இமாமத் செய்வதற்கு ஏழு ஆண்டுகள் தேவையா ?
அல்ஹாஜ் பி..எம் ஜியாவுத்தீன் பாகவி ஹள்ரத். அய்யம்பேட்டை.
தமிழ் மாநில ஜமாஅத்துல உலமா சபைக்கு மதுரையில் தலைமையகக் கட்டிடம்அமைக்கப்பட்டு இக்கட்டிடத்தின் எதிர்கால செயல் திட்டங்களை மாநில சபை அறிவித்திருக்கிறது|
அவற்றில் சில :-
1. தமிழகத்தின் மிகச்சிறந்த - திறமையான ஆலிம்கள் குழு இதில்பணியாற்றுவார்கள்.
2. இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படும் கருத்துக்களுக்கு உடனுக்குடன்பதில் தருவது.
3. தேவையான நவீன மஸாயில்களை ஆய்வு செய்து ஃபத்வா வழங்குவது.
4. மக்தபு மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம் தயாரித்தல்
5. அரபி மற்றும் உர்தூ கிதாபுகளில் புதைந்து கிடக்கின்ற இஸ்லாமியஞானங்களை மொழி பெயர்த்து தமிழக மக்களுக்குத் தருவது.
6. இஸ்லாமிய தஃவா பணி செய்வது ஆகியவையாகும். இந்தத் திட்டங்கள், மிகவும் தொலைநோக்கோடு சமுதாயத்தின் இன்றைய எதார்த்தநிலையை நாடி பிடித்துப் பார்த்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இன்றைய சூழலில் மிகவும்வரவேற்கப்பட வேண்டிய விஷயம்! அதே சமயம் இத்தகு உயர்ந்த லட்சியங்களை நடைமுறைசாத்தியமாக்குவதற்கு நாம் சில மாறுதல்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.
தற்போது அனைத்துபள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்துவதற்கு ஏழாண்டுகள் ஓதி ஸனது (பட்டம்) பெற்றமவ்லவிகளே இமாம்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற பணிகள்பின்வருமாறு அமைந்துள்ளன.
ஐவேளை தொழுகை நடத்துவது, ஜும்ஆ,பெருநாள் போன்ற சிறப்பு நாட்களின் கடமைகளைச் செய்வது.
காலை அல்லது மாலையில்மக்தபு-குர்ஆன் மத்ரஸாக்களை நடத்துவது. நிக்காஹ்-ஜனாஸா போன்ற வற்றில் கலந்துகொண்டு அவை இஸ்லாமிய முறைப்படி நடைபெற உதவுவது.
இஸ்லாமிய மஹல்லாக்களில்அவ்வப்போது நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் (சுப-துக்க காரியங்களில்)பங்கெடுத்துக் கொள்வது.
ஓராண்டில் நிகழக் கூடிய முஹர்ரம் ஆஷீரா தினம், மீலாதுன்நபி,புனித ரமலான், ஹஜ்ஜுக் கடமை மற்றும் பராஅத்,மிஃராஜ் போன்ற நாட்களின் சிறப்பு அமல்களையும் விசேங்களையும் வரலாறுகளையும் நினைவூட்டிமக்களுக்கு ஆர்வமூட்டுவது.
இன்னும் இவை போன்ற மார்க்கம்சார்ந்த வியங்களுக்கு பேஷ் இமாமின் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இதைத் தவிரவுள்ள தலாக், பாகப்பிரிவினைபோன்ற சமூகப் பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்கு பெரிய அரபிக் கல்லூரிகளில் சென்றுபத்வா- மார்க்கத் தீர்ப்புகளைப் பெறுகின்றனர். இது போன்ற பணிகளுக்கு ஏழாண்டுகள் செலவு செய்து பல கலைகளையும் கற்றுவெளிவருகிற சிறந்த ஆலிம்களைத் தான் பயன்படுத்த வேண்டுமா? மேற்கூறப்பட்டஇமாமத் பணிகளுக்கு ஒரேயயாரு வருடம் பயிற்சி கொடுத்து மாணவர்களை தயார் படுத்தினால்போதுமே? என்பது நமது தாழ்மையான அனுபவப் பூர்வமானகருத்தாகும்.
