• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 » ​வேண்டாத நண்பன், கொசு !

 வேண்டாத நண்பன், கொசு !

 

 

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோமேலும் அதை விட மிக

அற்பமான தையோ உதாரணமாக்க  வெட்கப்பட மாட்டான்.

                                    (சூரத்துல் பகரா.....)


பெருமானார்  அவர்களுக்கு அருளப்பட்ட திருமறையில் ஈ, கொசு போன்ற உதாரணங்கள் அல்லாஹ்குறிப்பிட்ட போது என்ன? அக்பராகிய மிகப்பெரிய இறைவன் மிகச்சிறியஅற்பமான கொசு, ஈபோன்றவற்றையெல்லாம் உதாரணமாகக்கூறுகிறானே ! வேதத்திற்கு இது தகுமோ ? என்றெல்லாம் மக்காவின் இறை மறுப்பாளர்கள்கேளி செய்த போது அல்லாஹ் அருளிய வசனம் தான் மேலே உள்ளது.

அந்த அறபிகள் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் தாண்டி இக்காலத்தில்வாழ்ந்திருந்தால் கொசுவைப் பற்றி இதுவரை கேவலமாக நினைத்திருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் கொசுவின்திருவிளையாடல் தான் இப்போது நாடெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மலேரியா, சிக்கன்குனியா,யானைக்கால்நோய், மூளைக்காய்ச்சல் இவையயல்லாம்கொசு தந்த கொடைகள் என அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.

பார்க்க சிறிதாக அற்பமாகத்தோன்றும் கொசு மனிதனைப் படுத்தும்பாடு சொல்லுந்தரமன்று ! 

சிறையைப் பற்றி எச்சரிக்கும்போது அங்கு இருக்கும் கொசுக்கடியைப் பற்றித் தான் பயமுறுத்துவார்கள். ஆனால்தமிழகத்தில் இப்போது மின்சாரமின்றி வீடுகளே இருட்டறைச் சிறையாக அனைவரும் கைதியாகமக்களின் இரத்தமெல்லாம் கொசுக்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.

ஒபாமாவாக இருந்தால் கூடஒழுங்கு (கொசு) கடித்தான் அதன்மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது.  கொசு பளிக்க அற்பமான சிறியஉயிரினம் தான். ஆனால் அதற்குள் எத்தனை எத்தனை வகைகள். அதன் திசைச் செயல்கள் ´ப்ம் வைத்துக் கொண்டுகாலையில் ஒரு கொசுக் கூட்டம் இரவில் ஒரு கொசுப்படை அந்தி சாயும் நேரத்தில் ஒருகொசுக்குழு!

மனிதன் அனைத்து உயிர்களையும்வலை வீசிப் பிடிக்கிறான் ஆனால் மனிதனோ கொசுக்களுக்கு அஞ்சி வலைக்குள் ஒளிந்துகொள்வதை பார்க்கிறோம்.

உலகில் இருக்கும் கொசுக்களைமனிதன் எண்ணத்  துணிந்தால் அவன் எண்ணிமுடிக்க முடியாது. கால்குலேட்டர் கம்ப்யூட்டரெல்லாம் கூட அந்த வேலையை செய்துமுடிக்க முடியாது.

அந்த சிறிய உருவத்திற்குள் கண், காது, மூக்கு எக்ஸ்ட்ரா (தும்பிக்கை) என சொல்லி முடிக்க முடியாத அற்ப அமைப்புசுல்ஹானல்லாஹ் கொசுவைப் பற்றிய வி­யங்கள் ஏராளம் ! ஏராளம்! தன் படைப்பின் வலிமையைப் பற்றி படைத்தவனாகிய இறைவனுக்குத் தெரியுமல்லவா ? அதனால் தான்அவன் மேலே உள்ள வசனத்தில் அவ்வாறு கூறுகிறான்.

ஒரு ரகசியம் தெரியுமா
? உங்களுக்கு !

ஆண் கொசுவின் உறை பழச்சாறுகள்போன்றவைதாகும். பெண் கொசுதான் மனிதர்களின் உயிரினங்களின் இரத்தத்தைஉறிஞ்சுகிறதாம். சரிதானே !