• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 »  கலீபா பெருந்தகைகள்

தொடர்.... 


தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு கலீபா பெருந்தகைகள்

 மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி

 

 

எமது பாட்டனார் வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள், எனது கல்லூரிப் பருவத்தில் எனக்குக் கூறிய ஓர்இரகசியம் - “உனது வாழ்க்கையைத் திருப்பிப் போடக்கூடிய அதிசயம். ஹள்ரத் மஹானந்தபாபாரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே தொடங்கும்... ஏனென்றால், எனக்கும்அன்னவர்களிடமிருந்தே தான் தொடங்கியது... பொறுத்துப் பார்!” என்றார்கள்.


அப்போது அறியாத வயது; புரியாத மனசு .... எப்படி இது சாத்தியம்? என்பதனை என்னால்உணர்ந்து கொள்ள முடியவில்லை! கல்லூரிப் பருவம் கலகலப்பாகச் சென்று கொண்டிருந்தது !காலமும் உருண்டோடியது! யஹளதிய்யாவில் ஓதி முடித்து, சென்னை ஜமாலிய்யாஅறபுக் கல்லூரியில் தஹ்ஸீல் வகுப்பில் ஓதி முடிக்கும் தருவாயில் மஞ்சள் காமாலை நோய்ஏற்பட்டதால் இறுதித் தேர்வு எழுத முடியாமல் மதுரஸாவிலிருந்து வெளியேறி சில மாதங்கள்ஓய்வு எடுத்துவிட்டு, சென்னை கிழக்குத் தாம்பரத்தில்  மஸ்ஜிதுர் ரஹ்மானிய் யாவில் இமாமாகப் பணியைத் தொடங்கினேன்.  (அதுவரை பாட்டனார் வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் கூறியதொன்றும் நடைபெறவில்லை) பின்னர்சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இராமநாதபுரம் மண்டபம் என்னும் ஊரில் இமாமாகப் பணியாற்றியபோது தான் எமது பாட்டனார் வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் கூறியது அமலுக்கு (செயல்பாட்டிற்கு)வந்தது !


கீழக்கரையில் அடக்கம் பெற்றுள்ள ஹள்ரத் மஹானந்த பாபா (ரலி) அவர்களின்கந்தூரி விழாவிற்கு மண்டபத்திலிருந்து 3 ஆண்டுகளாகச் சென்று வந்தேன்.  4 ஆம் கந்தூரிக்குச் செல்ல அனுமதி பெறுவதற்காக எமதுபள்ளி டிரஸ்டி அல்ஹாஜ் முஹம்மது அப்துல் காதிர் ய.ளீலிது.,  மரைக்காயர்அவர்களைச் சந்தித்தேன் !


ஓர் ஆலிமாக இருந்து கொண்டு எப்படிக்  கந்தூரிக்குச் செல்லலாம் ? என்றார் மண்டபம் மரைக்காயர்.  ஆலிம்கள் தாம் செல்ல வேண்டும்.  அப்போது தானே மக்களும் அங்கு செல்வார்கள்! நான்என்ன.... மாநகர டவுன்காழி, கீழக்கரை தலைமை கதீப், அரூஸிய்யா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உட்பட திண்டுக்கல்,மதுரை போன்ற நகரங்களிலிருந்தும் நிறைய பெரிய ஆலிம்கள் இக்கந்தூரிக்குவருகின்றார்கள்என எடுத்துச் சொன்னேன்.நீங்கள் மஹானந்த நாயகரைக் கண்டதுண்டா?” என்றார் மண்டபம் மரைக்காயர். இல்லை... நான்கண்டதில்லை.  எனினும் எமது பாட்டனார் (வலிய்யுல்அஹ்ஸன்) அவர்கள் மஹானந்த நாயகரின் உண்மைச் சீடராக விளங்குவதால் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும்தொடர்ந்து கந்தூரிக்கு வருகின்றார்கள்; நானும் கடந்த 3 ஆண்டுகளாக(தங்களிடம் அனுமதி பெறாமல்) உதவி இமாமிடம் கூறிவிட்டுச் சென்று வந்தேன்... என்றேன்.