ஏனெனில் இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதற்குத்தேவையான குறைந்த பட்சத் தகுதிகள் : -
1. குர்ஆன் ஷரீபின் சிற்சிலசூரா-அத்தியாயங்களை மனனம் செய்து கொள்வது (தராவீஹ் தொழுகைக்கு கூட, தனியாகஹாஃபிழ்களை நியமித்து விடுகின்றனர்)
2.குர்ஆன் ரீபை திறம்பட ஓதத்தெரிந்து விட்டாலே குர்ஆன் மத்ரஸாக்களை பராமரித்துவிட முடியும். அதில்கற்பிக்கப்படும் தீனிய்யாத் - மார்க்க அடிப்படை
விஷயங்களைத்தும் தமிழிலேயேவந்துவிட்டன.
3. தொழுகை சம்பந்தமான சட்டதிட்டங்கள் அதன் உட்பிரிவுச்சட்டங்கள்,
இமாம்களுக்கும், பின்பற்றுவோருக்கும்உரிய பிக்ஹுவழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் விரிவாக தாய்மொழி தமிழிலேயே படித்துஅறிந்து கொள்ளலாம். அவ்வாறானபுத்தகங்களையே இவர்களது ஓராண்டு பாடத்திட்டமாகவும் வைத்து விடலாம்.
4. நிக்காஹ்-ஜனாஸா போன்ற வியங்களுக்குக் கூடஇலகுவான பயிற்சிகளே போதுமாகும்.
5. இந்த ஓராண்டு காலத்தில்தேவையான அளவு பிரசங்கப் பயிற்சியும் கொடுத்து விடலாம்.
6. மஹல்லாக்களில் நடைபெறும்சின்னஞ்சிறிய கலாச்சாரப் பணிகளை நிறைவேற்றுவதும் பெரிய பாரமான வியமல்ல.
|7. மற்றபடி ஹஜ் விளக்கம், நோன்பின்மாண்புகள், சிறப்பு தினங்களின் வரலாறுகள் அனைத்தையும்அந்தந்த புத்தகங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
தற்கால சூழ்நிலையில் சாதாரணசின்னஞ்சிறிய வியங்களுக்கெல்லாம் மத்ரஸாக்களை அணுகி மார்க்கத்தை அறிந்து கொள்வது என்பதுஅரிதாகிவிட்டது. அது போன்றே இமாம்களாகப் பணியாற்றும் ஆலிம்களிடம் கேட்டுக் கொண்டுசெயல்படுதல் என்பதும் குறைந்து வருகிறது. இந்த ச் சூழ்நிலைக்குக் காரணம்மார்க்கத்தின் பெரும்பாலான அடிப்படை வியங்கள் தாய்மொழியில்வந்துவிட்டன. அத்துடன் இன்டர்நெட்களையே தங்களின் வழிகாட்டு வேதமாகக்கருதுபவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. குழந்தைகளின் பெயர்களைக் கூடவலைத்தளத்தில் போய் தேடி எடுத்து வருகின்றனர் (அது இஸ்லாமியப் பெயர்கள் தானாஎன்பது வேறு விஷயம்)
இதுபோன்ற யதார்த்தங்களைசீர்தூக்கிப் பார்க்கும் போது ஏழாண்டுகள் மத்ரஸாக்களில் பயின்று வெளிவருகின்றஆலிம்களை இதைவிட சிறந்த ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்தினாலென்ன ? அப்படிப்பட்டஆற்றலாளர்களை இந்த சாதாரணப் பணிகளில் ஈடுபடுத்தி அவர்களது வயதையும், ஆற்றலையும் வீணடிக்க வேண்டுமா? ஒரு கவிஞர் கூறியதைப்போல.... அம்மி கொத்துவதற்கு சிற்பி எதற்கு? இதனால்ஆலிம்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பல்வேறு இழப்புகள். இந்தப் பேரிழப்புகளை ஈடுசெய்வதற்கும் ஆலிம்கள் பற்பல சாதனைகளை செய்வதற்கும் நடைமுறையில் ஒரு மாற்றம்தேவைப்படுகிறது.
