• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Nov 2011   »   வைகறை தொழுகை


வைகறை தொழுகை

டாக்டர் ஹாரூன் மயிலடு துறை.


 

1980-ம் ஆண்டு Human Psychology and Behaviour துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் நமது மூளையில் அமைந்துள்ள உயிரிக் கடிகாரம்  (Biological Clock) பற்றிய தங்களின் ஆராய்ச்சிமுடிவை வெளியிட்டிருக்கிறார்கள். மனித மூளை சாதாரணமாக அதன் செயல் திறனை சுமார் 35 முதல் 50 சதவிகிதம் மட்டுமே வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.  முழுமையாக வெளிப்படுத்துவது இல்லை.

அதிகாலை சூரிய உதயத்திற்கு 40 நிமிடத்திற்கு முன்புதான், மூளையின் செயல் ஆற்றும் திறன் - மிக அதிகபட்ச அளவான 70 சதவிகிதம் வரை வெளிப்படுத்துகிறது எனக் கண்டு பிடித்துள்ளனர்.  சரியாக இந்த நேரத்தில் தான் இஸ்லாமியர்களின் அதிகாலைத் தொழுகை பஜ்ரு (FAJAR) ஆரம்பமாவது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விஞ்ஞானிகளின் கருத்துப்படி எந்த ஒரு உயிரியல் நடவடிக்கையும் தினமும் அதே நேரத்தில் நிகழ்த்தப்படுமானால் - 3 அல்லது 4 வாரங்களில், மூளையின் செயல்திறன் அதிக அளவுக்கு செயலாற்றத் தொடங்கி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதிகாலை பஜ்ரு - தொழுகையின் மூலம் ஒருவர் இயல்பாகவே அதிக மூளைத்திறன் மிக்கவராக மாறிவிடுகிறார்.  அல்லது மூளை தனக்குத்தானே அதிக ஆற்றல் உள்ளதாக புரோகிராம் செய்யப்பட்டு விடுகிறது என்று அறியும்போது - தொழுகையின் மகத்துவத்தை என்னென்று கூறுவது? அதுமட்டுமா?  அதிகாலையில் பூமியில் ஓசோன் காற்று நிரம்பி வழிகிறது. 

தொழுகையில் - நமது நுரையீரல், காற்றை அதிகபட்சமாக சுவாசிக்கின்றது.  நாம் நாள் முழுவதும் களைப்படையாமல், சுறுசுறுப்பாக இயங்குவதற்கு இந்த ஓசோன் காற்றுதான் காரணமாக அமைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தொழுகை - சிறந்த மூச்சுப் பயிற்சியாக அமைவதால் - எமோ­னல் பிளாக் அவுட் என்ற  மனநிலையில் இருந்து நாம் விடுபடுகிறோம்.

பஜ்ருத் தொழுகை - கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதாக உள்ளது என நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.  தொழுகையில் எத்தனை மருத்துவ சிகிச்சைகள் உள்ளன! உங்களுக்கு நீங்களே மருத்துவர் என்று நினைத் திருக்கிறீர்களா? ஆம்! தொழுகையில் அத்தனை மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.

1.  ஒளு செய்வது - நீரியல் மருத்துவம். Vozu a Hydrotherephy (or) Water Cure

 

2.   தொழுகை - ஒரு மனப்பயிற்சி. Prayer A Medittation.

3.  தொழுகை - ஒரு ரிப்ளக்பொலஜி மருத்துவம்.  Reflexology in Prayer 

4.  தொழுகை - உங்களுக்கு அக்குபிர­ர் அளிக்கிறது.  Acupressure in Namaz

5.  தொழுகை - சிறந்த உடற்பயிற்சி. Islamic Prayer, as an Exercise 

மேற்சொன்ன அத்தனை சிகிச்சை முறைகளின் விரிவான விளக்கத்தைப் படங்களுடன் நான் வெளியிட உள்ள தொழுகை மருத்துவம் - நூலில் வெளியிட உள்ளபடியால் சுருக்கமான இந்த மருத்துவக் கட்டுரையில்.  வாசகர்களுக்கு விவரிக்க முடியவில்லையே என்ற மனக் குறையுடன் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். தொழுகைக்குப் பின்பு - செய்யும் திக்ரு - பிரார்த்தனை மருத்துவமாக செயல்படுகிறது. அல்லாஹ்வின் 99 திருநாமங்கள், (இறைவனின் திருப்பெயர்கள்) அவரவர் விருப்பப்படி ஒன்றைத் தேர்வு செய்து - அறிவியல் பூர்வமாக திக்ரு செய்யலாம்.

மனதை அலையவிடாமல் ஒரே ஓசையுடன், ஒரே பாவத்துடன் உச்சரிப்பதை ஆங்கிலத்தில் (ளீஜுழிஐமிஷ்ஐஆ)  என்பார்கள். சாதாரணமாக வினாடிக்கு 14 சுற்றுக்கள் (Cycle) மேலிருக்கும் நமது மூளையின் அதிர்வலைகள், ஒரே சொற்றொடரை உச்சரிக்கும் போது சுமார் 7 சுற்றுக்கள் உள்ள அதிர்வலைகளாக குறைகின்றன.  மனம் அமைதி அடைகிறது.

ஹார்வேர்டு மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் டாக்டர் பென்சன் யஹர்பர்ட் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்!  இஸ்லாமியர்கள் செய்யும்  திக்ரு (ரீஷ்வr) விர்து (Vஷ்rd) வழீஃபா (ஸழிகுஷ்க்ஷூழி)  போன்றவைகளை தினமும் காலை - மாலை 20 நிமிடங்கள் செய்து வருகிறார்கள்.  இதன் காரணமாக, இவர்கள் உடலில் மன இறுக்கத்தைக் (றீமிreவிவி) குறைக்கும் அட்ரீனல் ஹார்மோன் குறைவதால் - மன இறுக்கம் குறைகிறது - இது இதயத்திற்கு அமைதியைத் தோற்றுவிப்பதால் இரத்த அழுத்தமும் குறைகிறது என்கிறார். பிரார்த்தனை  செய்பவர்களின் மனது - ஒரு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள் செய்யும் காரியங்களில் ஒரு தெளிவு ஏற்படுகிறது.  ஒருவித நிதானம் மனதில் நிலவுகிறது என்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்!

தொழுகையின் உடல்நலப் பலன்களைப் பார்த்தோம்

இதற்கு விலை இல்லை (No cost)

மருந்தில்லை (No Drug)

பக்க விளைவுகள் இல்லை (No side Effect)

வலி இல்லை (No Pain)

எனவே தொழுகை சிறந்த மருத்துவமாகத் திகழ்கிறது.

நன்றி: இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் வெளியிட்ட ஆய்வு மாலை.