ஞானப்பெண்ணே!
சூஃபிக்கவி கீழக்கரை அல் ஆரிஃபா செய்யிது ஆசியா உம்மா
தக்கலை எம். எஸ். பஷீர்
இராமநாதபுரம் மாவட்டத்தில்இயற்கைத் துறைமுகப் பட்டினமாக இலங்குவது கீழக்கரை, பழந்தமிழ் கல்வெட்டுக்களில் பெளத்திரமாணிக்கப் பட்டினம் என வழங்கப்படும் பழம்பதி இது. அறபியர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுக்காலக் கட்டத்தில் குடியேறிய புண்ணியபதிகளுள் ஒன்று கீழக்கரை. இஸ்லாமியவரலாற்றுப் பயண ஆய்வியல் அறிஞர்களான இப்னு பதூதா, சுலைமான்,அபூஜைது போன்றோர் குறிப்பிட்டுரைக்கும் பட்டினம் இது ஒலிமார்களையும் ஆலிம்களையும்ஞானியர்களையும் வள்ளல்களையும் புலவர்களையும் பெற்றெடுத்தபெறலரும். பூமி. இங்கு, வள்ளல் சீதக்காதி - மாதிஹுர் ரசூல்சதக்கத்துல்லாஹ் அப்பா ஒலி நாயகம், கீழக்கரை புதுப்பள்ளிவாசல் திண்ணக் குறட்டில் அடங்கப்பட்டிருக்கும் ஜமாலுத்தீன் ஒலி இவர்களின்பரம்பரையில் தோன்றியவர் சூஃபிஞானி கீழக்கரை செய்யிது ஆசியா உம்மா. இவரது மரபுவழிபரம்பரையினை இனிக் காண்போம்.
வள்ளல் சீதக்காதி எனும் யய்கு அப்துல் காதிர்அவர்களின் இளைய சகோதரரான பட்டத்து மரைக்காயர் எனும் முஹம்மது அப்துல் காதிறுமரைக்காயரின் திருப்புதல்வர் முஹம்மது அபூபக்கர் மரைக்காயருக்கும், மாதிஹுர் ரசூல்சதக்கத்துல்லாஹ் ஒலி நாயகம் அவர்களின் திருமகளார் சாறா உம்மாவிற்கும் பிறந்தவள்ளல் அவ்வாகாறு மரைக்காயர் எனப் புகழ் பெறு அப்துல் காதிர் மரைக்காயர். இவரின் மகன் பிள்ளை பேரனார் ஹபீபு அரசர் எனபீடு புகழ் பெறு ஹபீபு மரைக்காயரின் இளையசகோதரர். அப்துல் காதிர் மரைக்காயரின்திருக்குமாரர் முஹம்மது காசிம் மரைக்காயர். இவரின் திருமகனார் ஹபீபு முஹம்மதுமரைக்காயர். இவரது திருநிறைச்செல்வியேபுகழ் மிகு சூஃபிக்கவி செய்யிது ஆசியாஉம்மா ஆவார். ஆசியா உம்மாவின் மூதாதையர்எட்டையபுர மன்னர்களோடு நெருங்கிய நட்புணர்வுடையவர்களாகத்திகழ்ந்தனர். எட்டையபுர மன்னர் அளித்தஅன்புப் பரிசிலான அழகு தங்க ஒளி மின்னும் உமிழ் பெட்டகம் இன்றும் இவரது இல்லத்தில்பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை இன்றும்பார்க்கலாம். இவர் பரம்பரையிலான ஹபீபுஅரசர் ஜித்தாவிற்கும் மக்காவிற்கும் இடையில் தோண்டிய கிணறும்குறிப்பிடத்தக்கது. இவரதுகுடும்பத்தினருக்குச் சொந்தமான பல ஏக்கர் அகலமுள்ள கீழப்பண்டக சாலை, நடுப்பண்டகசாலை, மேலப்பண்டக சாலைகள் பல அன்றும் இன்றும் இருந்துவருகின்றன. சில பழுதுபட்டுள்ளன. கீழக்கரை இயற்கை துறைமுகப் பட்டினமாகஇலங்குவதால் பிற நாடுகளுடன் வாணிகத் தொடர்புக்கு வளமாக விளங்கியது. சேதுபதி மன்னர் அனுமதியுடன், டச்சுக்காரர்கள் 1754இல் கீழக்கரையில் கட்டப்பட்ட வர்த்தகப் பண்டக சாலைஇவரின் முன்னோர்க்குச் சொந்தமானது. இன்றுசிதைந்த நிலையில் இருக்கிறது. பலகப்பல்களுக்குச் சொந்தக்காரர்கள் இவர் பரம்பரையினர், இச்சந்ததியினரின்பண்டக சாலைகள் கொச்சி போன்ற இடங்களிலும், பர்மா, மலேசியா, ஜாவா போன்ற கீழை நாடுகளிலும் இருந்தன. இன்றும் இலங்கையில் இருப்பதைக் காணலாம். இத்தகு செல்வச் சீருயர் குலத்தில்அருட்செல்வப்பேறுடை- இறைச்செல்வத்தில் பற்றுடை சூஃபி ஞானியம்மா ஆசியா உம்மா கி.பி.1865ல் தோன்றினார்