இதற்கு பல்லாண்டுகள் இமாமாகஇருந்து ஓய்வு பெற்றவர்களை ஆசிரியர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். பிற மதகுருமார்கள் ஓரளவு படிப்பறிவும், ஆங்கிலப் புலமையும் பெற்றவர்களாக இருப்பதைப் போல இந்த இமாமத்பயிற்சிக்குரிய மாணாக்கர்களை +2 முடித்தவர்களையே தேர்வு செய்யலாம்.
இதன் மூலம் கிடைக்கும்பலன்கள்.
பல்வேறு குக்கிராமங்களில்இஸ்லாமியக் குடும்பங்கள் குறைவாக வாழும் பகுதிகளில் இமாம் -முஅத்தின் தனித்தனியாக நியமித்து ஊதியம்வழங்க முடியாத நிலைவுள்ளது. அவ்வாறானஊர்களில் இரு வேலைகளுக்கும் ஒரே நபரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஓராண்டு பயிற்சிமுடித்தவர் கல்வித் தகுதியில் குறைந்தவராக இருப்பதால் இப்பணியை ஒரு கெளரவக் குறைவாகக்கருத மாட்டார். பல அரபு நாடுகளில் இந்தமுறையைத் தான் செயல்படுத்துகின்றனர். ஒரு நகரத்தின் பெரிய பள்ளிகளில் மட்டும்தகுதியான ஆலிம்களை நியமித்திருக் கிறார்கள் மற்ற புறநகர்ப் பகுதிகளி லெல்லாம் இதுபோன்ற பயிற்சி முடித்தவர்களே பணியாற்றுகின்றனர்.
அடுத்து, தகுதி வாய்ந்த ஆலிம்கள் தங்களின்கல்வித் திறனை ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். புதிய புதிய நிகழ்வுகளை ஆய்வு செய்து நல்ல தீர்வுகளைக் தரலாம். மத்ரஸாக்களில் பேராசிரியர்களாக இருப்பதோடுசமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஆய்வு நூல்களை வெளியிடலாம். ரீஅத் சார்ந்த வியங்களில் பண்ணலாம். ஊர் ஜமாத் பிரச்சனைகள், மஹல்லாக்களின்விவகாரங்கள், எதுவும் இவரை நெருங்காது என்பதால் தமது முழுநேரமும் வீணடிக்கப்படாமல் அறிவை மெருகூட்டவும், தயங்காமல்அதனை வெளிப்படுத்தவும் சாத்தியமாகும்.
நமது முன்னோர்களான பழம்பெரும்இமாம்கள், திருக்குர்ஆன்விரிவுரை யாளர்கள், ஹதீஸ் கலை வல்லுனர்க ளெல்லாம் இவ்வாறுவாழ்ந்ததால் தான் அவர்களால் பல்வேறு படைப்புகளை இச்சமுதாயத்திற்குத் தர முடிந்ததுமிகச்சிறந்த ஆய்வு நூல்களை, சட்டப் புத்தகங்களை, வரலாற்றுக்கிரந்தங்களை, இலக்கண இலக்கியக் காவியங்களை உருவாக்கமுடிந்தது. காலமெல்லாம் நினைவு கூரத்தக்கவகையில் சகல இஸ்லாமியத் துறைகளிலும் மிளிர்ந்தார்கள். அவர்களில் யாரும் இமாமத் பணியில் தம்மைமுடக்கிக் கொண்டதாக வரலாறு இல்லை. இத்தகையவர்களுடைய காலத்தோடு இஸ்லாமியக் கல்வி - கலாச்சாரத்தில் பெரும்தேக்க நிலை ஏற்பட்டது எதனால்? அருமையான சிற்பிகளுக்குஅம்மிக் கொத்துகிற வேலையைக் கொடுத்திருப்பதால் தான்.
