• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 »  உமர் (ரலி) புராணம்

உமர் (ரலி) புராணம்


ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

 

 

                  தோற்றிடா வகையில் தூதர்

                  தோழர்க ளோடு சேர்ந்து

            தேற்றிய வர்க ளாகத்

                  தீரவு ளத்தி னோடு

            போற்றி யிறைது தித்து

                  போயினர் நிறைவி னோடே

            தூற்றிய பகைவர் சேனை

                  துயருடன் சென்ற தாமே.

கொண்டு கூட்டு:

தூதர் தோற்றிடா வகையில் தோழர்க   ளோடுசேர்ந்து (அவர்களைத்) தேற்றியவர்களாகத் தீரஉளத்தினோடு இறை      போற்றி இறைதுதித்துநிறைவினோடு போயினர்.  தூற்றிய பகைவர் சேனைதுயருடன் சென்றது ஆமே.

 

பொருள் : 


தூதராகிய நாயகம் அவர்கள் தோற்கவில்லை யயன்ற வகையில் தோழர்களோடுசேர்ந்து (அவர்களைத்) தேற்றியவர்களாகத் தீர உள்ளத்தினோடும்.  இறைவனைப் போற்றி இறையவனைத் துதித்து உள்ளத்தில்நிறைவோடு போயினர்.  ஆயினும்
, தூற்றியபகைவர் சேனை துயருடன் சென்றது.  ஆம் + ஏ.


குறிப்பு :

தேற்றுதல் : தைரியப்படுத்துதல். தீரம் : வீரம்.  நிறைவோடு :மனநிறைவோடு.

 

 

முதலாவது உதய காண்டம்

 

 

நானீ யயனுமொழியு நாமென்னும் பன்மொழியு

மானா மறுபதமு மாகாதான் - மானா

மறுவில் விரவியே மாறாக் கலந்த

திறலோற்குச் சாய்த்தென் சிரம்.


கொண்டுகூட்டு :


நான் நீ எனும் மொழியும்நாம் என்னும் பன்(மை) மொழியும் ஆனா மறுபதமும் ஆகாதான் மானா மறு இல் விரவியே மாறாக்கலந்த திறலோற்கு சாய்த்து என் சிரம்.



பொருள் :

நான், நீ என்கின்ற (தன்மை, முன்னிலை,ஒருமைச்) சொற்களும் நாம் (நாங்கள், நீங்கள்,நீவிர்) என்கின்ற (தன்மை, முன்னிலைப்) பன்மைச்சொற்களும் (இறைவனுக்கு) அமையா, மற்றுள்ள பெயர்ச் சொற்களும் பொருந்தாதான்.  (மற்றவைகளுக்கு ஒப்பாகா குற்றமற்ற ஒன்றோ டொன்றுபின்னிப் பிணைந்து மாற்றமடையாக் கலந்த வலிமை பொருந்தியவனான இறைவனுக்கு என் சிரத்தினைச்சாய்த்தேன்.


குறிப்பு :


மொழி, பதம், சொல், நான், நீ, நீர், நாம், நீவிர், நீங்கள்,நாங்கள், இஃது, அஃது,இவை, அவை, இவைகள்,அவைகள், அது, இது,முதலாம் எல்லாப் பெயர்ச் சொற்களும் மறுபதம் என்பதிற்சேருமென்க.  ஆனா : அமையா. மானா : ஒப்பாகாத.  மறு : குற்றம்.  இல் : இல்லாத. சாய்த்து : சாய்த்தேன்.