ஸஹாபாப் பெண்மணிகள்
அன்னை கதீஜா நாயகி (ரலி)
என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்! என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் என்று கூறினார்கள். கதீஜா (ரலி)அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் நபி யவர்கள், நடந்த சம்பவத்தை விளக்கினார்கள். பின்னர்தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் தமது கணவருக்கு மிகஅழகான முறையில் ஆறுதல் கூறி மனதைரியத்தை ஊட்டினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் கூறிய வார்த்தைகள் வருமாறு:
அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்.(சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்என்று கூறி பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள். அதுமட்டுமல்ல; அந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன வென்பதைக் கேட்டறிய வேண்டும் என்பதற்காகத்தமது தந்தையின் சகோதரர் வறகா பின் நெளபல் என்பவரிடம் சென்று கேட்டறிந்து கொள்ளலாம்என்று ஆறுதல் கூறினார்கள். ஏனெனில் அவர் இன்ஜீல்வேதத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிறிஸ்தவர். எனவே, கதீஜா (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்ற நபி (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களுடன் வறகா பின் நெளபல் என்பவரிடம் வந்து நடந்ததை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் முஹம்மதிடம் வந்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். முஹம்மதை அல்லாஹ் தனது தூதராகத் தெரிவு செய்துள்ளான். உங்களை மக்கள் ஊரைவிட்டு வெளியேற்றுவார்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,எனது கூட்டத்தினர் என்னையா வெளியேற்றுவார்கள்? என்று வியப்புடன் கேட்டார்கள். அதற்குஆம்! அப்போது நான் உயிரோடு இளைஞனாக இருந்தால் உங்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவிடுவேன்என்று கூறினார். (புகாரி : 3, அறிவிப்பவர் ஆயிஷா (ரலி). (வரகா அவர்கள் சிறிது காலத்தில் இறந்து விட்டார்கள்)
அச்சத்துடனும் திடுக்கத்துடனும் வீடு திரும்பிய கணவரை அன்போடுஆறுதலளித்து அரவணைத்து நின்ற விதத்தை இன்றைய பெண்கள் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். தன்னைப் போர்த்திவிடுமாறு கூறியபோது, ஏன், எதற்காக, உங்களுக்குஎன்ன நடந்தது என்று பதறியடித்துக் கொண்டு அதிரடியான கேள்விகளைத் தொடுத்து நபிகளாரைத்திக்குமுக்காடச் செய்யாது பதற்றம் நீங்கும்வரைநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்த்திவிட்டு ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தார்கள்.
தமது பதற்றம் நீங்கிய பின்னர் தாமாகவே தமக்கு என்ன நடந்தது என்றுகூறும் வரை பொறுத்திருந்து சூழ்நிலையறிந்து நடந்து கொண்ட விதம், தன் கணவர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குஎடுத்துக் காட்டாகும்.
தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அஞ்சுவதாகக் கூறியபோது அவர்களிடம் காணப்பட்ட அருங்குணங்களையும் நல்லறங்களையும் சுட்டிக்காட்டிய விதமானது, அன்னை கதீஜா (ரலி)அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் மரியாதையையும்தெளிவுபடுத்துகின்றது.
கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டான் என்று ஆணித்தரமாகக் கூறியது அன்னாரது இறைநம்பிக்கைக்குப் பெரும் சாட்சி.
இந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன என்பதை அறியத் தம்கணவரைவேதம் அறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றது கதீஜா (ரலி) அவர்களின் அறிவின் ஆழத்தைத் தெளிவாகக்காட்டுகிறது. ஏனெனில், தன் குடும்பத்தில், சமுதாயத்தில், தனக்குநெருக்கமான, நம்பிக்கையான எத்தனையோ பேர் இருந்தும் வேதமறிந்தஒருவரிடம் அழைத்துச் சென்றது நிகழ்வின் யதார்த்தத்தை ஓரளவு புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் அறிவும் கதீஜா (ரலி) அவர்களிடம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது. இந்நிகழ்ச்சியின் பின்னர் முஹம்மத் நபிஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இறைத்தூதர் என்னும்உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். எனவே, முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லமவர்களை இறைத்தூதர் (நபி) என ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணியாகத் திகழக் கூடியவர்கள்,அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களே!
(அன்னையின் மகிமை இன்னும் தொடரும்)