சான்றுக்காக நமது முன்னோர்கள்சிலரின் சாதனைப் பட்டியல் நூற்களைப் பார்க்கலாம்
சட்டத்துறையில் :-
இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களதுளாஹிருர் ரிவாயா.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களது அல் முஅத்தா.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களதுகிதாபுல் உம்மு .
இமாம் சர்ஹ்சீ (ரஹ்) அவர்களதுகிதாபுல் மப்சூத் .
இமாம் மர்கீனானீ (ரஹ்)அவர்களது அல்ஹிதாயா.
இமாம் இப்னுல் ஹுமாம் (ரஹ்)அவர்களது பத்ஹுல் கதீர்.
இமாம் காசானீ (ரஹ்) அவர்களதுபதாயி ஸனாயிவு .
இமாம் இப்னு சஃனூன் (ரஹ்) அவர்களது முதவ்வனத்துல் குப்ரா.
இமாம் நவவீ (ரஹ்) அவர்களதுகிதாபுல் மஜ்மூ.
இமாம் கஜாலீ (ரஹ்) அவர்களதுஅல்-வஜீஸ்.
இமாம் இப்னுகுதாமா (ரஹ்)அவர்களது அல்முக்னீ.
இமாம் இப்னு ஹஜம் (ரஹ்)அவர்களது அல்மஹல்லீ.
இவை தவிர பதாவா காழீகான், பதாவாஹிந்திய்யா, பதாவா ஆலம்கீர் போன்றவையும் இருக்கின்றன.
பொருளாதாரம் மற்றும் கொடுக்கல்வாங்கல் சம்மந்தமாக இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களது கிதாபுல் ஹராஜ்.
இமாம் இப்னுசலாம் (ரஹ்)அவர்களது கிதாபுல் அம்வால்.
வரலாற்றுத் துறையில் நமதுமுன்னோர் உலகின் முதல் இடத்திலிருந்தார்கள். சான்றுக்காக சில
ஷைகு இப்னு ஹிஷாம் (ரஹ்)
ஷைகு இப்னு இஸ்ஹாக் (ரஹ்)
இப்னு கஸீர் (ரஹ்)
இப்னு ஜரீர் தப்ரீ (ரஹ்)
இப்னு கல்தூன் (ரஹ்)
கணிதத்தில் அல்குவாரிஜ்மீஅவர்களுடைய கிதாபுல் ஜிப்ரி வல் முகாபலா என்கிற நூல் ஐரோப்பா கண்டத்தின் பலயுனிவர்சிட்டிகளில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. இவர்களது கிதாபுல் ஹிசாப்எனும் நூல் எண்ணற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகலைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சாதனைகளின்அடையாளத்தைக் கூட இன்று கேள்விப்பட முடியவில்லையே ஏன்? இத்தனைநூற்றாண்டைக் கடந்தும் நம்மால் ஒரு ஒருங்கிணைந்த மக்தபு பாடத்திட்டத்தைக் கூடஉருவாக்க முடியவில்லையே யாருடைய குற்றம்? தகுதியுள்ளஆலிம்கள் பொருத்தமில்லாத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தவிரவேறு காரணங்கள் தெரியவில்லை.
இதன் மறுபக்கத்தையும்பார்க்கலாம். இவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும் போது மார்க்கக் கல்வியில்குறைவாகவுள்ள இந்த இமாம்கள், மக்களை தவறாக வழிநடத்தி விடுவார்களே என்றால் இதிலே மக்களின்பங்களிப்பும் முக்கியம்.
நமது நோய் நொடிகளுக்குஸ்பெசலிஸ்ட்டுகளைத் தேடிச் செல்வதைப் போல மார்க்க வியங்களுக்கும்ஸ்பெசலிஸ்ட்டுகளைத் தேடிச் சென்று தான் தீர்வுகளைப் பெற வேண்டும். அதாவதுஏழாண்டுகளை முடித்து பட்டம் பெற்றுள்ள மவ்லவிகளிடமே ரீஅத் சார்ந்த விஷயங்களைக் கேட்டறியவேண்டும்.
