அவர்களும்... நீங்களும்...
ஹள்ரத் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் மக்கள் வந்து...
“ஒருவன் தன்னைத்தூய்மைப்படுத்திக் கொண்டுதான் பிறருக்கு அறிவுரை பகர வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்களே. அது பற்றித் தங்களின் கருத்து யாது?” எனக் கேட்டனர்.
இக்கேள்வியின் இரகசியத்தைவிளங்கிக் கொண்ட ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் “ஆம், ஒருவன் பிறருக்கு அறிவுரை பகர்வதற்குமுன்னர், தான் அவ்வறிவுரைப்படிச் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் அவனைப் பின்பற்றுவர். இல்லையேல், அவன் தன் முயற்சியில்தோல்வியுறுவான்” என்று கூறிவிட்டு “மக்களை நன்மைகளைச் செய்யுமாறு ஏவி, தீமைகளைத் தவிர்ந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்யும் இறைவழித் தொண்டு இவ்வுலகில்இல்லாது ஒழிய வேண்டும் என்று ஷைத்தான் விரும்புகின்றான்” என்று சுடச் சுடப் பதில் கொடுத்தார்கள்.
எனினும் கேள்விகேட்டவர்கள் இவர்களை விட்டார்களில்லை. “நோயாளன்தனக்கு முதலில் மருத்துவம் செய்து கொண்டல்லவோ பிறருக்கு மருத்துவம் செய்ய வேண்டும்”என்று இடக்காகக் கூறிய பொழுது, “நான் கூறும் அறிவுரைகளைக் கேளுங்கள். அதன்படி நீங்கள் செயலாற்றுவீர்களாயின் நிச்சயமாகஉங்களுக்கு நற்பலன் ஏற்படும். அதன்படி நான்செயலாற்றவில்லை என்றால் அதனால் உங்களுக்கு யாதொரு இழப்புமில்லை” என்று இதமாகப் பதிலுரைத்தார்கள்.
மீண்டும் அம்மனிதர்கள்ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களை நோக்கி, “எங்களின்இதயங்கள் உறங்கிக் கிடக்கின்றன. எனவே தங்களின்அறிவுரைகளால் எங்களுக்கு யாதொரு நன்மையும் ஏற்படவில்லை. இதற்கு நாங்கள் என் செய்வது?” என்று கூறியபொழுது, “உங்களின் இதயங்கள்உறங்கிக் கொண்டிருக்கவில்லை. செத்து மடிந்துவிட்டன. அதனால் தான் என்னால் உயிர்தெழச் செய்ய இயலவில்லை”என்று மறுமொழி பகர்ந்தார்கள்.
மேலும் மக்கள் அவர்களைப்பார்த்து, “நான் பத்ருப் போரில் கலந்து கொண்ட எழுபதுபேர்களைப் பார்த்துள்ளேன். அவர்கள் எத்தகையவர்களென்றால்அவர்களுக்கு இவ்வுலகம் பற்றிய எந்தப் பேச்சும் மகிழ்ச்சியளிக்காது. உலகாயுதப் பொருட்கள் எது கிடைப்பினும் அதுபற்றிஅவர்கள் மகிழ்ச்சியுற மாட்டார்கள். தாங்கள்எப்பொருளை இழப்பினும் அதுபற்றி துக்கப்படவுமாட்டார்கள். உலகமும் அதிலுள்ள பொருள்களும் அவர்களின் முன் தூசிக்கு நிகராகவே இருந்தன. அவை எவரிடம் போய் உள்ளன; எவரிடமும் போய்த் தங்கியுள்ளன என்பவை பற்றியயல்லாம் அவர்களுக்கு அணுவத்தனையும்கவலை இல்லை.
“நீங்கள் செல்வம்வந்துற்றபோது எத்துணை மகிழ்ச்சியை அடைவீர்களோ, அத்துணை மகிழ்ச்சியை அவர்கள் துன்பம் எய்தியபோது அடைவார்கள். அவர்கள் உங்களைக் காணின் இவர்கள் ஷைத்தான்களேயன்றிவேறில்லை என்று கூறுவர். ஆனால் நீங்களோ அவர்களைக்காணின் இவர்கள் பித்தர்களேயன்றி வேறில்லை என்று பகர்வீர்கள். உங்களில் நல்லோர்களை அவர்கள் காணின் இவர்களிடம்நற்பண்புகள் இல்லையே என்று கூறுவார்கள். உங்களில்தீயோர்களை அவர்கள் காணின் இவர்கள் நியாயத் தீர்ப்பு நாளை நம்பவில்லையே என்று கூறுவர். அவர்களிடம் ஒரே ஒரு துணியே இருந்தது. அதனை உடுத்திக் கொண்டே அவர்கள் வெறும் தரையில் படுத்துறங்குவர். நீங்கள் ஆகாத (ஹராமான) பொருள்களை நுகர்வதில் எத்துணைப் பேணுதலாக இருப்பீர்களோஅதை விட அதிகமான பேணுதலுடன் அவர்கள் ஆகுமான (ஹலாலான) பொருள்களையும் அணுகுவர். அவற்றால் தம் உள்ளம் மாசுகண்டுவிடுமோ என்று அஞ்சிஅவற்றை நுகராது ஒதுக்கித் தள்ளியும் விடுவர்”.
“பொழுது பட்டதும்அவர்கள் வணக்கத்தில் ஈடுபட்டு விடுவர். அவர்கள்இறைவனிடம் தம் பாபம் பொறுத்தருளுமாறு இறைஞ்சிக் கொண்டிருப்பார்கள். தம்மால் இவ்வுலகில் ஏற்பட்ட தீமைகளுக்காக வருந்திஇறைவனிடம் மன்னிப்புக்கோரி அழுது கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். தமக்கு இறைவன் செய்த நன்மைகளுக்கு அவர்கள் நன்றிசெலுத்திக் கொண்டிருப்பார்கள். தம்முடைய நன்றியறிதலைஇறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஏங்கி, ஏங்கி இறைஞ்சிக் கொண்டிருப்பார்கள்.
“அவர்கள் அனைவரும்கம்பளி உடையையே அணிந்திருந்தனர். அபூபக்ர்(ரலி) அவர்கள் உலகைத் துறந்து ஒதுங்கி ‘தஜ்ரீத்’ நிலையில் இருக்கும் பொழுது கம்பளிஉடையையே அணிந்து கொள்வார்கள். நான் ஸல்மான்ஃபார்ஸி (ரலி) அவர்களைப் பார்த்துள்ளேன். அவர்களும்ஒட்டுப் போடப்பட்ட கம்பளி உடையையே அணிந்திருந்தார்கள்” என்று கூறினார்கள்.
ஹஸன் பஸரீ (ரஹ்)அவர்களை வினாவிடுத்து மடக்க வந்தவர்கள் வெட்கித் தலைகுனிந்து மனமாற்றத்துடன் அங்கிருந்துஅகன்றார்கள்.