• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 »  மாதாந்திரக் கூட்ட மலர்கள்!

மாதாந்திரக் கூட்ட மலர்கள்!


காரைக்கால் மாதாந்திரக் கூட்டத்தில்

 

கலீஃபா முஹம்மது காலித் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்  ஆற்றிய சிறப்புரை

 

 

மாதாந்திரக் கூட்டம், நாம் ஒவ்வொருவரும் நம்மை வைரம் போல் பட்டை தீட்டிக் கொள்ளவும் ஆத்ம சகோதரர்களாகியநாம் அனைவரும் சந்தித்துக் கொள்ளவுமே நம் ஷைகு நாயகமவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.  இன்சான் காமில் (பரிபூரண மனிதர்) - மகானாக நம் ஷைகுநாயகமவர்கள் திகழ்கிறார்கள்.  பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் இன்று வந்தால் நாம் பறந்து தேடிப் போய் பார்த்தே தீருவோம்.  அதே நபியின் அந்தரங்க நிலையில் நமது உயிரினும் மேலானஷைகு நாயகமவர்களே வந்துள்ளார்கள்.  நபிமார்வலீமார் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டுமல்ல. இறைவனே தன்னை நபியாக வலியாக தேர்ந்தெடுத்துக் கொண்டான் (வெளியாகியுள்ளான்).அன மின் நூரில்லாஹி என்பதன் கருத்து இறையிலிருந்து நூர் வெளியாகியது.  அதாவது இறையே வெளியாகியுள்ளது.  வேறெந்த நபியும் பூரண உண்மையை சொல்லவில்லை. பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பூரண உண்மையை சொன்னார்கள்.  எல்லா மனிதரிலும் அந்த நிலை வெளியாகவில்லை.  நபிமார், குத்புமார்,வலிமாரில் தான் இறையின் அந்நிலை வெளியாகியது. 


பெருமானார் 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏகத்துவத்தை  முறைப்படுத்தி  சீர் செய்தார்கள்.  நாம் செய்த பெரிய பாக்கியம் மகாபெரிய குத்புஜ்ஜமானைஷைகு நாயகமாக அடைந்தது.  குத்புமார், வலிமாரில் சிலர் தான் ஷைகாக திகழ்ந்தார்கள்.  பிறருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள் - திகழமுடிந்தது.  நாம் கற்றதை (குறையறிவை) நீக்கிஷைகிடம் ஃபனாவாக வேண்டும்.  அதாவது குளிப்பாட்டுகிறவன்கையில் மய்யித் இருப்பது போல் ஷைகிடம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.  இரஸூலின் தன்மையே ஷைகு - இறையே குருவாய் இலங்கிநிற்கின்றது.  உடலளவில் அவர்கள் நம்மைப் போன்றிருந்தாலும்அவர்களில் பிரபஞ்சம் முழுமையும் உள்ளது.  இறையையும்குருவையும் ஒன்றாக்கிடு. அக்கனியை உண்ண வேண்டாம் என்பது மறை வேதத்தின் வெளிப்படை. இணையயன்னும்நிலையை நெருங்காதே என்பது மறைத் தத்துவம்! வெளிரங்க உலமாக்களுக்கு குத்புமார்கள் தங்களைமறைத்துக் கொள்வார்கள்.   இறைவனையறியாதவரை ´ர்க்கிலிருந்து மீளமுடியாது.  குர்ஆன்ஹதீஸின் குர்ஆன் - கடல்; அலை. ஹதீஸே குத்ஸி- பனிக்கட்டிநீர்.   ஹதீஸ் -இரும்பு நெருப்பு, இவ்விளக்கங்களையும் நமது ஷைகு நாயகமவர்களேஅருளுகிறார்கள். 

 

 

உள்ரங்க விபரங்களை நாமாக அறியமுடியாது.  ஷைகு நாயகமவர்களிடம் பைஅத்பெற்று விட்டோம். ஆனால் பரிபூரணமாக அவர்களிடம் சரணடைந்தால் தான் சரியானதாகும்.

 ஒரு சம்பவம். வழுத்தூர் முஹம்மது தாஹிர் பாவாரலி - அவர்களின் முரீது மஸ்தான் லெப்பையவர்கள் நாகூர் பாதுஷா நாயகவர்களின்ஜியாரத்திற்கு புறப்பட்ட போது தாஹிர்பாவா அவர்களும் வண்டியில் ஏறிக் கொண்டுசென்றார்கள். நாகூரில் ஓர் இடத்தில் தாஹிர்பாவா அவர்கள் இறங்கிக்கொண்டார்கள்.  மஸ்தான் லெப்பையவர்கள்தர்காவில் ஜியாரத்தை செய்து விட்டு, தாஹிர்பாவா அவர்கள்  இருந்த இடம் வந்து அழைத்துச் செல்லவந்தார்கள்.  அதுசமயம் தாஹிர்பாவா அவர்கள்,நாகூர் பாதுஷா நாயகம் அவர்கள் வந்தார்கள்.  உங்களுக்கு ஆண்குழந்தை பிறக்குமென்றுசொன்னார்கள்.  இந்தப் பழத்தை உங்களிடம்கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள் என பழத்தைக் கொடுத்து விட்டு முக்கியமாக, “வஹ்தானிய்யத்தில் இரண்டுபட வேண்டாம்” என உங்களிடம் சொல்லவும் சொன்னார்கள்என்பதாக மஸ்தான் லெப்பை அவர்களிடம் பகர்ந்தார்கள்.

