தொடர்.......
சங்கைமிகு இமாம் ஷாஃஈ (ரஹ்)
அறபுத் தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகு தமிழில்: கிப்லா ஹள்ரத், திருச்சி.
ஹள்ரத் அபூல் பத்ஹில் புஸ்திய்யீ (ரஹ்) கூறுகிறார்கள்:
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், தகுதியால் மனிதரில் வலுப்பமானவர்கள். தீனுல் இஸ்லாமில் குணபாடு செய்வதால் வல்லபமுடையவர்கள். அவர்களுடைய பாதையோ நீதமாயும் குணமோ உண்மையாயும்அவர்கள் (எழுதும்) மொழியும் (பைத்தோ) கவிதையோ எவரையும் மயக்குவதாகவும் அவர்களின் உதிர்ந்தவிடுசொல்லோ முத்தாயிருக்கும் ! ஆகவே, மனிதனுக்குச் சொல் ! யாராகிலும்ஒருவன், இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் சொல்லை விட்டுவிட்டு அதற்குப்பதிலாக, இமாமவர்களின் பொறாமைக்காரர்களின சொல்லை எடுத்தால் (வாங்கினால்)அவன் ஈத்தமரத்தின் பழத்தை விற்று, அதன் ஓலையை வாங்கிக் கொண்டான்!
ஹள்ரத் ஃபுலைல் இபுனு ஸியாத் (ரஹ்) கூறுகிறார்கள். நான் ஒருமுறைஇமாம் அஹ்மத் இபுனு ஹன்பல் (ரஹ்) அவர்களிடம், தங்களின் பாரதூரமான அறிவின் இரகசியம் என்னவென்று கேட்டேன். அதற்கவர்கள், நீங்கள் என்னிடம் காணும் அறிவடங்கலையும் எனக்கு, அல்லாஹுதஆலா இமாம் ஷாபிஈ இபுனு ஸியாத் (ரஹ்) கூறுகிறார்கள்: இமாம் ஹன்பலி (ரலி) அவர்கள்அடிக்கடி கூறுவார்களாம். பேனா எடுத்து எழுதுவோரெல்லாம் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின்உபகாரம் என்னும் கடன் விதியாகி விட்டது !
ஹள்ரத் ஹன்பல் (ரஹ்) கூறுகிறார்கள்: ஃபிக்ஹுடைய இல்ம் என்பது மூடலாக பூட்டு கொண்டு பூட்டப்பட்டதாகஇருந்தது. அதனை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைக் கொண்டு அல்லாஹு தஆலா திறக்கச் செய்தான்.
ஹள்ரத் இமாம் ஹன்பல் (ரஹ்) கூறுகிறார்கள் : நான் நாற்பது வருடங்களாகஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அல்லாஹ்வே, என்னை மன்னிப்பாயாக! எனது பெற்றோரை மன்னிப்பாயாக; முஹம்மத்இபுனு இத்ரீஸையும் மன்னிப்பாயாக ! மேலும், இமாம் அஹ்மத் இபுனுஹன்பல் (ரஹ்) கூறுகிறார்கள் :- நமக்கு தொழுகையின் உள்பர்ளுகள் (ர்துகள்) வெளிபர்ளுகள்வாஜிபான முஸ்தஹப்பான விஷயங்கள் அனைத்தையும்உயரிய ஹதீதுக ளிலிருந்து ஆராய்ந்தெடுத்து, அவற்றை ஒழுங்குப்படுத்தி நிறைவு படுத்தியஇமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுக்கு துஆசெய்வதில் நான் ஒருக்காலும் பின்வாங்குவதில்லை. (அல்ஹம்து பில்லாஹ்)
(இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைப் பற்றி மேலும் பல அறிஞர்களின் கருத்துக்கோவைகள் அடுத்த இதழில்)