ஆசியா உம்மா கீழக்கரைகுதுபுஸ்ஸமான் வ கவ்துல் அமான் கல்வத்து நாயகத்தின் முதன்மைச் சீடராவார். இளமையிலே தனித்திருந்து, இறைநேசச்செல்வர்கள் மீது. துதிப்பாடல்களைமுனாஜாத்துக்களைப் பாடும் அற்புத வன்மை பெற்றிருந்தார். இறையின்பத்தில் இலயித்து, இறைவனைப்பற்றி அகமியங்களையும் பாடிப் பரவினார். வேனிற் காலங்களில் இவர் தனக்குச் சொந்தமான சோலையில் பல திங்கள் தனிமையில்தவமிருந்தார். அருட்பாடல்களைபாடியருளினார். மற்றவர்களிடம் அதிகமும்பேசாது, மெளனமாக - மேல் வீட்டில் (மாடியில்) தனிமையாக பலகாலங்கள் செலவிட்டதால் இவரை “மேல் வீட்டு அம்மா” எனச் செல்லப் பெயரிட்டுஅழைத்தனர். சும்மாயிருப்பதில் சுகங்கண்டவர்களே ஞானிகள்! ஆசியா உம்மா ஹஜ்ஜுக்கடமையினையும் உரிய காலத்தில் ஆற்றிய அம்மையாராவார். இவர் பாடியருளிய பல பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை. கிடைக்கப் பெற்ற பாடல் திரட்டுமெய்ஞ்ஞானத்தீப இரத்தினம் என அரபுத்தமிழில் அமைந்துள்ளது. இது முன் அச்சுப் பிரதிகளைக் கொண்டும், அச்சாகாத ஏட்டுப்பிரதிகளையும் கொண்டு 1976இல் திருவல்லிக்கேணி மஜீதிய்யாஅச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. தமது எண்பதாவது அகவையில் 1948இல் கீழக்கரையில் இறையடிசோர்ந்துள்ளார்கள். அறபுத்தமிழால் அமைந்தஇந்நூல் முழுவதும்தமிழில் அச்சிடப்பட்டு வெளிக்கொணர ஆவன செய்தல் வேண்டும். அஞ்ஞான்றே இப்பெண்பாற் சூஃபிக் கவிஞர் பற்றிதமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து பயன்பெறும்.
கீழக்கரை மேலத்தெரு மர்ஹூம் சே.மூ.முஹம்மது சதக்தம்பிஅவர்களின் குமாரர்அல்ஹாஜ் கே.மூ.ஹமீது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜிஈ.கு.மூ. அப்துல காதர் மரைக்காயரின் புதல்வியுமான அல் ஹாஜிய்யா ஈ.சூ.மு.அ.அஹமதுமற்யம் அவர்களின் முயற்சியால் இந்நூல் அச்சிடப் பெற்றுள்ளது. இவர் ஞானிஆசியா உம்மா அவர்களின் பேத்தி ஆவர்.
மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம் பாடற்றிரட்டு தரும் இரத்தினங்கள்
1. ஹலாஸ் பைத்து
2. முனாஜாத்து வல்லபம்
3. முனாஜாத்து நூரானிய்யா
4.முனாஜாத்து றஹ்மானிய்யா
5. ஆண்டவனின் முனாஜாத்து
6. முனாஜாத்துற் றஹீம்
7. அறிவானந்தக் கண்ணி
8. அருளானந்தக் கண்ணி
9. பரமானந்தக் கண்ணி
10.பேரானந்தக் கண்ணி
11.சதானந்தக் கண்ணி
12.வஞ்சி விருத்தம்
13.மேலாம்பர வணக்கம் பதினான்குசீர்விருத்தம்
14.ஜோதி அருள் தந்த வணக்கம் விருத்தம்
15. நபிதாஜுல் அன்பியா வணக்கம்விருத்தம்.