குறிப்பு  : இச்சம்பவம் ஷைகிடம் நாம் எந்தளவு ஃபனாவாக ஆகவேண்டுமென்பதை விளங்க வைக்கிறது.


பொறியாளர் A.ஹாஜா முஈனுத்தீன்ஹக்கிய்யுல் காதிரிய்:    (வஹ்த்ததில்உஜூதை சிறப்பாகப் பேசிய பொறியாளர் மெளலானா இமாம் ஜலாலுத்தீன் ரூமி -ரஹ் அவர்கள்கோடிட்ட  கதையைக் கூறினார் :


ஒரு பெரிய வியாபாரி தங்கக் கூண்டில் பேசும் கிளிவளர்க்கிறார்.  வியாபார வி­யமாக வெளியூர் செல்லும்வியாபாரி  உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்என ஊழியர்களிடம் கேட்டுவிட்டு கிளியிடமும் கேட்கிறார். உங்களைப்போல் சுதந்திரமாக -மகிழ்ச்சியாக இருப்பதெப்படி ? எனக்கேட்டு வாருங்கள்   என கிளியும் சொன்னது.  வியாபாரிவெளியூரில் மரத்தில் அமர்ந்திருந்த இரண்டு கிளிகளிடம் நான் தங்கக் கூண்டில்  ஒரு கிளி வளர்க்கிறேன். அதற்கு பாலும்தேனும்தருகிறேன்.  மிகச் சிறப்பாகவளர்க்கிறேன்.  அது உங்களிடம் இவ்வாறுகேட்கச் சொன்னது! என்றவுடன் அந்த இரண்டு கிளிகளும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு இறந்தது போல் விழுந்து விட்டன. அடடே!  நாம் தவறாக ஒன்றும்சொல்லவில்லையே! இப்படி இறந்து விட்டனவே.. என எண்ணி தமது ஊர் திரும்பி தனதுகிளியிடம் இச்சம்பவத்தைக் கூறுகிறார். இதைக் கேட்ட மாத்திரத்தில் அந்தக் கிளியும் தலையை தொங்கப் போட்டுக் கொண்டுகூண்டுக்குள்ளேயே விழுந்து விட்டது.  என்னஇது நமது கிளியும் இறந்து விட்டதே என்று எண்ணி கூண்டைத் திறந்து கிளியை எடுத்துவெளியில் வைத்தார்.  உடன் அந்தக்கிளிபறந்து மேலே சென்று கூறியது:  எஜமானே! அந்தஇரண்டு கிளியும் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம் இது தான்.  அதாவது இறந்தது போல் ஆகிவிடு என்பதாக.  


இச்சம்பவம் நமக்கு உணர்த்தும்பாடம் மரணத்திற்கு முன் மரணித்துவிடு எனும் ஹதீஸேயாகும் ! வியாபாரி என்ற உலகம்  தங்கக்கூண்டு  எனும் உடம்பிலிருக்கும் கிளி எனும் ஆத்மாவைபாலும் தேனும் என்ற உலக  சுகத்தையூட்டிவளர்க்கிறது.  ஆனால் கூண்டிலிருந்துவெளியேறுவதற்கு மரணம் போன்ற நிலையை யடைந்துவிடுவதே   உடம்புக்கு வரும்  மரணத்துக்குப் பின்      நன்மை யளிக்கும். 


துபை, ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஸலவாத்தின் முக்கியத்துவம் பற்றி சிறப்பாகப் பேசினார்.


தலைமை யுரையாற்றிய ஹாஜி K.P.M பஷீர் அஹமது அவர்கள் :

இர்ஃபானுடை விளக்கத்திற்கேமுக்கியமாக மாதாந்திரக் கூட்டம். வாழும் மகான்களை மறந்துவிட்டு மறைந்துஅடக்கமாகியுள்ளமகான்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். தச்சில்லா  மாளிகை சமைந்ததும்வித்தில்லா மாமரம் முளைத்ததும் எப்படி ? இதில் தவ்ஹீதின்  நுட்பம் உள்ளது.  தன்னையறியதே கடவுளையறிவது.  தானிருப்பது நிச்சயமானால் - உண்மையானால் கடவுள்இருப்பது நிச்சயம்.  நாம் அவனை விட்டுநீங்கவில்லை.  அவன் நம்மை விட்டு நீங்கவில்லை.  நாம் அவனில் இருக்கிறோம், நம்மில் அவன் இருக்கிறான்.


ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.