சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்
அமுத மொழிகள்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் ஆத்ம உலகக் காட்சி பற்றி
ஷைகு நாயகம் அவர்களின் அரிய விளக்கம் !
(“இப்றாஹீம் உறுதிகொள்ளும் பொருட்டு, வானங்களிலும் பூமியிலுமுள்ள (நம்முடைய) சிருஷ்டிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்”)
“(ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில், (பிரகாசித்துக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தை அவர்கண்டு” இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)” எனத் தம் மக்களைக் கேட்டு, அது மறையவே, “மறையக் கூடியவற்றை” (இறைவனாக்கிக்கொள்ள) நான் விரும்ப மாட்டேன் எனக் கூறி விட்டார்.”
“பின்னர் உதயமான சந்திரனைக் காணவே, “இது என்னுடைய இறைவன் (ஆகுமா?) எனக் கேட்டு, அதுவும் மறையவே (அதனையும், நிராகரித்துவிட்டு) “என் இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தாவிடில், வழி தவறிய ஜனங்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகி விடுவேன்“ என்று கூறினார்.”
“பின்னர் உதயமான (பேரொளியுடன் பிரகாசிக்கும்) சூரியனைக் கண்டபொழுது, “இது மிகப் பெரியதாயிருக்கிறது. இது என்னுடைய இறைவன் (ஆகுமா?) எனக் கேட்டு அதுவும் மறையவே அவர்(தம் மக்களை நோக்கி) “என் மக்களே ! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிட்டு,
“வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு) வனின் பாலே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகிறேன். நான் (அவனுக்கு எதனையும்) இணைவைப்போன் அன்று” என்று கூறினார்.”
(அல்குர் ஆன் 6:75,76,77,78,79)
(மேற்கண்ட திருவசனங்களுக்கு சங்கைக்குரிய நமது ஷைகு நாயகம் அவர்கள் அருளிய(ஹக்கத்தான) யதார்த்தமான உள்ரங்கமான விளக்கங்களை வாசகர்களுக்கு அப்படியே இங்கு வழங்குவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம். - ஆசிரியர்)
ஹக்குப் பரிசுத்த குர்ஆனில் ஹிக்மத்தைக் கையாண்டுள்ளது. ஹக்கின் “பைளை” அடையாத பொது மனிதர்களுக்கு அதன் வெளிரங்கமான அறிவு உபயோகப்படுகிறது. ஹக்கின் “பைளை” அடைந்த ஆத்ம ஞானிகளுக்கு அதன் உட்கருத்து ஹக்கை அடையப் பெருந்துணை புரிகிறது. ஹக்கு ஸுப்ஹானஹு தஆலா கூறியவற்றிலும், நம் பாட்டனார் ரஸூலுள்ளாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவற்றிலும் இருவகைப்பட்ட கருத்துக்கள் அமைந்துள்ளன. பொதுமக்களிடத்துப் பொதுவான கருத்தையும் வெளிரங்கமான கருத்தையும் விசேஷமான மக்களிடத்து விசேஷமான (உள்ரங்கமான) கருத்தையும் தேவையான நேரங்களில் வெளியிட்டார்கள்.
