• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai» 2012 » Nov 2012 »  ஞானத் துளிகள்

     ஞானத் துளிகள்
தொகுத்தவர்: - திருமதி G.R.J. திவ்யாபிரபு  I.F.S., சென்னை

 

இறைவனை நாடுகிற நீ அவரை மானுடசொரூபத்தில் காண முயல்,மானுட சொரூபத்தில் அவர் வியாபகமாவது போன்று வேறு எதிலும்வியாபகமாவதில்லை.


பலவே­க்காரன் ஒருவன் ஒரு தடவைமுற்றுந் துறந்தவனாக வே­ம் போட்டுக்கொண்டு வந்தான்.  அவன்நடித்ததைப் பார்த்துத் திருப்தியடைந் தவர்கள் சன்மானமாக ஒரு ரூபாய்கொடுத்தார்கள்.  ஆனால் அதை அவன் ஏற்றுக்கொள்ளாது போய்விட்டான்.  பின்பு வே­த்தைக் கலைத்து விட்டுவந்து ரூபாயைத் தரும்படி வேண்டினான்.  ‘ஏன்நாங்கள் சன்மானம் அளித்தபொழுது அதையேற்று எங்களைக் கெளரவப்படுத்தாது போய்விட்டுஇப்பொழுது வந்து அதை வேண்டுமென்று கேட்கிறாய்?’ என அவர்கள் வினவினார்கள்.  ‘நான் துறவி வே­த்திலிருந்த பொழுதுசன்மானத்தை ஏற்பது பொருந்தாது’ என அவன் விடை விடுத்தான்.  ஆக, அவன் நடந்து கொண்டது முற்றிலும் முறையானது.  அதே விதத்தில் நாயகன் மானுட வே­ந்தாங்கி வருகிற பொழுதுமானுடனாகவே நடந்து கொள்கிறார்.


பரம்பொருளை அடையப்பெற்றவன் எப்பொழுதும் ஆனந்தத்தில்திளைத்திருக்கிறான்.  தயக்கத்தை அவனிடம்காண முடியாது.

ஆனந்தத்தில் மூன்று விதம்உண்டு.  அவைகள் முறையே வி
­ய ஆனந்தம், சாதன ஆனந்தம்,பிரம்மானந்தம் எனப்படுகின்றன. இந்திரிய சுகங்கள் வி­யானந்தம்.  இறை மகிமையைப் புகழ்ந்து பாடுவதும் பேசுவதும்பாடக் கேட்பதும் சாதன ஆனந்தம்.  பரத்தைஅடைந்து அதில் திளைத்திருப்பது பிரம்மானந்தம்.


கற்கண்டால் செய்த பாகைச் சுவைபார்த்தவன் கருப்பட்டியில் செய்த பாகை ரசிக்கமாட்டான்.  இறைவனிடமிருந்து வருகிற பேரானந்தத்தை ஒருசிறிதளவாவது பக்தன் ஒருவன் ரசித்துவிட்டால் போகத்திலுள்ள சுவையயல்லாம் அவன்உள்ளத்தினின்று அகன்று போய் விடுகிறது.


இறைவனை அடைதற்கு உபாயம் யாது ?  பக்தி ஒன்றே அதற்குற்ற உபாயம்.

பக்தி வேண்டும் என்றுஆசைப்படுவதை உலக ஆசைகளோடு சேர்க்கலாகாது.

உன் மனதை எப்பொழுதும்இறையிலேயே நாட்டி வை,ஆரம்பத்தில் நீ சிரமம் மிக எடுத்துக் கொண்டாகவேண்டும்.  இறுதியில் பேரின்பம் மிகஅனுபவிப்பாய்.


பக்தி பண்ணி இறைவனுடையமதுரத்தை ரசிப்பது ஒன்றே நாம் வேண்டுவது. பக்தியில் மதுரம் உண்டு. பக்தன் தேனீ ; பகவான் தாமரைத் தேன்.


சலவை செய்து வந்த வெள்ளைவஸ்திரம் போன்றது மனது.  வெள்ளை வஸ்திரத்தைஎந்தச் சாயத்தில் வேண்டுமானாலும் தோய்க்கலாம். அதே விதத்தில் நாம் கொடுக்கின்ற பாவனையை மனது எடுத்துக் கொள்கிறது.


கடவுள் மனிதனாக அவதரிக்கிறாரா, இல்லையாஎன்பதைப் பற்றி நீ என்ன கொள்கை உடைத்திருக்கிறாய் என்பது முக்கியமானதல்ல.  கடவுள் பற்று உனக்கு ஏராளமாக இருக்குமாகில் நீஅனைத்தையும் அடையப் பெற்றவன் ஆகிறாய்.


குழந்தை யயான்று காலமாய்ப் போனஅடுத்த தினத்தில் அதன் தாய்க்கு காம உணர்வு ஒரு பொழுதும் வராது.  புத்திர சோகம் காமத்தைத் தலையயடுக்கவிடாது.  அதேவிதத்தில் பக்தி ஓங்குமளவுஇந்திரிய சுகங்களில் நாட்டம் தானாக மறைந்து போகிறது.  விசாரத்தின் மூலம்இந்திரிய நிக்ரகம் பண்ணுவதைவிட எளிதில் பக்தியின் மூலம் இந்திரிய நிக்ரகம்பண்ணலாம்.


பலாப்பழத்தை அரிவதற்கு முன்புகையில் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் கையில் பலாப்பிசின் ஒட்டிக் கொள்ளும்.  உலக வாழ்க்கையில் புகுவதற்கு முன்பு பக்தியில்  ஊறியிருக்கும்படி மனதைச் செய்யவேண்டும்.  இல்லாவிடில் உலகப்பற்று என்னும்பிசின் அதைத் துன்புறுத்தும்.


மனதை ஏகாந்தத்தில் நிலைநிறுத்தி பக்தி என்னும்வெண்ணெயைக் கடைந்தெடுக்க வேண்டும்.  பிறகுஅதை உலக வாழ்வு என்னும் தண்ணீரில் வைத்தால் அதில் கலக்காதுமிதந்துகொண்டிருக்கும்.  முதலில் பக்தியைவளர்ப்பவனுக்கு உலக வாழ்வில் பற்று உண்டாகாது.

(இன்னும் வரும்)