• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »  பேரொளி என்னும் வழிகாட்டியும் மூன்று கேள்விகளும்


பேரொளி என்னும் வழிகாட்டியும் மூன்று கேள்விகளும்

சூபி. அப்துல்கரீம், ஹக்கிய்யுல், காதிரி. எமனை.

 


இவன் தன் ஆத்மீகப்பயணத்தில்

சோர்வுற்றுத் தயங்கி நின்ற போது 

பேரொளி : 

“சர்வமும் ‘நான்’ ஆனபோது

சந்தேகம் வருவதேது” என்றது.

இவன்:
​“‘நான்’ எனறால்,?” என்று கேட்டான்.

அதற்குப் பேரொளி:

“எங்கும் நிறைந்த ஏகம்

எல்லாம தான ஏகம்

அது ‘நீ’ யதான ஏகம்,” என்றது.

இவன்:

“நீ என்றால்?,” என்று கேட்டான்.

அதற்குப் பேரொளி:

“ ‘நான்’, ‘நீ’, அவன் என இடனில்லா

வானே, மண்ணே, என்றில்லா

மற்றும் பூதம் அவை இல்லா

தானே தன்னிற் றானான

தனித்த ஏக சின்மயமே!,” என்றது

போதையால் இவன் தூல உடல் அன்புத் தொல்லைக்கு ஆளானது.  தேடுபவனுக்கும் தேட்டப்பொருளுக்கு மிடையில் பேரின்ப ஆசை திரையாக இருப்பது இப்பொழுது இவனுக்கு உணர்த்தப்படுகிறது.  மேற்கூறிய படி அந்த மெய்ப்பொருளின் மடியைத் தொட்டிலாக்கி பேரொளியானது சோர்வுற்று செயலிழந்து இருந்த இவனை அதில் யோக நித்திரை செய்ய வைத்தது.  பின்னர் நடப்பன வெல்லாம் நடக்கின்றன.  வா அன்பே வா.  நம்பூர்வீக தானத்தை நோக்கிச் செல்லுவோம்.