தொடர்.......
சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
ஹள்ரத் ரபிஃ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். ஒரு கிணற்றில் எலி விழுந்து இறந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் : 20 முதல் 30 வாளி தண்ணீரை இரைத்து விட்டால் போதும்.
ஒருவர் : எலியை விட கொஞ்சம் பெரியதான ஒன்று கிணற்றில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் ?
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் : 40 முதல் 60 வரையிலான வாளி தண்ணீரை இரைத்துவிட்டால் அந்தக் கிணற்று நீர் தூய்மையாகி விடும்.
மற்றொருவர் : ஒருவர் ஒளுச் செய்ய நாடி கையைக் கிணற்றில் வைத்தால் அந்தக் கிணறு முழுவதும் நஜீஸ் ஆகிவிடும் ; அத்தண்ணீர் முழுவதையும் இரைத்து விட வேண்டும் என்பதாகத் தாங்கள் கூறினீர்களா ?
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் :மெய்தான் (உண்மை தான்) ஆனால் நஜீஸான தண்ணீரை சிலவற்றைப் போக்கினால் மற்றவை அனைத்தும் துப்புரவாகி துப்புரவான கையை ஒளுவுடைய நாட்டம் கொண்டு தண்ணீரில் கை வைப்பதால் அத்தண்ணீர் முழுவதும் நஜீஸ் ஆகிவிடும். எனவே அத்தண்ணீர் முழுவதையும் இரைத்துவிட வேண்டும்.
இவ்வாறு இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் கூறியதை மற்ற அறிவிப்பாளர்கள் இச்சட்டம் புதுமையாய் இருந்தாலும் நயமானச் சட்டம் தான் என்றார்கள்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்)அவர்கள் அல்லாத வேறு யாராவது கூறியிருந்தால் இச்சட்டம் சிறுப்பிள்ளைத் தனமானது என்று எல்லோரும் சொல்லக் கூடும் !
ஹள்ரத் ரபீஃ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம், ஹஸன் இப்னு ஜியாதில் லுஹ்லுயி என்பவருடன் தாங்கள் தகராறு செய்வதை நான் கேட்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னேன். அப்போது அவர் என்னோடு தகராறு செய்யும் அளவிற்கு தகுதியில்லாதவர். கூஃபாவில் இருந்த மனிதர் ஒருவர் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் மத்ஹப்பிலிருந்து என் சொல்லளவில் திருந்திய மனிதனை தருவித்து வைத்துக் கொண்டு லுஹ்லுயைக் கூட்டி வரும்படிச் செய்து அவர் வந்தவுடன் லுஹ்லியிடம் பேசச் சொன்னார்கள் கூஃபி கேட்டார் :ஓ ! லுஹ்லுயே, மனிதர் ஒருவர் தொழும் நேரத்தில் ஒரு பத்தினியைக் குற்றம் சாமத்தினால் அவர் தொழுகை கூடுமா ? அதற்கு லுஹ்லுயி, அவர் தொழுகை முறிந்து போய்விடும் என்றார்.
கூஃபி கேட்டார் : அவருடைய ஒளு முறியுமா ? அதற்கு ஒளு முறியாது என்றார்,லுஃலுயி
மீண்டும் கூஃபி கேட்டார் : தொழுகையில் ஒருவன் கேகே என்று சிரித்தால் ஒளு முறியுமா ? அதற்கு லுஹ்லுயி கேகே என்று ஒருவர் தொழுகையில் சிரித்தால், தொழுகையை முறிந்து விடும் ஒளுவும் முறிந்து போகும் என்றார்.
மீண்டும் கூஃபி கேட்டார்: தொழுகை நேரத்தில் ஒரு பத்தினி பெண்ணை அவதூறு சொல்வது தொழுகையில் கேகே என்று சிரிப்பதைவிட லேசானதா ? என்று கேட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்பதும் லுஹ்லுயி தன் செருப்புகளை எடுத்துக் கொண்டு, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தார். இப்படிப்பட்ட குறைமதியாளர்களிடம் நிறை மதியாளரான இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தர்க்கம் செய்வது எவ்வாறு பொருந்தும் ?
இமாம் ஷாஃபிஈ (ரஹ்)அவர்கள் கூறியதாக இமாம் பக்ருதீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : அந்த லுஹ்லுயி செருப்பை எடுத்துக் கொண்டு ஓடாமலிருந்து கியாஸ் பிடிக்காமல் ஹதீஸைக் கொண்டு சொல்வோம் என யாராவது கூறினால் அவர்களிடம் நாங்கள் கேட்கிறோம் : செருப்புடைய சங்கதியில் பிறந்த ஹதீஸ் லயிஃப் (பலஹீனமானது) மடுவில் பாலைக் கட்டி மடிப்பாய் விற்கப்பட்ட விலங்குடைய சங்கதியில் பிறந்த ஹதீஸ் ஸிஹ்ஹாயிருக்க அதில் கியாஸை முற்படுத்திவிட்டீர்களா ?
மஹ்தவைகி என்னும் பிரபலமான இலக்கண இலக்கிய அறிந்த அறிஞர் கூறுகிறார்
இதன் பொருள் : உலமாக்களில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் உவமானம் வானத்தில் உள்ள பிறை மற்றும் நட்சத்திரங்கள் போலாகும் . அல்லாஹ்வின் மீது ஆணையாக மனிதர்களுக்கு தலைவராகவும் வேதாந்தங்களில்அதிக விளக்கம் உடையவராகவும் சகல கலைகளிலும் விளையும் தளமாயும் இருக்கிறார்கள்.சொல்லில் அழகும், ஹதீஸ்களில் நபி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றக் கூடியவராகவும் மடையர்களுக்கு (மூடர்களுக்கு) ஹலாக்கை (அறிவை) தரிப்படுத்த கூடியவராகவும் அமைந்து விட்டார்கள்.
(இமாம் அவர்களின் இன்ஷா அல்லாஹ் அருஞ்சிறப்புகளை அடுத்த இதழிலும்அவதானிப்போம்)