நல்லவர்கள் நாடும் பொருளே!
ஆலிம்புலவர் எஸ், ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ
நல்லவர்கள் நாடும் பொருளே - நபி
நாயகத்தின் இல்ல விருந்தே
அறிவினை விரிவாக்கி எங்கள் அகங்களை தெளிவாக்கும் (நல்லவர்கள்)
உண்மைதன்னைத் தேடும் உள்ளம் எங்கெங்கோ இருந்தது
உம்மைக் கண்ட பின்னே உம் அணியில் இணைந்தது
பரிசுத்தமாய் நடந்தோர் உம்பார்வைக்கு இலக்கானார்.
நேர்மை கொண்டே ரெல்லாம் - உம்
நிழலுக்குள் விரைந்தே நுழைந்தார். (நல்லவர்கள்)
பெருமான் நபியின் நேசம் நெஞ்சில் சுமந்தோர் யாவரும்
அறியாப்புறத்தில் கவர்ந்தே உம் அன்பில் ஒதுங்கினார்
அறிஞர்கள் அறிவுபெற்றார் படித்தவர் படித்துக்கொண்டார்
புலவர் கவிஞர் புகழ்ந்தார் - உம்
பூரணத்தின் முன் பணிந்தார். (நல்லவர்கள்)
மகிழ்ச்சி என்னும் சொல்லே தங்கள் மந்திரமானது
கவலை என்ற சொல்லே இங்கு காணாய்போனது
ஒரு சொல்லில் புது வாழ்க்கை உயிருக்குள் மறுமலர்ச்சி
உயர்வை உயர்வை நோக்கி - எம்
உள்ளமையில் பெரும் புரட்சி. (நல்லவர்கள்)
அலியார் வந்த வழியார் புனித வலிமார் தம்மிலே
எழிலார் எங்கள் கலீலார் மிகத் தெளிவார் தன்னிலே
மரபுக்கு பெருமை தந்தார் மனதுக்கு சுகமளித்தார்
காலம் போற்றும் குத்பாய் - வருங்
காலமும் வாழ்த்தும் குருவாய்! (நல்லவர்கள்)
இசை: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்