• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012 » Nov 2012 »  நின்றது ரயில்....

முரீத்களின் அனுபவக் கூற்று :

நின்றது ரயில்....

 

S.M.J. நஜ்முத்தீன்,  B.Sc.,  திண்டுக்கல்

 

சென்ற 13.10.12 சனிக்கிழமை இரவு சுமார் 10.30 மணிக்கு எமது உஸ்தாதுகிப்லா ஹள்ரத் அவர்கள், போன் செய்து எங்குஇருக்கின்றீர்? என்று கேட்டார்கள் அவரிடம் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கின்றேன்;திருவனந்தபுரம் இரயிலைப் பிடிக்க வேண்டும் என டென்­னுடன் கூறினேன். 

கிப்லா ஹள்ரத் : ரெயில் எத்தனைமணிக்குப் புறப்படும்?

நான் : சரியாக இரவு 10.45 மணி.

கிப்லா ஹள்ரத் : இப்போது எங்குஇருக்கின்றீர்கள்?

நான் : இப்போது தான் (10.30) கொடைரோட்டைத்தாண்டுகிறேன்!

கிப்லா ஹள்ரத் : நீங்கள்சொல்வதைப் பார்த்தால் 10.45க்குள் மதுரைக்குக் கூட போய்ச் சேர முடியாதே....எப்படிஇரயிலைப் பிடிக்க முடியும்?ஆமாம் ... நீங்கள் தாம் எப்போதும் முன்கூட்டியே சென்றுவிடுவீர்களே  இன்று ஏன் தாமதம்?

நான் : அல்ஹம்துலில்லாஹ்..ஆமாம் ஹள்ரத் ... எப்போதும் முன்கூட்டியே செல்வேன். ஆனால் இன்று தாமதமாகிவிட்டது!  நமது ஆத்ம சகோதரர் ஜனாப். V. ஷேக்ஜாபர் அலி ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் அருமைத் தாயார் (ஜனாபா ஹாஜிரா அம்மையார்) தவறி விட்டார்கள் அல்லவா?

 

(இன்னா லில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிஊன்) அவர்களின் ஜனாஸாவிற்குச் சென்று விட்டு. திண்டுக்கல் வந்துமதுரை புறப்படுவதற்குத் தாமதம் ஆகி விட்டது, ஹள்ரத் !


கிப்லா ஹள்ரத் :பரவாயில்லை.... திருவனந்தபுரம் இரயில் என்றாவது தாமதமாகப் புறப்பட்டதுண்டா ?

நான் : சுமார் 10 ஆண்டுகளாகஇதே இரயிலில் நான் பிரயாணம் செய்து வருகிறேன். அதிகபட்சம் உரிய நேரத்தில் இரயில் புறப்பட்டு விடும் !

ஒருசில நேரங்களில் கால்மணிநேரமோ, அரைமணிநேரமோ தாமதமாகப் புறப்படுவதுண்டு ! ஏன் கேட்கிறீங்க ! ?


கிப்லா ஹள்ரத் : இம்மாதிரியானஇக்கட்டான நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி சங்கைமிகு வாப்பாநாயகம் அருளிய வழிமுறையை நான் அறிவித்துத் தரட்டுமா ?

நான் : அல்ஹம்து லில்லாஹ் -அவசியம் கூறுங்கள்,ஹள்ரத் ?


கிப்லா ஹள்ரத் : இப்போது எந்தஇடத்திலிருக்கின்றீர்கள்?

நான் : வாடிப்பட்டியை நெருங்கிவிட்டேன் !


கிப்லா ஹள்ரத் : சரி.. இப்போதுமுதல் மதுரை ஜங்­னை அடையும் வரை பிஸ்மில்லாஹில்லதீ  லாயளுர்ரு  மஅஸ்மிஹி  ஷைஉன் ஃபில் அர்ளி வலா  பிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்”   என்னும் அற்புத தஸ்பீஹை ஓதிக் கொண்டே   இருங்கள் ; நிச்சயமாகஇரயிலைப் பிடித்து விடுவீர்கள். அது உறுதி!! 

