• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Oct 2011   »  மாநபிகள் மணிமொழிகள்


மாநபிகள் மணிமொழிகள்


ஹதீஸ் பக்கம்​பாகவி பின் நூரி, சித்தரேவு

அன்னதானம்​

​நிறைந்த உள்ளத்தோடும், மலர்ந்த முகத்தோடும் ஏழை மிஸ்கீன்களுக்கு அன்னதானமளித்தால், அல்லாஹ் அவனுக்கு ஆயிரம் நன்மைகளை எழுதி, ஆயிரம் தீமை (சிறுபாவங்களை) அழித்து விடுவான்.

இறைப்பொருத்தம்

அல்லாஹ் தன் அடியார்கள் மீது நாடியதைச் செய்கின்றான்.  அதை அவன் பொருந்திக் கொண்டால், இறைப் பொருத்தம் அவனுக்கு உண்டாகும்.  இறைவன் மீது முனிவு கொண்டால். அம்முனிவு அவனுக்கே நாசத்தை விளைவிக்கும்.

தொழும் முறை

தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் சொன்னால் விரல்களை விரித்துவை. தோள் புயம் வரை கைகளை உயர்த்தி, தக்பீர் கட்டும் போது வலது கையை இடது கையின் மீது, நெஞ்சிற்குக் கீழே வைக்கவும்.  ருகூவு செய்தால் உனது உள்ளங்கையை முட்டுக்காலின் மீது விரித்துப் பிடிக்கவும்.  இவ்விதமாகவே நான் (நபி-ஸல்) அவர்கள், வான் மண்டல மலக்குகளைப் பார்த்தேன்.  இதுவே இறைவனைப் பணித (தொழுத) லாகும்.

தீவிரம் காட்டு

முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுக, ஏனெனின் அல்லாஹ் உன் தேவைகளைப் பூர்த்தியாக்குவதில் தீவிரம் காட்டுவான். தேவையுடையவன் உன்னைத் தேடி வந்தால், அது அல்லாஹ் உன் மீது காட்டும் கருணையாகும் என்று எண்ணிக் கொள். ஏனெனின் அல்லாஹ்உனக்குப் பிழை பொறுத்தலையும். உன் தேவையைப் பூர்த்தியாக்குவதையும் நாடிவிட்டான்.

கோபம்

அல்லாஹ் தன் அடியார்களில் ஒருவர்மீது கோபம் கொள்ள நாடிவிட்டால் விருந்தினர்களை அவனை விட்டும் தடுத்துக்கொள்வான்.  அவன் மீது வெறுப்பு ஏற்பட்டால்பொருளாதாரத்தை அவனுக்குக் குறைக்க மாட்டான்.

நன்றி

இறையருளுக்கு நன்றி செலுத்த நாடினால், உன்னைவிட உயர்ந்தவனைப் பார். அல்லாஹ்வை, அஞ்சுங்கள், அதனால் அல்லாஹ் ஈமானையும், எகீனை (உறுதியை)யும் அதிகமாக்குவான்.

எச்சரிக்கை

ஈமானுடையவன் ஆனால் பாவியானவன்.  அது ரிஜ்கையும், வயதையும் குறைத்திடும் கருவியாகும். அநீதம் இழைக்கப்பட்டவனின் சாபத்தைப் பற்றி எச்சரிக்கை செய்கின்றேன். அல்லாஹுதஆலா அவனின் சாபத்தை ஏற்றுக் கொள்கிறான்.  அவன் இறை மறுப்பாளனாக இருப்பினும் சரி.

வேண்டாம் வேண்டாம்

பகலின் ஆரம்பத்திலும், அந்தியிலும் தூங்க வேண்டாம்.  இஷா தொழுகைக்கு முன்பாகத் தூங்க வேண்டாம்.  இருட்டு வீட்டில் தனியாகத் தூங்க வேண்டாம். மஞ்சள் கலர், குங்குமப்பூ கலர் ஆடையில் தூங்க வேண்டாம்.  மர நிழலில். வெயிலில் தூங்க வேண்டாம்.  உலுத்த (கஞ்ச)னின் அருகில் உட்காரவேண்டாம்.

உட்கார்ந்திருப்பவர்கட்கு மத்தியில் தூங்க வேண்டாம்.  இடது கையால் சாப்பிட வேண்டாம், குடிக்க வேண்டாம்.  உட்கார்ந்த நிலையில் உன் கன்னத்தில் கையை வைக்க வேண்டாம்.  உன் பற்களை நரநரவென கடிக்க வேண்டாம்.  விரல்களை கோர்க்க பிரிக்க வேண்டாம்.

சல்லடை மேல் உணவை வைத்து சாப்பிட வேண்டாம்.  தட்டையை கவிழ்த்து வைத்து அதன்மீது சாப்பிட வேண்டாம்.  சட்டையைக் கழற்றும் போது, இடது கைக்கு முன்பாக, வலது கையை கழற்ற வேண்டாம்.  இறைச்சியைக் கடிப்பது போன்று ரொட்டியை (முன்பற்களால்) கடிக்க வேண்டாம்.  மண்ணைத் திண்ண வேண்டாம். இரவில் கண்ணாடி பார்க்க வேண்டாம்.