• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 »  ஏகாந்த விடி விளக்கம்!

ஏகாந்த விடி விளக்கம்!


ஆஷிகுல் கலீல் B.com.,  திருச்சி




கலீல்அவ்னை நாம்அழைத்தால்

கதிமோட்சம் கிடைத்துவிடும்

கலீல் நாதர் பாதங்களே - உள்ளக்

கறை நீக்கும் போதங்களாம் !!         (கலீல்)


உள்ளத்தில் அவர் உருவம்

உதித்தாலே மோனமதாம் !

எண்ணத்தில் அவர் நினைப்போ

ஏகாந்த விடி விளக்காம் !             (கலீல்)


ஒன்றென்னும் உயர் ஞானம்

வென்றெடுக்க வாரீரோ ...

என்றென்றும் நபி நேசம்

கண்குளிரக் காணீரோ ...!              (கலீல்)


ஹக்கென்றும் கல்கென்றும்

பிரிவில்லை இனி நமக்கு !

கடல் என்றும் அலை என்றும்

இரண்டுண்டோ நீ கூறு ?                (கலீல்)


தெளிவாக ஞானமதை

தெரிந்தாலே நீ மனிதன் !

ஞானம் இல்லை என்று சொன்னால்

ஐயம் இல்லை நீ மிருகம் !                  (கலீல்)


எந்நாளும் கலீல் நாதர்

எம்முயிரைக் காப்பாரே !

எங்கேனும் நானிருந்தால்

எம்முடனே வாழ்வாரே !              (கலீல்)

 

 

(அல்லாவை நாம் தொழுதால்....எனும் இசை.)