• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 »  மலைகள் !

அல்குர்ஆனில் அறிவியல்

 

 மலைகள் !


தகவல் : A.M.J. ஸாதிக், B.B.A., திருச்சி 

 

மண்ணியல் பற்றிய அறிவியலில், மடிப்புகள் (Folding) எனும் இயற்கை நிகழ்வுமிக அண்மையில் அறியப்பட்ட ஒரு புதிய கண்டுபிடிப்பாகும்.  மலைத் தொடர்கள்  (Mountain Ranges) உருவாக  இந்தமடிப்புகள் முக்கியக் காரணமாய் அமைந்துள்ளன. 

நாம் வாழும் இப்புவியின்மேற்பகுதி (ஓர் ஆமையின் மேலோட்டைப் (Shell)  போன்று) கடினமாகஅமைந்துள்ளது.  ஆனால் பூமியின் ஆழத்தில்உள்ள கீழடுக்குகளோ (Layers) மிகவும் வெப்பம் நிறைந்ததாகவும், திரவ நிலையிலும்உள்ளன.  எனவே, இங்குள்ளஇடம் எவ்வுயிரினமும் வாழத் தகுதி படைத்ததன்று. 

இன்னும் உயரமான மலைகளின்உறுதிமிக்க, ஸ்திரத்தன்மைக்குமலைகளுக்கிடையே காணப்படும் மடிப்புத்தடங்கள் (Folding) ஓர் முக்கியஇணைப்பாய் விளங்குகின்றன.  ஏனெனில், மலைகளைஉள்ளடக்கி நிற்கும் மேடுபள்ளங்களுக்கு அடித்தளம் அமைத்துத் தருவதே இந்த மடிப்புத்தடங்கள் (Folding) தாம். புவியின் மத்தியரேகை (Radius) அல்லது ஆரைகிட்டத்தட்ட 3,750மைல்கள் வரை விரிந்து செல்கின்றன. நாம் வாழும் புவியின் மேலோடு மிகவும் மெல்லியதாகஅமைந்திருப்பதோடு, அந்த மேற்பரப்பு  ஒரு மைல் முதல் முப்பதுமைல்கள் தூரம் வரை அடர்த்தித் தன்மை கொண்டதாய் அமைந்துள்ளது என மண்ணியல்நிபுணர்கள் வரையறுத்துக் கூறுகின்றனர். புவியின் இம்மேற்பகுதி அடர்த்தி குறைந்துமிக மெல்லியதாய் அமைந்திருப்பதால், புவி அதிர்ச்சிக்குள்ளாகும் சாத்தியம்உண்டு. இந்நிலையில், மலைகளே முளைக்கம்புகளைப் போன்றுசெயல்பட்டு, பூமியின் மேலோட்டை ஆடாமல், அசையாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதோடு, அப்புவியின்மேற்பகுதிக்கு உறுதிமிக்க திட நிலையை அளிக்கின்றன.


கீழே இடம்பெறும் திருக்குர்ஆன்வசனம் இந்தப் புவியியல் விளக்கப்படம் குறித்து எடுத்துரைக்கின்றது :


“நாம் இப்பூமியை விரிப்பாகஆக்கவில்லையா ? இன்னும்,மலைகளை முளைகளாக ஆக்க வில்லையா?                                    

(சூராஅந்நபா:  வசனங்கள் 6-7)


இங்கு ‘அவ்தாத்’ எனும்அரபுச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதுபாலை மணற்பரப்பில் கூடாரம் அடித்திட அரபிகள் பயன்படுத்தும் முளை அல்லது ஆப்பை(Stakes or Peg) குறிக்கும் சொல்லாகும். மடிப்புத் தடங்களைப் பிடித்து வைத்திருக்கும் ஆழமான அடிக்கல்களாய்த்திகழ்கின்றன.   புவி (Earth) என்னும்தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ள புத்தகமானது  உலகின் பல்வேறுபல்கலைக்கழகங்களில் மண்ணியல் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் முக்கியக்குறிப்பு நூலாய்  இடம்பெற்றுள்ளது.  இந்நூலின் ஆசிரியர்களில் ஒருவரான ஃபிராங் பிரஸ்(Frank Press) என்பவர் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடத்தின் (Academy of Science) தலைவராகபன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றி இருப்பதோடு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  ஜிம்மி கார்டரின் (Jimmy Carter) அறிவியல்ஆலோசகருமாவார்.


இப்புவி நூலில் மலையை அவர்மரத்தைப் பிளக்கும் V வடிவ கருவியின் (Wedge) வடிவத்தோடுஒப்பிட்டு விளக்கியுள்ளார். முழுமையானதோர் அமைப்பின் ஒரு மிகச்சிறிய பகுதியாகவேமலைகள் காணப்படுவதாகவும்,அவற்றின் வேர்கள் (Roots) பூமிக்குள் ஆழமாக ஊடுருவிநிற்பதாகவும் எடுத்துரைத்துள்ளார். டாக்டர் ஃபிராங் பிரஸ்ஸின் கூற்றுப்படிபூமியின் மேலோட்டை உறுதிமிக்கதாக வைத்திருப்பதில் மலைகள் முக்கிய பங்குவகிக்கின்றன.  பூமி ஆடாமல் அசையாமல்,நிலையாக நிற்பதற்கு மலைகள் ஆற்றும் முக்கியப் பணி  குறித்து திருக்குர்ஆன் மிகத் தெளிவாய்எடுத்துக் கூறுகின்றது.


இன்னும் இப்பூமி(மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம் ; அவர்கள்நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும்அமைத்தோம்.  

சூரா அல்அன்பியா:    வசனம்31

 

 

திருக்குர்ஆனின் இவ்வநணனையைநவின மண்ணியல் தகவல் களஞ்சியத்தோடு ஒப்பிடுகின்ற போது, முற்றிலும்பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.


உறுதியாக ஊன்றப்பட்ட மலைகள்:

பூமியின் மேற்பரப்பு கடினமான (Plates) தட்டுகளாக பல்வேறுபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்தட்டுகளின் அடர்த்தி கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் அளவு கொண்டவை.  இந்தத் தட்டுகள் பாதி உருகிய, திரவப்பாகானநிலையில் பூமியின் அடியிலே மிதக்கின்றன. பூமியின் இப்பிரதேசத்தை அல்லது பகுதியை ஆங்கிலத்தில் ‘எஸ்தனோஸ்ஃபியர்’ (Aesthenosphere) என்றுஅழைப்பர்.  இந்தப் புவித் தட்டுகளின்எல்லையில்தான் மலைகள் உருவாகின்றன என்கின்றனர். சமுத்திரங்களுக்குக் கீழுள்ள புவி மேலோட்டின் அடர்த்தி 5 கிலோ மீட்டர்அளவும், தட்டையான,கண்ட மேற்பரப்புகளுக்குக் கீழ் கிட்டத்தட்ட 35 கிலோ மீட்டர் அளவும்,பெரும்பெரும் மலைத்தொடர்களின் கீழ் (Continental Surfaces) கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் அளவும் கொண்டதாய் அமைந்துள்ளது. இந்த உறுதிமிக்க அடித்தளங்களின் மீதேமலைகள் எழுந்து நிற்கின்றன.  உறுதிமிக்க மலையின் அடித்தளங்கள்(Mountain Foundations) குறித்தும் பின்வரும் திருக்குர்ஆன் வசனம் பேசுகின்றது.      

                                              

அதில் மலைகளையும் அவனேநிலைநாட்டினான்

.                                                                                                                             சூரா அந்நாஜிஆத் : வசனம் 32