மெய்யொளி பதில்கள்
நமது இருப்பும் பொறுப்பும் எதனை உணர்த்துகின்றது?
“பற்றுக பற்றற்றான் பற்றினை”.
அன்பியாக்களுக்கும் அவ்லியாக் களுக்கும் நேர்ச்சை செய்திடல் கூடாது... என்போருக்குத் தங்களின் பதில்?
“நம்பினார் கெடுவதில்லை” இது நான்கு மறைகளின் தீர்ப்பு.
நாம் “இங்கு வந்திருக்கும்” வியத்தை யார் அறிந்திருக்கின்றார்கள்?
அவன் முன்பு உள்ளதுபோல் இப்பொழுதும் இருக்கிறான் என்பது நபி மொழி.
அவ்லியாக்கள் செய்யும் உதவிகள் அன்னவர்களுடையதா? ஆண்டவனுடையதா? எப்படி?
மரம் காய்க்கின்றதா? கிளை காய்க்கின்றதா?.
வானத்திற்கும் பூமிக்கும் இடையே பர்ஜக் - ஒரு திரை உள்ளது : மேலுள்ளவர்கள் கீழேயும் கீழிலிருப்பவர்கள் மேலேயும் செல்லுதல் இயலாது என ஓர் ஆலிம் கூறுகிறார். தங்களின் விளக்கம்?
“திரை இருந்தால்” மேலும் கீழும் போக முடியாது தானே.
இபுலீஸ் இறைமுனிவுக்கு ஆளானதின் உண்மையான காரணம் என்ன?
ஆணவம்
வலி என்பவர் யார்?
இறையின் அருட்சுடர்.
எத்தகு அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் வாரிசாவார்கள்?
இறவா இறையிடமிருந்து இறையறிவு பெற்றவர்கள்.
“அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் அறிஞர்களே” எனும் திருமறைக் கூற்றின் உண்மை விளக்கம் என்ன?
அல்லாஹ்வை பரிபூரணமாக அறிந்தவர்களே (அறிஞர்கள்) அல்லாஹ்விற்கு அஞ்சுவார்கள்.
நஃபிலான வணக்கங்களைக் கொண்டே மனிதன் இறைவனை நெருங்க முடியும்... என ஹதீதில் கூறப்பட்டதன் இரகசியம் என்ன?
ஆயிரம் இரவுகள் நின்று வணங்குவதைவிட ஒருமணி நேரம் இறைவனைப்பற்றி சிந்திப்பதே மேலானது. (நபி மொழி) அறிவைக் கொண்டுதான் இறைவனை நெருங்க முடியும். (அலி (ரலி) ). இப்பொழுது கூறுங்கள் நபிலான வணக்கங்கள் என்னவென்று?
மனிதன் அல்லாஹ்வின் இரகசியமாகச் செயல்படுகின்றானா? எப்படி?
”இரகசியம்”
ஒரே காலகட்டத்தில் பல குத்புமார்கள் இருப்பார்களா? அவர்களில் ஒரு மகானை மட்டும் குத்புஸ்ஸமான் என எவ்வாறு கண்டறிவது?
வைரத்தின் தன்மையைக் கொண்டுதான் வைரத்தின் சிறப்பை அறியமுடியும்
இறை நேசர்கள், இறைவனால் எப்படி பயிற்றுவிக்கப்படுகின்றனர்?
பிரபஞ்சமே குரு.
இறையோடு “ஐக்கியமாகுதல்” எங்ஙனம்?
“பிரிந்தால் தானே”
இறந்துபோனவர்கள், மண்ணோடு மண்ணாக ஆகிவிட்டார்கள்! அவர்களை விளிப்பதால் எத்தகு நன்மையும் இல்லை... எனக் கூறும் வஹ்ஹாபிகளுக்குத் தங்களின் விளக்கம்?
மாற்றங்கள், அழிவல்ல.
அடிக்கடி மண்ணறைகளைத் தரிசனஞ் செய்யக் கூடாது... எனக் கூறப்படுவது உண்மையா? ஏன்?
எதை மண்ணறை என்கிறீர்கள்?
இறந்த பின்னரும் இறை நேசர்கள் உயிரோடு இருக்கின்றார்கள் என்பது இயற்கை நியதிக்கு விரோதமானது என ஓர் அறிஞர் கூறுகிறார்! தங்களின் விளக்கம்?
ஆற்றலை உண்டாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது என்ற அறிவியல் கருத்து இயற்கை நியதிக்கு விரோதமானதா?
மனிதர்களில் சிறந்தோர் யார்? ஏன்?
ஆணவமற்றோர்
தன்னையறிந்தவன் எப்படி தன்னிறையை அறிகிறான்?
ஏதாவது ஒன்றைப்பற்றி அறிய வேண்டுமானால் அதைப் பற்றித்தானே அறியவேண்டும்.
இறையை அறிய குருவின் அருள் தேவையா? அன்பு தேவையா?
குருவில் ஒன்றிப்பு
நான் இறையை அறிந்துள்ளேனா, எந்த அளவிற்கு அறிந்துள்ளேன்... என்பதனை எவ்வாறு விளங்குவது?
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்ற வசனத்தை எந்த அளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதைக் கொண்டு.
ஷரீஅத்தை மட்டும் பேணுதலாகச் செய்வோர் பற்றி?
“கைகாட்டி”யில் நின்று கொண்டு பயணத்தை முடிக்க நினைப்பவர்கள்.
சங்கைமிகு ஷைகுநாயகமவர்களின் புனித உதய தின விழாவினை முன்னிட்டு “பேழை” வாசகர்களுக்குத் தாங்கள் வழங்கும் சேதி?
வணங்கும் தெய்வமும்
வழிகாட்டும் குருவும்
ஒன்றெனக் கண்டவனே
உண்மையான முரீது