சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷ்ம்ஸுல்வுஜூத் ஜமாலிய்யாஅஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்களின்
76 வது உதயதின விழா
நமது உயிரினும் மேலான சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகுநாயகம் குத்புஸ்ஸமான், ம்ஸுல்வுஜூத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்களின் 76 - ஆவது உதய தின விழா, திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகத்தில் - சங்கைக்குரிய குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயகம் (ரலி) அவர்களின் நினைவரங்கத்தில் 02.10.2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
விழாவுக்கு சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மெளலானா அல்ஹாதி அவர்கள் தலைமை தாங்கினார்கள். நமது ஷைகு நாயகமவர்களின் கலீபாக்கள் முன்னிலை வகித்தார்கள். மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரியின் பேராசிரியர் மெளலவி. ஹி. முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய் கிராஅத் ஓதினார். மாணவர்கள் ஸத்தார்கான் ஹக்கிய்யுல் காதிரிய், பீர்முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் வஹ்தத்துல் வுஜூத் பாடலைப் பாடினார்கள். கல்லூரி முதல்வர் ஜனாப். மக்தூம்ஜான் ஹக்கிய்யுல் காதிரிய் வரவேற்புரை ஆற்றினார்.
சங்கைமிகு ஸய்யித் மஸ்ஊத் மெளலானா அல்ஹாதி அவர்களின் தலைமையுரையோடு விழாச் சொற்பொழிவுகள் தொடங்கின. கண்ணியத்திற்குரிய ஸய்யித் அலி மெளலானா அவர்கள், தலைமை கலீபா க்ஷி.னி. ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் (சென்னை) , கலீபா.னி. சிராஜுத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் (திருச்சி), கலீபா. முஹம்மது காசீம் ஹக்கிய்யுல் காதிரிய் (பெரம்பலூர்), கலீபா. ஆலிம்புலவர். றீ. ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பஈ (திண்டுக்கல்), தியாகி. முஹம்மது ராவுத்தர் ஹக்கிய்யுல் காதிரிய் (திருச்சி),கலீபா. முஹம்மது காலித் ஷா ஹக்கிய்யுல் காதிரிய் (மதுக்கூர்), கலீபா. அட்வகேட். பு.ஹி. னி. லியாகத் அலி ஹக்கிய்யுல் காதிரிய் (மதுக்கூர்) ஆகியோர் சொற் பொழிவாற்றினார்கள். நிறைவாக, ஜனாப். மூ. முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் நன்றியுரை ஆற்றினார். சொற்பொழிவுகளுக்கு இடையிற் சோபனமாய் கலீபா. அட்வகேட். அப்துர் ரவூப் ஹக்கிய்யுல் காதிரிய் - ஆலிம்புலவர். நபிபுகழ்ப் பாக்களையும் ஞானப் பாடல்களையும் பாடினர். விழா நிகழ்வுகளை தமிழ்மாமணி. மெளலவி. ஹி. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் தொகுத்து வழங்கினார்.
சங்கைமிகு ஷைகு நாயகமவர்களின் உதயதினமான இந்நன்னாரில். அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை சார்பாக, நமது சபையில் உள்ள முரீதுப் பிள்ளைகள் சிலருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. ஷைகு நாயகம் அவர்களின் உயரிய புனித ஆக்கங்கள் அனைத்தும் மதுரஸா வளாகத்தில் விற்பனைக்காக ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
சங்கைமிகு ஷைகு நாயகமவர்களின் உதயதினமான பெருநாளை முன்னிட்டு, நமது மதுரஸா வளாகத்தைப் போன்ற மினியேச்சர் அமைப்பை, குலாம் கலீல். ஜனாப். அக்பர் அலி ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய், மெளலவி. V. னி. ஜாபர் அலி ஆலிம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய். மெளலவி முஹம்மது ஹஸன் ஆலிம் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய் ஆகியோரின் வழிகாட்டலின்படி மதுரஸா மாணவர்கள் சத்தார்கான், யூசுப்கான், இப்றாஹீம், முஹம்மது, ஹக்கீம் பாஷா, அப்துல் ஹக்கீம், உமர் கய்யாம், பீர் முஹம்மது, ஆ´க் மெளலானா, பு. சையது இப்ராஹிம், முஹம்மது யூனுஸ், முஹம்மது காலித், முஹம்மது ஹாரிஸ், ராஜா முஹம்மது, அனீஸ் அஹ்மத், நூர் முஹம்மது ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நமது மதுரஸா மினியேச்சர் அமைப்பு ஆச்சரியத்தையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. விழாவுக்கான வீடியோ ஏற்பாட்டிற்கும், மினியேச்சர் அமைப்புக்கும், புதிய ஸ்டேஜ் அமைப்பிற்கும் தேவையான உதவிகளை குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஆத்ம சகோதரர்கள் முஹம்மது மீரான்,நத்ஹர்ஷா மற்றும் முரீதுப் பிள்ளைகள் செய்திருந்தனர்.
விழா நிறைவாக, அனைவருக்கும் கந்தூரி உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு மதுரஸாவிற்கு அருகில் அமைந்துள்ள சாந்திவனம் மனநலக் காப்பகத்திற்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் தமிழகமெங்குமிருந்தும் முரீதுப் பிள்ளைகள், அஹ்பாபுகள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.