• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 » பர்ஸன்ஜிய் மெளலிது நூலில் வெளிவந்தது

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்துமதீனாவிற்குள் நுழைந்தபோது வரவேற்றுப்பாடிய தலஅல் பத்ரு அலைனா பைத்துக்கு சங்கைமிகுஷைகுநாயகம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து பர்ஸன்ஜிய் மெளலிது நூலில் வெளிவந்தது.


 

மதீனாவை நோக்கிக் கடுமையான பிரயாணஞ் செய்து ஈங்கு வருகை தந்துபூரண சந்திரன் எம்மீது உதித்தது.  அழைக்கிறவர்களாகிய எம் பெருமானார் அல்லாஹுவுக்காக எம்மை (அவனின்பக்கம்) அழைத்த ஒன்றுக்காக நாம் அவர்களுக்கு நன்றி பாராட்டுதல் கடமையாகின்றது.


நம்மிலே அனுப்பப் பட்டவர்களே! சுயேச்சையாய் சேவை செய்யும் கருமத்தைநீங்கள் கொண்டு வந்தீர்கள்.

தாங்கள் வந்தீர்கள். மதீனாவைச் சிறப்பித்தீர்கள். அழைக்கிறவர்களில்மேலானவர்களே! (தங்களுக்கே சோபனம்)  தங்கள் வரவுநல்வரவாகுக.

கிழிந்த புடைவைத் துண்டுகளுக்கு ஒற்றுப் போட்டுத் துண்டுகளைச்சேர்த்துத் தைத்த பின் மேன்மையான (மேன்மை யுடைய) உடைகளை உடுத்தோம்.   

 

அனைத்திலும் தாங்கள் அழகானவர்கள், இணக்கமுடையவர்கள் (தாங்கள் அனைத்திலும்) சுந்தரர்.

முலைப் பாலருந்தும் நாட்களுக்கு முன்னாலே இறைச் சேர்மானம் எனும்முலைப்பாலை அருந்தினோம்.

நல்ல இடத்திலே இறங்கிய ஒரு (நாயகம் அ)வர்களாம் ஒருவர்மீது நம்இறைவனே ஸலவாத்துச் சொல்வாயாக.

அல்லாஹுவுக்காக முயற்சி செய்தாரே அந்த ஒருவரான நபிகள் நாயகம், அவர்களின் கிளையார், ஸஹாபாக்கள்பேரிலும் எங்கள் இறைவனே ஸலவாத்துச் சொல்வாயாக.

அழைக்கும் ஒவ்வொருவருக்கும் விடைபகர்கிறவனே, நம்மீது திரையைச் சோர விடுவாயாக.