சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின் அமுத மொழிகள்
19.6.2012 அன்று திண்டுக்கல்லில் தலைமை கலீபா எம். ஹபீபுல்லாஹ்அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை தொடர்ச்சி..
அன்புக்குரிய முரீதுகளே! இங்கு மூன்று, நான்கு நாட்களாகப் பேசி வந்திருக்கிறோம். இதில் நீங்கள் விளங்கியதென்ன ? விளங்காததென்ன ? நான் கூறிய வியத்தை எவ்வாறு எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?விளங்கியுள்ளீர்களா? இல்லையா? என்பதை அறிவதற்காக நீங்களாக சில கேள்விகள் கேட்க நாம் விரும்புகிறோம்.
திண்டுக்கல் உமர் ஹக்கிய்யுல்காதிரி அவர்கள் “பர்ஸகில் உடல் உயிரைக் காத்தருள்வாய்! என பதுறு மவ்விதல் ஒரு பாடல் வரி வருகிறது !அது பற்றி விளங்க வேண்டும்” எனக் கேட்டார். அதற்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்: “பர்ஸக் என்றால் மனிதன்மெளத்தானதிலிருந்து ஹஷ்ரில் (மறுமையில்) எழுப்பும் காலம் வரை உள்ளதைத் தான்பர்ஜக்” எனப்படும். அப்போது உயிரும்எழுப்பப்படும். உடலும்எழுப்பப்படும். அது வேறு வேறாகப் போனாலும்கூட அது அந்த நேரத்தில் அப்படி இருக்காது. தனித்தனியாக அல்ல,உடலுடனேயே எழுப்பப்படும். எங்களுக்கு அது காட்சியாகத் தெரியும். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஜிப்ரயீல் (அலை)அவர்கள் வந்தார்கள். அவர்கள் உடலுடனா வந்தார்கள் ? அது ஒருகாட்சி தான். மக்கள் மத்தியில் பேசுவதுகதைப்பதுபோலுள்ள காட்சி தான். அது போல அவர்கள் எழுப்பப்படுவார்கள். உடலிலிருந்துஉயிர்போனபின் இதற்கு சம்பந்தம் இல்லையயன எண்ணக் கூடாது. இறந்து போனவர்கள் எவ்வாறு எழுப்பப்படுகிறார்கள் என்றால், மனிதன் முதுகெலும்பு முடியுமிடத்தில்ஓர் எலும்பு சற்று வளைந்த நிலையில் உண்டு. அதற்கிடையே ஒரு கல் இருக்கிறது. உடல் அனைத்தும் அழிந்தாலும் அந்தக்கல் அழியாது. அதிலிருந்து தான் மனிதனின் உருவம் மீண்டும் எழுப்பப்படும்.
ஜனாப் ஜபருல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள், வாப்பா!“தொழுகையில் பரிபூரணமாக இருக்கிறோம் என எண்ணி ஒரு கணம் ஹக்கிலே ஃபனாவானால் அதுவேபோதும்” என சொல்லப்படுகிறதே எனக் கேட்டார்! அதற்கு வாப்பா நாயகம் அவர்கள்: அதுவே போதும் என்றால் அப்படியே விட்டு விட்டுப்போய் விடுவதல்ல. நான்கு ரக்அத்தையும்முழுமையாகத் தொழத்தான் வேண்டும். ஜபருல்லாஹ் அவர்கள் மீண்டும்) வாப்பா ! குருவுடைய உரு இருந்தால் தானே அதுசித்தியாகும்.