அப்போது மண்டபம் மரைக்காயர் கூறினார் : எனது தந்தை மஹானந்த பாபா(ரலி) அவர்களிடம் நெருங்கிப் பழகி வந்தார்கள். ஒருமுறை எனது தந்தை, மஹானந்த பாபா(ரலி) அவர்களிடம், “வாப்பா! எனக்கு அல்லாஹு தஆலா நிறைய சொத்துக்களைக்கொடுத்துள்ளான். 6 பெண்மக்களும் உள்ளனர்.  ஆனால்எமது சொத்துக்களைக் கட்டிக் காக்க   ஓர் ஆண்குழந்தைஇல்லையே... என்பது தான் எனக்கு மிகப் பெரும் கவலையாக உள்ளது... என்றார் !


அதற்கு மஹானந்த பாபா நாயகமவர்கள், எனது பெயரை வைப்பதாக நிய்யத் செய்து கொள்...உனக்கு அடுத்து ஆண்குழந்தை தான் பிறக்கும் என்றார்கள்.  அதன்படியே எனது வாப்பாவும் நிய்யத் செய்து கொண்டார்களாம்!அதன்படி பிறந்தவன் தான்... நான்! எனது பெயரும் அன்னவர்கள் பெயர் தான் (முஹம்மது அப்துல்காதிர்). அதற்குப் பின் பள்ளி, கல்லூரி காலங்களில் விடுமுறையின் போது மஹானந்த பாபா நாயகமவர்களைச் சந்திப்பதற்கு என்னையும் எனதுதம்பியையும் எனது வாப்பா அழைத்துச் சென்று விடுவார்.  அன்னவர்களை துஆச் செய்யச் சொல்வார்.  ஆனால், எனது தந்தை மறைவிற்குப் பின்னர் நான் மஹானந்தபாபா (ரலி) அவர்களைச் சந்திப்பதை விட்டு விட்டேன்.  காரணம், மஹானந்த பாபா (ரலி)அவர்களைப் பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அன்னவர்களின் நடத்தை சரியில்லை (நஊது பில்லாஹி) என்று கூறி முடித்ததோடு,எங்கள் பள்ளி இமாம் என்ற முறையில் நீங்கள் அன்னவர்களின் கந்தூரிக்குச்செல்வதில் எனக்கு விருப்பமில்லை; உடன்பாடும் இல்லை. அப்புறம்உங்கள் இஷ்டம் என்று கூறி விட்டு சட்டென எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டார்.


நானோ (அந்த இளம் வயதில் அல்லாஹ்வின் அருளால் மனம் தளராமல்) கந்தூரிக்குச்சென்று வந்தேன்.  பின்னர், மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் சங்கைமிகு வாப்பாநாயகம் அவர்களுக்கு விரிவாக கடிதத்தில் எழுதினேன்.  அதற்கு சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள், “மஹானந்த பாபா நாயகம் (ரலி) அவர்களை மோசமாகப் பேசியவரின் பள்ளியில் நீங்கள்வேலை பார்க்க வேண்டாம்..திண்டுக்கல்லிற்குச் செல்லுங்கள்... அங்கு உங்களுக்கு ஒரு வேலைஉண்டு !” என்று பட்டோலையில் அருளியிருந்தார்கள்.


அதன்படி 6 மாத காலப் போராட்டத்திற்குப் பின் திண்டுக்கல் வந்துஸமதிய்யாப் பள்ளியில் பணியில் இணைந்து, காந்தி கிராமப்பல்கலைக் கழகத்தில் அறபு மொழி ஆசிரியராகவும் பொறுப்பேற்றேன்! பின்னர் சங்கைமிகு வாப்பாநாயகமவர்களின் கண்மணிகளில் ஒன்றான “மறைஞானப் பேழையில்” உதவி ஆசிரியராகப் பணி நியமனம்  பெற்றேன் !

ஆம்! சங்கைமிகு ஷைகு நாயகமவர்களின் அருட்பேழையில் சேவை செய்யத்தொடங்கிய பின்னர் தான் எனது வாழ்வுமுறை, எண்ணம், மனோநிலை, அறிவு போன்ற அனைத்துநிலைகளும் முன்னேறத் தொடங்கின !


 தயவு கூர்ந்து இக்கட்டுரையின்முதல் வரியை மீண்டும் ஒருமுறை அவதானியுங்கள் :


“உனது வாழ்க்கையைத் திருப்பி போடக் கூடிய அதிசயம் ஹள்ரத் மஹானந்தபாபா நாயகமவர் களிடமிருந்தே தொடங்கும்...”    

 

(அதிசயங்கள் தொடரும்)