களின் சப்தத்திற்கு மேலே உயர்த்தாதீர்கள். உங்களிற் சிலர் சிலருடன் குரல் உயர்த்திப் பேசுவதுபோல் நபி அவர்களிடம் குரல் உயர்த்திப் பேசாதீர்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் (நீங்கள்செய்யும்) உங்கள் நல்ல காரியங்களெல்லாம் வீணாகிவிடும். அல்லாஹ்வின் ரஸூல் அவர்களிடத்து (அவர்களுக்கு முன்னே) எவர்கள் சப்தத்தை (மரியாதையின் பொருட்டு) த் தாழ்த்திக் கொள்வார்களோ அவர்களின் உள்ளங்களை (அவற்றில்) தெய்வபக்தி உள்ளதா என்பதை பார்ப்பதற்)காக அல்லாஹ் பரிசோதனை செய்தான். (ஹுஜுராத்1,2,3.)
நாயகம் ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மகிமைப் படுத்துவதற்காக மக்கள் தங்களின் வார்த்தைகளைத் தாழ்த்திக் கொள்வார்கள். மேலே கூறப்பட்ட திருவசனங்கள் நாயகம் ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்வை எடுத்துக் காட்டுவன என்பதை எவராலும் மறைக்க முடியாது. பெருமானார்அவர்களின் மணிமொழிகளான திரு ஹதீஸ்களை வாசிக்கும் நேரத்திலும் அவர்களின் மதிப்புக்குரிய மேனியை அடக்கி வைத்திருக்கும் பரிமளம் மிக்க அவர்களின் அடக்கத்தலமான ரவ்ளாரீபிலும் சத்தமிட்டுப்பேசுவது கூடாது என்று பெரும் பெரும் உலமாக்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தார்கள்.
(ஏனெனில் அவர்கள் ஹயாத்துன்னபீ.மண்ணோடு மண்ணாகவில்லை, பரிபூரணமானவர்கள். (அவர்களுக்கு நிகர் எவருமில்லை. அவர்கள் எங்களிலேயே இருக்கிறார்கள். எங்களுடனேயே இருக்கிறார்கள்.)
ரஸூல் நாயகம் அவர்களை அதட்டிப் பேசாமலும் அழைக்காமலும் இருப்பதற்காகவே இவ்வாக்கியம்வந்துள்ளது. (“சொல்வீர்களாக. நானும் உங்களைப் போன்ற மனிதனே,என்னிடத்தே வஹ்யு எனும் தேவதூது இறக்கப்படுகிறது “-) எம் பெருமானாரை ஏனையோர் போன்ற மனிதன் என்று கூற இறைவன் கேட்டுக்கொண்டான் என்பதை மட்டும் பேருபதேசமாக எடுத்துக்கொண்டு சற்றும் அறியாத ஒரு கும்பல், நமது மூத்த சகோதரனுக்கு மரியாதை செய்வதுபோல் ரஸூல் நாயகம் அவர்களுக்கும் செய்தாற்போதும் என்கிறார்கள்.
ரஸூல் நாயகம் அவர்களை கடிதம் பகிர்வோனுக் (பியோனுக்)குச் சமப்படுத்துகின்றனர். நாம் செய்வதைத்தான் அவரால் செய்யமுடியும் என்கிறார்கள். ஐயகோ, இறைவா! குப்பார்களின் கெடுதியிலிருந்து காவல் தேடுகிறோம். ஆனால் “என்னிடத்தே தேவதூது இறக்கப்படுகிறது“ என்பதை மறைத்துக் கொண்டார்கள். பொது மனிதன் ஒருவனுக்கு வஹ்யு இறக்கப்படுகிறதா? அப்படியயனின் எமக்கெல்லாம் தேவதூது இறக்கப்பட வேண்டுமே. எந்த வஹ்ஹாபிக்கும் தேவதூது இறக்கப் படுவதில்லை.
(தொடரும்)