அமுத மொழிகள்
என வினவ, ஒரு நேரத்தில்அப்படிப் பண்ணுவதில் பிரச்சனை இல்லை என்று கூறி மீண்டும் தொடர்ந்தார்கள். தொழும் போது ஒரு நிமிடம் 2 நிமிடமாவதுகுருவுடைய தோற்றம் வர வேண்டுமென்ற அவசியமில்லை. குரு உங்களுக்கு இருக்கின்றார்கள்தானே! அந்த எண்ணத்துடனே 3 செகண்ட் 4 செகண்ட் உங்கள் மனதை அப்படியே ஒரு நிலைக்குள்கொண்டு வந்து எதுவுமே இல்லை என்ற நிலைக்குவந்து விட வேண்டும். வந்தால் நீங்கள்நிற்கப் போவது எப்படி? நீங்கள் இல்லாத நிலையில் தான்இருப்பீர்கள். மீண்டும் மாறி தொழுகையைத் தொடர வேண்டியது தான். அப்படி இன்றி சும்மாவே தொழுது கொண்டு போவதில்எந்தப் புண்ணியமும் இல்லை. ஆனால்தொழத்தான் வேண்டும். ஒரு புண்ணியமுமில்லைஎன்றவுடன் ஆகா நமக்கு சர்ட்பிகேட் கிடைத்து விட்டது ! இனி நாம் தொழத்தேவையில்லையயன்று நினைத்து விடுவார்கள். அப்படி சர்ட்பிகேட்கள் நாங்கள் வழங்குவதில்லை.
இஸ்லாமிய ஒழுங்கு முறைப்படி என்னென்ன பர்ளுகள்இருக்கின்றனவோ அவற்றை ஒழுங்காகச் செய்து வர வேண்டும். அவர்கள் யாராயிருந்தாலும் சரி ! முரீதாகஇருந்தாலும் செய்காக இருந்தாலும் செய்து வரத்தான் வேண்டும். நோன்பு பிடிக்கத் தான் வேண்டும். நான் செய்கு எனக்கு நோன்பு பிடிக்கத்தேவையில்லை என்றால் அது பொருத்தமில்லை. (மக்கள்) நோன்பு பிடிக்க வேண்டுமென்றால்(சிலர் பிடிவாதமாக இருப்பது போல) சாகும் வரை நோன்பு பிடிப்பேன் என பிடிக்கக்கூடாது ! நோயாளியாக இருந்தால் விட்டு வைக்கலாம். வற்புறுத்தி பிடித்தல்கூடாது. அதனால் ஆபத்து உண்டாகும் என்றால்விட்டு விட வேண்டியது தான். பிரயாணம்செய்யும் போது நோன்பு முடியுமானால் பிடிக்கலாம். ஆனால் மார்க்க சட்டப்படி அப்போது கடமையில்லை.
ஆனால் நோன்புபிடிக்காததிருந்து கொண்டு பாதையில் சிகரெட் பிடிப்பது. டீ குடிப்பது போன்றவற்றைசெய்யக் கூடாது. நோன்பாளிகள் போல நோன்பு பிடித்திருப்பது போல நடந்து கொள்ளவேண்டும். வீட்டில் தான் சாப்பிட வேண்டும். அடுத்து, நமக்கு நோன்பாளிகள் தானே உணவுதயாரித்துத் தர வேண்டும் ! அது பெரிய பாவம் பொதுவாக நோன்பு காலத்தில் நோயாளிகள்பிரயாணிகள் நோன்பாளிகள் போல நடந்து கொள்ள வேண்டும். பிடிக்க முடிந்தவர்கள்பிடிக்காதிருப்பது பெரிய பாவம். அதற்கு இறைவனிடம் கேள்வி கணக்கு இருக்கத்தான்செய்கிறது. பிடிக்க வேண்டும் என்றஉறுதியுடன் நோயுடன் பிடிப்பவருக்கு பெரிய நன்மையும் இருக்கிறது. நாங்கள் நோன்புடன்தான் வெளியே போகிறோம் வருகிறோம் அது ஒரு வருத்தமாகத் தெரியவில்லை. முடியாதவர்கள்பின்னால் களா செய்து விட வேண்டும். பொதுவாக எல்லோரும் பர்ளுகளை கட்டாயம் செய்து வர வேண்டும்.
(தொடரும்)