• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

About Us  »  கொள்கைகள் - நோக்கங்கள்

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை:  கொள்கைகள் - நோக்கங்கள்


1. சங்கத்தின் பெயர்: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை என்று அழைக்கப்படும்


2. சங்கத்தின் நோக்கங்கள்:


  1. மதத்தால், இனத்தால் மொழியால் பிளவுபட்டுள்ள மனித சமுதாயத்தை ஆன்மீகத்தால் ஒன்றிணைத்து மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் பேணிப் பாதுகாத்தல்.

  2. மெய்யஞ்ஞான விளக்கம் நல்கி இறைவனை அறிய வழிகாட்டுதல்

  3. அனைத்து வேதங்களின் குறிக்கோளும் மெய்ஞ்ஞானத்தில் ஒன்றே எனும் உண்மையை உணரச்செய்யவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அழகுடன் போதிக்கப்பட்ட இஸ்லாத்தின் அழகு நெறி முறைகளை எடுத்துச் சொல்லியும், அவர்கள் காட்டிய இறை ஞானத்தை மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்து, வேற்றுமை நீக்கி, ஒற்றுமை, அன்பு ஆதியன வளரச் செய்து, எங்கும் சாந்தியும், சமாதானமும் நிலவவும், சமத்துவம் சகோதரத்துவம் நிலைக்கவும் பாடுபடுதல்.

  4. மெய்ஞ்ஞான நூல்கள் வெளியிடல்.

  5. யோகப்பயிற்சி மூலம் மெய்யுள வளர்ச்சி பெற்று உள்மறைந்துறையும் மாசக்தியை வெளியே கொணர்ந்து தன் வயப்படுத்தல்.

  6. மனிதன் தன்னை அறிவதான சுயதரிசன அனுபவம் பெற பயிற்சி அளித்தல்.

  7. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தின மீலாது விழாவினை வெகு சிறப்பாகக் கொண்டாடுதல் மேலும் ஞான மகான்களை நினைவு கூர்வதன் மூலம் அவர்களின் கொள்கைகளை நிலை நாட்டல்.

  8. நாட்டுப் பற்றுடன் வாழ உதவுதல்

  9. இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காமலும், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சட்டதிட்டங்களை மதித்து முழுமையாகக் கட்டுப்பட்டு நடத்தல்.

  10. தீவிரவாத கொள்கைகள் மக்களிடம் பரவாமல் தடுக்கப்பாடுபடுதல்

  11. மானிட தேவ சக்திகளையறிந்து, இரண்டறக் கலக்கவும் பூரணத்துவம் அடைய முயலவும் வாய்மையும் சாந்தியும் வாய்ந்த நல் வாழ்வு வாழப் பாடுபடுதல்.

  12. மானிட வாழ்க்கையில் இன்றியமையாத சுகாதாரம் முதலான அவசியமான கல்விகளில் தேவையான விளக்கங்களைத் தேவைக்கேற்ப நல்குதல்.

  13. கல்விக் கூடங்கள். தொழிற் பயிற்சிக் கூடங்கள் மருத்துவப் பணிமனைகள் அமைத்து மக்களுக்கு சேவை புரிதல்.

  14. பொது நல சேவை புரிதல்

  15. ஆக்கமும் ஆக்கங்களுக்கு உறுதுணை புரிதல்.


ஸ்தாபகர், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை