அழகோ அழகு - சிறப்பழகு
ஆறு குணம், அறுவருக்கு அழகு; மற்ற அறுவருக்கு சிறப்பழகு.
1. நீதம், மனிதனுக்கு அழகு, அதுவே தலைவர்களுக்கு சிறப்பழகு
2. தருமம் மனிதனுக்கு அழகு, அதுவே செல்வந்தர்களுக்குச் சிறப்பழகு
3. பேணுதல் மானிடர்கட்கு அழகு, அதுவே ஆலிம்களுக்குச் சிறப்பழகு
4. பொறுமை, மனிதர்களுக்கு அழகு அதுவே ஏழைகட்கு சிறப்பழகு,
5. பிராயச் சித்தம் மானிடர்கட்கு அழகு, அதுவே வாலிபர்களுக்கு சிறப்பழகு,
6. நாணம் மனிதர்கட்கு அழகு, அதுவே மங்கையர்களுக்கு சிறப்பழகு.
உப்பில்லா உணவு
தலைவன் நீதவானாக இல்லை எனின், மழை பெய்யா மேகத்தைக் போன்றாவான்.
செல்வந்தன் தர்மவானாக இல்லை எனின் பழமில்லா மரம் போன்றாவான்.
ஆலிம் பேணுதலாக இல்லை எனின், மற்றவர்களின் நன்மைக்காக, தன்னைத் தானே அழிக்கும் மெழுகுவர்த்தி போலாவான்.
ஏழை பொறுமையாக இல்லை எனின், புல் பூண்டற்ற பூமி போலாவான்.
வாலிபன் பிராயச் சித்தம் செய்யாதவனாக இருப்பின், தண்ணீரில்லாத கிணறு போன்றாவான்.
மங்கையர்கட்கு மானம், நாணம் இல்லை எனின் உப்பில்லா உணவு போன்றாவாள்.
நபிமார்களின் கூலி
தலைவன் நீதமாக இருப்பின், அவனுக்கு இஸ்மாயீல் (அலை) அவர்களின் கூலி போன்று கூலி கிடைக்கும்.
செல்வந்தன் தர்மவானாக இருப்பின், இப்ராஹீம் நபி (அலை) யின் கூலி போன்று கூலி கிடைக்கும்.
மங்கை மான நாணமுள்ளவனாக இருப்பின், மரியம் (அலை) அவர்களின் கூலி போன்று, கூலி கிட்டும்.
ஆலிம் பேணுதலாக இருப்பின் யாகூப் நபி (அலை) யின் கூலி போன்று நற்கூலி கிடைக்கும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊது (ரலி) அறிவிக்கின்றார்கள். அல்லாவிற்காகவே,சிலர் வாழ்வர்.அல்லாஹ் தஆலா அவர்களை தன் அருள் வடிவாகவே படைத்துள்ளான்.
மக்களில் சிலரை, தன் அருகிலிருந்து விலகிச் செல்பவராக சிலரை, பிறருக்குத் துன்பம் விளைவிப்பவராகப் படைத்துள்ளான். தேவையின் போது, அருளாவர்களிடம் வருவர். தேவை நிறைவேறிய பின், திடுக்கத்திலிருந்து நிம்மதியடைவர்.
மறுமை நாள்
பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
என் உம்மத்தினர் மீது ஒரு கால கட்டம் வருவதை நான் பயப்படுகின்றேன். அன்று மறுமை நாளின் அடையாளங்கள் மலிந்திருக்கும் என்று. அந்தக் காலத்தின் அறிகுறிகள் யாவை என வினவப்பட்ட போது, பதில் உரைத்தார்கள்.
நண்பன், நண்பனுக்கு தோழன், தோழனுக்கு தொல்லை கொடுப்பர்.
அந்த நாளில் நாணம் எனும் திரையை நங்கையர் கிழித்தெறிந்து விடுவர்.
மக்களுக்கு மத்தியில், நம்பிக்கை மோசம் அதிகமாகும்.
விபச்சாரம் செய்வது கொண்டு பெருமை பேசுவர். அவர்களுடைய பள்ளிவாயயில் (மஸ்ஜிது)கள் விழா நடத்தும் இடமாகவும், வழக்காடும் மன்றங்களாக, வியாபார (ஸ்தல) இடமாக ஆகிவிடும்.இதற்குத் தான் முக்கியத்துவம்)
அவர்களின் உள்ளம் ஈமானை இழந்திருக்கும் உண்மை ஊமையாக, பொய், மெய்யாக இருக்கும். மெய்யுரைப்பவன் மடையனாவான், மெய்யுரைப்பவன் பழிச்சொல்லிற் ஆளாவான். பொய்யுரைப்பவன் புத்திசாலியாவான் என் உம்மத்தினர்கள் மீது ஒரு கால கட்டம் வரும்.கர்வத்தாலும், ஆணவத்தாலும் பெருமையடிப்பார்கள். அறிவு, ஞானத்தை வெறுப்பார்கள். கெட்டதை விரும்புவார்கள். நன் நடத்தை, துர் நடத்தையாகவும்,துர் நடத்தை, நன் நடத்தையாகவும் ஆகி விடும். விசுவாசி (ஈமான்தாரி) கேவலப்படுத்தப்பட்ட வனாகவும், அவிசுவாசி (ஈமான் இல்லாதவன்)கண்ணியவானாகவும் ஆகி விடுவான்.
விவாகரத்துக்குப் பதிலாக (ஈமானை) விசுவாசத்தை பரிமாற்றம் செய்வார்கள்.அவர்கட்கு அவர்களின் மனையாள் ஹராமாகி விடுவாள். அவர்களின் மக்கள், தாய், தந்தையரின் ஏக்கத்தால்,பைத்தியங்களாகி விடுவர்.
இஸ்லாமியர் (முஸ்லிம்) கள் பற்பல கூட்டத்தினர், கொள்கையினராக மாறி விடுவர். பள்ளிவாயில்கள், பற்பல கொள்கையினரால் வதியும். சிலர் சிலரை சபிப்பார்கள். கடமையான தொழுகை முதலியவற்றை விட்டு விடுவர். ஏழைகளை ஊனமாகப் பார்ப்பார்கள்.
பெரியோர்களின் அச்சம்அகத்திலிருந்து (உள்ளத்திலிருந்து ) அகன்று விடும். அவர்களில் பொறாமை அதிகமாகும்.பிள்ளை, பிதாவின் மரணத்தை எதிர்பார்ப்பான். மக்களில் பொய்யும், புரட்டும் விபச்சாரமும், அதிகமாகும். குழப்பவாதிகளும், நயவஞ்சகர்களும் சாட்சிகளாவர். மதுபானம் அருந்துவர். தர்க்கம் புரியவே கல்வி கற்பர். பாடலைப் போன்று திருமறை குர்ஆனை ஓதுவர்.திர்ஹமும், தீனாரும் முன்வருவது போன்று பொய்ச்சாட்சிக்காக முன் வருவர். வட்டி ஆகுமென்று நீதிபதி தீர்ப்பு வழங்குவார். பாடகன்மனோ இச்சைப்படி பாடுவான். கையூட்டு (இலஞ்சம்) வாங்கிக் கொண்டு சாட்சி சொல்வர்.
��0