ஹக்கு கூறுகிறது; நாம் இப்றஹீம் (அலை) அவர்களுக்கு வானத்தினுடையவும் பூமியினுடையவும் ஆத்ம (அமர) உலகத்தைக் காட்டினோம். அமர உலகமாவது;சக்தி பொருந்திய ரூஹானிய்யத்தான உலகமாகும். வானத்தினதும் பூமியினதும் நிர்வாகம் ரூஹின் சக்தி கொண்டே (ஹக்கால்) நடக்கிறது. எனவே ஒவ்வொரு பொருளுக்கும் மலக்கூத்தின் சக்தி(மலக்கூத் என்னும் சக்தி) இருக்கிறது. அதுஅதனைக் காப்பாற்றுகிறது. (அதன்) பொருளின் கருமத்தை நிர்வகிக்கிறது. ரூஹானிய்யத் மலக்கூத் இரண்டும் ஒன்றாகும். அவர்கள் மீது இருள் இருண்ட போது நட்சத்திரத்தைக் கண்டார்கள். அதாவது ஹகீகத்தை அறிகிறதின் பால(ப்) பருவத் (ஆரம்ப காலத்) தில் இயற்கையான சடலத்தின் உலகத்திலே இருள் எனும் சந்தேகம் உண்டானபோது மானிட கோலத்தின் மலக்கூத்தாகிய ஆத்ம உலகத்தைக் கண்டார்கள். அதுவே நப்ஸ் அல்லது ரூஹு ரெளஹானிய்யத் என்னும் எண்ணத்தினை “ரப்பு” ஆகக் கொண்டார்கள், அதிலே ஹக்கின் அருளையும் சீவனையும் ருபூபிய்யத்தையும் கண்டார்கள். இதில் “முஹிய்யு” என்னும் நாமத்தைக் காட்டியருளியது. எனவே இங்கே கவ்கபு (நட்சத்திரம் என்பது நப்ஸ் ஆகும். நப்ஸையே ரப்பாகக் கண்டார்கள். மறைந்த பொழுது அவர்கள் சொன்னார்கள் ; மறைகிறவற்றை நான் உகக்கமாட்டேன் என்று ; அதாவது :- இங்கே மறைதல் என்பது நப்ஸினுடைய தானத்தை அடைந்து அதைக் கடந்த பின்பு அதை ரப்பு அல்ல எனக் கண்டார்கள். சந்திரனை உதிக்கிறதாகக் கண்டபோது இது என்னுடைய ரப்பு என்றார்கள். அதாவது இங்கே, நப்ஸின் தானத்தை விட உயர்ந்த தானமாக கல்பின் தானத்தைக் கண்டார்கள் (கல்புல் முஉமினி அர்ஷில்லாஹ்) இங்கே கமரு(சந்திரன்) என்பது கல்பு ஆகும். எனவே கல்பையே ரப்பாகக் கண்டார்கள். இதிலே ஹக்கின் நாமங்களான ஆலிம், ஹகீம் என்பனவற்றைக் காட்டியருளியது. முன்போல் கல்பின் தானத்தை அடைந்து அதைக் கடந்த பின்பு கல்பையம் ரப்பு அல்ல எனக் கண்டார்கள். சூரியனை உதிக்கிறதாகக் கண்டபோது அவர்கள் சொன்னார்கள் இது மிகப்பெரியது; இதுவே என் ரப்பாகும் என்றார்கள். அதாவது :- கல்பின் தானத்தைவிட உயர்ந்த தானமாக ரூஹின் தானத்தைக் கண்டார்கள். இதிலே ஹக்குத் தன் நாமங்களான ஹீது அலிய்யு அளீமு ஆகிய நாமங்களைக் காட்டியருளியது முன் போல் ரூஹின் தானத்தையும் அடைந்து அதனையும் கடந்த பின்பு: “கூட்டமே நீங்கள் இணைவைக்கிற பொருள்களில் நின்றும் நான் நீங்கிக் கொண்டேன்” என்றார்கள். பின்பு அல்லாஹ் மவ்ஜூது பில்வுஜூது எனும் தானத்தை அடைந்து இன்னீ வஜ்ஜஹ்து என்பதைக் கூறினார்கள். இதுவே எமதும் பாதினிய்யத் (உள்ரங்கம்) தான விடையாகும். இறைவனே மிகவும் அறிந்தவன் இதுவே நமது நிர்ணயமுமாகும். இங்கே கவ்கபு-நப்ஸ், கமரு-கல்பு, ஷம்ஸு-ருஹு
திண்டுக்கல் கலீபா றீ. அப்துல் கறீம் (ஜமாலி) அவர்களுக்கு
எழுதப்பட்ட பட்டோலை யிலிருந்து.)