(போனைத் துண்டித்துக்கொண்டோம்.)

வாடிப்பட்டியிலிருந்து மதுரைபெரியார் நிலையம் வரும் வரை (சுமார் அரைமணி நேரம்) பிஸ்மில்லாஹில்லதீ... தஸ்பீஹைஓதிக் கொண்டே இருந்தேன் ! பின்னர் மதுரை பெரியார் நிலையப் பேருந்துநிலையத்திலிருந்து வெளியே வந்தேன். ஒரு ஷேர் ஆட்டோ நின்றது. அதில் ஏறினேன்; விரைந்துசென்றது; ஜங்­னையடைந்து உள்ளே சென்றேன்.இரண்டாவது பிளாட்பாரத்தையடைந்து விரைவாக நடந்து சென்றேன். ஓர்இரயில் நின்றது ! அருகிற் சென்று பார்த்தால்.. அது நான் செல்ல வேண்டியதிருவனந்தபுரம் வண்டி தான் ! அவசரமாக ஏறி என் இருக்கையில் அமர்ந்து, கிப்லாஹள்ரத்திற்குச் சேதியைச் சொல்லிய போது என்னையும் அறியாமல் கண்ணீர் மல்கியது!சங்கைமிகு வாப்பா நாயகமவர்களின் கராமத்தை என்னவென்றுரைப்பது? அன்று (மட்டும்) இரயில் புறப்பட்ட நேரம் 12.00 மணி (அதாவது ஓர் இரயில் 11/4 மணிநேரம் எனது வருகைக்காக காத்திருந்தது என்றால், என்ன...ஓர் அற்புதம்?) 

                                                           கலீல் அவ்ன் என  நாம் அழைத்தால்...

கதி மோட்சம் கிடைத்துவிடும் !

கலீல் நாதர் பாதங்களே

கறை நீக்கும் போதங்களாம் !!

 

 

 

 

பெருமானார் நூர் (ஒளி) இல்லையா ?

அருமை நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நூர் இல்லை.அவர்கள் அல்லாஹ்வின் ஒளியில்லை. அவர்களின் ஒளிவிலிருந்து எதுவும்படைக்கப்படவில்லையயன வஹ்ஹாபிகள் வாதம் புரிவர். அவர்களுக்கு ஒரு கேள்வி ?

பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரு பெண்மக்கள் (உம்முகுல்தூம்,ருகையா (ரலி) ) இருவரையும் திருமணம் முடித்த ஹள்ரத் உதுமான் (ரலி)அவர்கள் “உதுமான்” தின்னூரைன், இரு ஒளியை மணந்த உதுமான் எனஅழைக்கப்பட்டார்கள்.

இரு ஒளி என்பது பெருமானாரையும் இருமகளாரைக் குறித்தேசொல்லப்பட்டது. பெருமானாரின் பெண்மக்கள் நூர் - ஒளி என ஏற்றுக் கொண்டு நூற்களில்எழுதும் வஹ்ஹாபிகள் அந்த ஒளிகளுக்குத் தந்தையான நபிகளாரை நூர் இல்லையயன மறுப்பதுஅறிவீனத்தின் உச்சமல்லவா
?


காதில் கேட்டது....

ஜமாஅத்தில் அடிக்கடி போய்வந்து கொண்டிருந்த கல்லூரி நண்பனைப் பார்த்து ஒரு நண்பன்,  டேய் சலீம் 2ஜியயல்லாம் போய்இப்போது 3ஜிதான் ஸ்பீடா ஒர்க் ஆறது உனக்குத் தெரியுமா என்றான். 

அதற்குள் மற்றொரு நண்பன்குறுக்கிட்டு
, விடுறா..அவனை.. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் டில்லி ஹஸ்ரத் ஜீ தான் என கிண்டலடித்தான்....