• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 » ​இரண்டறக் கலத்தல்

இரண்டறக் கலத்தல்”என்றால் என்ன

இரண்டறக் கலத்தல் என்பதுபரிபூரண எண்ணத்தால்,நினைவால், அறிவாற்றலால் உண்டாவது. உடல் மறைவதுமட்டுமல்ல.  உடலை அழித்துக் கொள்வதுமட்டுமல்ல.

உடலும் உயிரும் எப்படிக்கலந்திருக்கிறதோ பனிக்கட்டியும் நீரும் எப்படிக் கலக்கிறதோ அப்படிக் கலப்பதே“பனாவும்” இரண்டறக் கலத்தலுமாகும் “மூதூ கப்லல் மவ்த்” எனும் எமது ஆருயிர்பெருமானார் வாக்குத்தான் இது.

 

துறவெனப்படுவது யாது ....?

 

துறவு என்பது உலகத்தோடு ஒட்ட ஒழுகவாழ்ந்து இறையின்பால் அயரா இன்பமும் ஆசையும் விருப்பும் கொண்டு இறையோடு இரண்டறக்கலத்தலெனும் மோட்சமாகும்.  உலகத்தோடொட்டவாழ்ந்த போதும் உலகாசை நீக்கி இறையில் லயித்தல் துறவிற் சிறந்த துறவாகும்.  சேற்று மீன் சேற்றினுள்ளிருந்தாலும் அதன்மேற்சேறு படியாது. நீரின் மேலிருக்கும் தாமரையிலை மேல் நீர் படியாது.  ஓடும் புளியம் பழமும் ஒன்றாயிருப்பினும்நெருங்கிய தொடர்பிராது.

இத்தகைய உதாரணங்கள் உண்மைத்துறவு என்பது யாது என விளக்கும்.  மெளனவிரதம் சாதித்தல் எனக்கூறி வாய்மூடிப் பேசாதிருத்தலும்
, பித்துப்பிடித்தவர் போல் பாதை வழியே சுற்றித் திரிதலும், இகத்தைமறந்து மயக்க நிலை பூண்டவர் போல் மக்களைப் புறம்பே தள்ளி வனவாசம் புகுதலும்பிச்சைப் பாத்திரமேந்திப் பாதை வழியே திரிதலும் நெட்டை மேலங்கி தரித்துத்தலைக்குப் பருத்த தலைப்பாகை யணிந்து உருத்திராக்க மாலை கையிலேந்தி ஜபம் செய்வதும்,தந்திரம் செய்தலும், தன்னுருவத்தைமாற்றி பாசாங்கு செய்தலும் உண்மைத் துறவாகாவென்பதை அறிக.

ஏகனையறிந்து
, தன்னிலைதேர்ந்து, முன்னிலை உணர்ந்து, உடல்,பொருள், ஆவி அனைத்தையும் ஏகனுக்குத் தியாகம்செய்து தன்னிலை நிற்பதே உத்தமத் துறவாகும்.

 

மனிதன் எங்கிருந்து வந்தான் ? அந்த இடம்எது? என்பதனை அறிந்து அந்த இடம் செல்ல முயல்வதே; அதாவது செல்லுமிடம் பற்றி அறிந்து, அங்குதுன்பமின்றிப் போய்ச் சேரும் வழியறிதலே ஹக்கை அடையச் செய்யும் தியாகம்.  ஹக்கை அடைதல்  என்பது அவ்வுலகம் சென்றுஅடைதல் மட்டுமல்ல. இங்கேயே  அடைதலுமாகும். 

 

அனைத்துமான அமைவாகி

      அவற்றிற் கலந்த அமைவேகி

தினைத்துணை தானும் பிரிவிலதாய்

      தெளிவுற விரவிக் கலந்தாதி

எனுமதன் அந்தம் இவையில்லா

      எதிலும் எங்கும் பிரிவில்லா

குணகுறை யில்லாநிறைந்தியங்கும்

      குணத்தஏக சின்மயமே.

 

 

(சங்கைமிகு செய்கு நாயகம்அவர்கள்)