அடுத்து பட்டம் பெற்றமவ்லவிகளுக்கான வேலை வாய்ப்புகள் எப்படி என்றால் அது மிகவும் பிரகாசமாக இருக்கும்.
1. அரபிக் கல்லூரிகளில்பேராசிரியர்களாக தர்ஸுப் பணி.
2. பள்ளிவாசல்களில் ஜும்ஆ, பெருநாள்,மற்றும் சிறப்பு தினங்களில் தரமான சொற்பொழிவுகளைத் தருவது ( இதன் மூலம் வெள்ளிமேடைவீணாகிறது என்கிற குற்றச்சாட்டு ஒழியும்)
3. மிகச் சிறந்த இஸ்லாமியஅழைப்பாளர்களாக தஃவா பணி செய்வது.
4. தனி அலுவலகங்களை அமைத்துக்கொண்டு ஆய்வுகளில் ஈடுபடுவது. அத்துடன் சுதந்தரமாக இருப்பதால் சொந்தத் தொழிலிலும்கவனம் செலுத்தலாம்.
5. பண்டைய காலங்களில் இதுபோன்ற அறிஞர்களுக்கும்,ஆய்வாளர்களுக்கும் அன்று வாழ்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தான் நிதிஉதவி செய்திருக்கிறார்கள். அது போன்று வக்பு சொத்துக்களிலிருந்தும், பைத்துல் மால் பொது நிதியத்திலிருந்தும் மாத ஊதியம் வழங்கிட வேண்டும்.
6. ஆங்காங்கே ரீஅத் கோர்ட்டுகளைநிறுவி அதன் முழு நேரப் பணியாளர்களாக நியமிக்கலாம்.
7. தற்போது சிறப்பாக இயங்கும்மத்ரஸாக்களிலேயே ஆய்வுக்கென தனி இருக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்துபணியிலமர்த்தலாம். தமிழகத்தில் பிரபலதஃப்ஸீர் இப்னு கஸீர்,சிஹாஹ் சித்தா எனப்படும் பெரிய ஹதீஸ் கிரந்தங்கள், தமிழில் வெளிவரக் காரணம்அதற்கென்றே ஆலிம்கள் குழுவை அமைத்து வேறு பணிகளில் ஈடுபடாமல் வேலை வாங்கியதால்தான் சாத்தியமானது என்பதை முன்மாதிரியாய்க் கொள்ள வேண்டும். இப்போதுள்ள நிலையிலேயேஇத்தகைய சாதனைகளைச் செய்யலாமே என்றால் அதுநடைமுறை சாத்தியமில்லை என்பதே நமது அனுபவமாகும். ஏனெனில் மத்ரஸாக்களில்ஆசிரியராகப் பணியாற்றும் போது வகுப்பு நடத்துவதற்குத் தேவையான நூல்களைப் படிப்பதற்குத் தான் வாய்ப்புஇருக்குமே தவிர மற்ற வியங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கான அவகாசம் குறைவு. இமாமத் செய்பவர்களுக்கோ இத்தகைய ஆய்வுகளில்இறங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் - ஆதார நூல்கள். அகராதிக் குறிப்பேடுகள்எதுவுமிருப்பதில்லை. எனவே இன்றையநிலையிலேயே ஆய்வுத் துறையில் ஈடுபட முடியாது.
சமுதாயத்தின் குன்றிலிட்டவிளக்குகளாக, கோபுரக்கலசங்களாக பிரகாசிக்க வேண்டியவர்கள்,குடத்திலிட்ட விளக்குகளாக நூர்ந்து போகிறார்கள். நமது மாநில ஜமா அத்துல் உலமா சபையின்தொலைநோக்குத் திட்டங்களையும் இலக்குகளையும் அடைய வேண்டுமானால் தற்போதையநடைமுறையில் மாற்றம் காண முன்வர வேண்டும். இது எமது உள்ளக்கிடக்கை மட்டுமே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று - காய்தல் உவத்தலின்றிசீர்தூக்கிப் பார்த்தால் இதன் நியாயம் புரியும்.