16. செய்யது அன்பியா வணக்கம் விருத்தம்
17. காத்தமுல் அன்பியா வணக்கம் விருத்தம்
18. குருமுஹிய்யுத்தீன் வணக்கம் விருத்தம்
19.யய்கு அபூபக்கர் ஒலி விருத்தம்
20.குணங்குடி மஸ்தான் சாஹிபு விருத்தம்
21.கல்வத்து நாயகம் ஒலி விருத்தம்
22. மேலாம்பரக் கண்ணி
23.பரஞ்சுடர் கண்ணி
24. ஏகாம்பரக் கண்ணி
25. ஃகப்ஃபாற் கண்ணி
26. ஈஸ்வரக் கண்ணி
27.முனாஜாத்துற் றசூலுல்லாஹ்
28. நபிகள் நாயகத்தின்கண்ணிகள்
29. பிஸ்தாமிய் கண்ணி
30. சாதாத் கண்ணி.
31. சதக் கண்ணி.
32. குணங்குடியார்கண்ணி
33. சற்குருக் கண்ணி.
34.ஞானரத்தினக் கும்மி
35. கஸ்ஸாலி அவர்கள்முனாஜாத்து
36. அக்தாபுகள் முனாஜாத்து
37.மிஃராஜ் இரத்தினம்
38.முனாஜாத்து ரஹ்மானிய்யா
39.ஹஸன் ஹுஸைனின் முனாஜாத்து இன்னிசை
40.அஜ்மீர் முயீனுத்தீன் துதி
41.முயீனுத்தீன் அஜ்மீர் மாலி
42.ஹல்லாஜ் ரஹ்மத்துல்லா இன்னிசை
43. செய்யது இப்ராஹீம் ஒலி துதி.
44. ஷாஹுல் ஹமீதுஒலி துதி
45. கல்வத்து நாயகர்முனாஜாத்து
46. கல்வத்து நாயகம் முனாஜாத்தின் துதி
47. கல்வத்து நாயகம் துதி.
48. கல்வத்து நாயகம் முனாஜாத்தின் துதி
49. கல்வத்து நாயகம் இன்னிசை
50. கல்வத்து நாயகம் அவர்கள் முனாஜாத்து
51. பல்லாஹ் தம்பி பேரில்முனாஜாத்து
52. பல்லாஹ் ஒலி பேரில் துதி
53. ஹக்கு பேரில் முனாஜாத்து.
54.ஹக் பேரில் ஆனந்தக் களிப்பு
55.ஹபீபு முஹம்மது (ஒலி) பேரில் யா ஒலி ஸலாம்
56.பிரார்த்தனை கவிதை
|57.குழந்தைகள் பேரில் பொதுத் தாலாட்டு
58. தரீகுல்ஸாலிஹீன்
59. வெண்பா
60. பதிகம்
61. அடைக்கலம் ஏகாந்தஇன்னிசை
62. செய்யிது ஆசியம்மா அவர்களின் பைத்து
63. உம்மா ஹபீபா உம்மா அவர்கள்
64.முனாஜாத்துல் இஸ்திக்ஃபாற்,மாலிக்கா இரத்தினம் என்னும் தலைப்பில்
65. அஸ்மாவுல் ஹுஸ்னாமுனாஜாத்து
66. நாயகம் (ஸல்) முனாஜாத்து
67. கிலுறு (அலை) இல்யாஸ் (அலை) முனாஜாத்து
68. முஹையத்தீன் ஆண்டகை முனாஜாத்து
69. ஆரிஃபு நாயகம் மாலை.
70. 99 நாமங்கள்
71. ஆரிஃபு நாயகம் முனாஜாத்து
72. மழை முனாஜாத்து
73.கன்ஜுல் கறாமத்து மாலை
74. ஷாஹுல் ஹமீது ஆண்டகை அவதாரம்
75. யய்கு தேடுதல்
76.ஹஜ்ஜின் யாத்திரை
77. யூசுஃபு சாஹிபுஅவர்களின் அவதாரம்
78. அஜ்மீருக்குஏகல்
79. புத்திரர் வரலாறு
80. ஷாஹுல்ஹமீது ஆண்டகை வபாத்து
81. கன்ஜுல் கறாமத்து
82. ஹபீபு அரசர் மாலை.
83. உறுதி முனாஜாத்து மாலை
84.கல்வத்து நாயகம் முனாஜாத்து
85.கஃபூறுர் றஹீம் முனாஜாத்து
86. சாற்றுக்கவி முதலியன ஞான இரத்தினச் சுடரொளிபரப்புகின்றன.
( இன்ஷா அல்லாஹ அடுத்த இழில்நிறைவு பெறும்.
(நன்றி: ஞான இலக்கியங்கள்.)