• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 » நல்ல பெண்மணி

மகளிர் பக்கம்                                                                                                                                நெடுந்தொடர் ....

 

 

நல்ல பெண்மணி

( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம். ஆர். எம். முகம்மது  முஸ்தபா)

 

 

நல்ல து படிக்க...

 

குர்ஆன் பள்ளியிலிருந்து வீடு வந்ததும், மாலையில் குழந்தைகள் ஓடியாடி விளையாட அனுமதியுங்கள்!குழந்தைகள் ஓடியாடி விளையாடுவது அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் நல்லது, மனவளர்ச்சிக்கும் நல்லது.  குழந்தைகள்வெளியே சென்று விளையாடி விட்டு வருகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்! அவர்கள் அதிகநேரம் விளையாடி விட்டனர் என்று நீங்கள் கருதினால், குழந்தைகள்வீட்டிற்குள் நுழைந்ததும் அவர்களைக் கண்டித்து விடாதீர்கள்!  “ஏன் இவ்வளவு நேரம் விளையாடினாய்? அப்படி என்ன விளையாட்டு!” என்று கடுமையாகப் பேசி விடாதீர்கள்.  இது குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கொன்று,அவர்களை அதிர்ச்சி கொள்ளச் செய்யும்.  எனவே கொஞ்ச நேரம் கழிந்த பிறகு, குழந்தைகளிடம், “நாளைக்குக் கொஞ்சம் முன்பாகவே வந்துவிடவேண்டும், அப்பொழுது தானே குர்ஆன் ஓத நேரம் இருக்கும்” பாடம்படிக்க நேரம் இருக்கும் என்று இதமாகக் கூறுங்கள் !


குழந்தைகள் ஒரு கவலையுமில்லாமல் சிரித்து மகிழ இருப்பது இந்தப்பருவம்தான்.  பெரியவர்கள் ஆகிவிட்டால், கவலைகள் கஷ்டங்கள் வந்துவிடும்!  அதன்பின் சிரிப்பது எங்கே, மகிழ்வது எங்கே? எனவே,குழந்தைகளைச் சிரித்து மகிழ்ந்து விளையாட விடுங்கள்!


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தம் பேரக் குழந்தைகளுடன்சிரித்து மகிழ்ந்து விளையாடி இருக்கிறார்கள். ஒரு நாள் அவர்கள் தம் தோழர்களுடன் தெருவழியே வந்து கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது அவர்களின் பெயரர் ஹுஸைன் (ரலி) தெருவில்விளையாடிக் கொண்டிருந்தார்.  உடனே அவர்கள் தம்தோழர்களை விட்டுச் சற்று முன் சென்று, தம் பெயரரை நோக்கித் தம் இரு கைகளையும் நீட்டி, இங்குமங்கும்நகர்ந்து விளையாட்டுக் காட்டித் தம் பேரரைச் சிரிப்பில் ஆழ்த்தினார்கள்.


திருக்குர்ஆனை ஓதி முடித்ததும் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்குஅனுப்பி வையுங்கள்! சில தாய்மார்கள் குழந்தைகளைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்ததோடு சரி, மற்ற எதையும் கவனிக்க மாட்டார்கள்.  நீங்கள் அப்படி இருக்கக்  கூடாது. குழந்தைகள் ஒழுங்காகப் பள்ளிக்கூடத்திற்குப் போகிறார்களா, உரிய நேரத்திற்குப் போகிறார்களா, ஒழுங்காகப் படிக்கிறார்களா,ஒழுக்கமுள்ள  பிள்ளைகளுடன் பழகுகிறார்களா என்று நீங்கள் கவனிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும். குழந்தைகளைப் படிக்க வைக்காமல்வேலைக்கு அனுப்புவது நல்லதல்ல.  அதனால் அவர்களின்உடலும் கெடும், உள்ளமும் கெடும்.  இந்த நிலை நம் நாட்டில் மட்டும் இருக்கவில்லை.  உலகம் எங்கும் இருக்கிறது.  உலகம் முழுவதும் 15வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6கோடிப் பேர் வேலைக்குப் போகின்றனர்.  இந்தத்  தகவலை உலகத் தொழிலாளர் ஸ்தாபனம் குறிப்பிட்டு விட்டு,குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.  இக்கருத்தையே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களும் “சிறுவர்களைப் பொருளீட்டி வருமாறு வற்புறுத்தாதீர்கள்!அவ்விதம்   நீங்கள் வற்புறுத்தினால் அவர்கள் திருடக் கூடும்” என்று கூறினார்கள். 


குழந்தைகள் எழுத்தைக்கற்றுக் கொண்டதும் கண்டதை எல்லாம் எடுத்துப் படிக்க ஆரம்பிப்பார்கள்.  அப்பொழுது அவர்களுக்கு நல்ல நூல்களைக்  கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள் ! கெட்ட நூல்கள்அவர்களின் பார்வையில் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ! ஏனெனில், அவர்கள் இப்பொழுது படிக்கும் ஒவ்வொரு வி­யமும், அவர்களின்ஒழுக்கத்தை உருவாக்கும்.  எனவே, அவர்கள் பேய்க் கதைகளையும், பூதக்கதைகளையும்படிப்பது நல்லதல்ல.  கண்டிப்பாக அவர்கள்வன்செயல் செய்யப்படும் கதைகளையும் குற்றங்கள் புரியப்படும் கதைகளையும் படிக்கக்கூடாது.        
                                                     
                                               

 

(தொடரும்)