• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Sep 2011   »  அமுத மொழிகள்


அமுத மொழிகள்

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

ஒளியை மறைக்கத் துணியும் தூசி நூலிலிருந்து.....

சென்ற இதழ் தொடர்ச்சி...

யஹூதி நஸாராக்கள்

“முஹம்மதவர்கள் ஆபிரகாம் என்கின்ற இபுராஹீம் மனைவியாகிய சாறாவின் அடிமைப் பெண்ணுடைய சந்ததியார்களில் ஒருவராயிருக்கிறார். அப்படிப் பட்டவரை எப்படி நபியென்று சொல்லலாம்” அதாவது இழிவான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் எப்படி நபி ஆகலாம் என்று கூறினர். வஹ்ஹாபிகளோ அதற்குச் சமமான வேறு சில வார்த்தைகளான சக்கிலியனைவிடக் குறைந்தவர்கள் எனவும், (தக் . ஈமான் பக்கம்: 14, 19) அற்ப அணுவைவிடக் குறைந்தவர்கள் எனவும் (தக் . ஈமான் பக்கம்: 55) நாயகம் அவர்களுக்குச் சமமானவர்கள் மேலும் உண்டாவது சாத்தியம் எனவும் (தக். ஈமான் பக்கம்: 31) நாயகம் அவர்கள் எல்லாரையும் போன்றவர்களாகவே இருக்கும் எனவும் (பராஹினே காத்திஆ பக்கம் : 31) கூறியிருப்பதைப் பார்த்தால் இவற்றிற்குப் பின்னால் சில வார்த்தைகள் விடுபட்டிருப்பன போல் தெரிகிறது. அதுதான் யஹூதி நஸாராக்கள் கூறிய - அப்படிப்பட்டவரை எப்படி நபியென்று சொல்லலாம்? என்பது.

இவ்வாறு யஹூதி நஸாராக்களுடையவும் வஹ்ஹாபிகளுடையவும் நெருக்கமான தொடர்புள்ள வார்த்தைகள் அதிகம் உண்டு, மற்ற நூல்களிலும் வசதிப்படி உட்புகுத்துவோம்.

இஸ்லாத்தில் தேவையற்ற இவ்வாறான குழப்பங்கள் உண்டாவதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றிற் சில.

  1. இஸ்லாத்துள் வேற்று மதத் தலையீடு.
  2.  ஏழ்மை - வறுமை.
  3. இழிகுலத்தில் பிறந்தவரெனச் சமுதாயத்திலிருந்து தள்ளி வைத்தல்.
  4. சமுதாயத்தில் தாழ்த்தப்படல்.
  5. சொந்த ஊரைவிட்டு விரட்டிவிடல்.
  6. அதனால் உள்ளம் தாக்கப்பட்டுத் தாழ்வுச் சிக்கல் ஏற்பட்டு மேல்நிலை அடைவதற்கான குறுக்கு முயற்சிகளில் ஈடுபடல்.
  7. தலைமைத்துவப் பித்து.
  8. கிறுக்குத் தன்மை.
  9. பொறாமை


இன்னும் சில வஹ்ஹாபியக் கொடுங் கொள்கைகள் :


1. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரியாதை செய்வது மூத்த சகோதரனுக்கு மரியாதை செய்வதைப் போல செய்ய வேண்டும்.

(தக்வியதுல் ஈமான்பக்கம் - 60)


2. அல்லாஹு தஆலா எவரை நாடுவானோ அவரைத்தன்னிடம் ஷபாஅத்துச் செய்யக்

கூடியவர்களாக ஆக்குங்கள்.

(தக்வியதுல் ஈமான் பக்கம் - 32)


3. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹயாதுன் நபி அல்ல. அவர்கள் மெளத்தாகி மண்ணோடு மண்ணாகி விட்டார்கள்.

(நூல் : தக்வியதுல் ஈமான் : 60)


4. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லா(ஹ்) வால் கொடுக்கப்பட்ட மறைவான சங்கதிகளைப் பற்றிய அறிவு உண்டு என்று நம்புவது ஷிர்க்காகும்.

(தக்வியதுல் ஈமான்பக்கம் : 10, 26, 27)


5. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளில் ஒன்றையாவது அறிவார்கள் என்று நம்புவது ஷிர்க்காகும்.

(தக்வியதுல் ஈமான் பக்கம் : 27, 58)


6. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பரிசுத்த ரவ்லா ­ஷரீஃபை ஜியாரத்துச் செய்வதற்காக மட்டும் பிரயாணம் செய்வது ஷிர்க்காகும்.

(நூல் : தக்வியதுல் ஈமான் பக்கம் : 10, 40)


7. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யா! முஹம்மது, யா! ரசூலல்லாஹ் என்று கூப்பிடுவதுஷிர்க்காகும்.

(நூல் : தக்வியதுல் ஈமான் பக்கம் : 23)


8. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ரவ்லா ஷ­ரீஃபுக்கு முன்னால் மரியாதைக்காக வேண்டி நிற்பதுஷிர்க்காகும்.

(நூல் : தக்வியதுல் ஈமான் பக்கம் : 40)


9.நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாரையும் போனறவர்களாகவே இருப்பவர்.

(நூல் :பராஹினே காத்திஆ பக்கம் : 3)


10. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட ஷைத்தானுக்கு அதிக அறிவு உண்டு.

(நூல் : பராஹினே காத்திஆ பக்கம் : 51)


11. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவான வி­யங்களை அறியக் கூடிய (சக்திக்கு) அறிவுக்கு என்ன விசேஷ­ம் இருக்கிறது? அம்மாதிரியான அறிவு ஜெய்து அம்ரு போன்ற மனிதர்களுக்கும் மேலும் ஒவ்வொரு மதளை குழந்தைக்கும் மேலும் பைத்தியக்காரனுக்கும் எல்லா உயிர்ப்பிராணிகளுக்கும் கூட உண்டு.

(நூல் : ஹிப்லுல் ஈமான் பக்கம் : 7)


12. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் மெளலூது ஓதுவதும் மரியாதைக்காக எழுந்து நிற்பதும் பித்அத்தும் ஷிர்க்குமாகும். மேலும் இந்துக்களில் கன்யாஜனனம் கொண்டாட்டத்திற்கு ஒப்பானது.

(நூல் : பத்தாவா ரUதிய்யா பக்கம் : 13)


13. தொழுகையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஞாபகம் வருவது மாடு, கழுதையுடைய ஞாபகம் வருவதைக்காண கெட்டது.

(நூல்: ஸிராத்தே முஸ்தகீம் பக்கம் : 86)


14. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ரபீஉல் அவ்வல் பிறை 12 -ல் ஃபாத்திஹா ஓதப்பட்ட சீரணியும் கெளதுல் அஃலம் முஹிய்யுத்தீன் ஆண்டவர்கள் பேரில் பிறை 11 - ல் ஓதப்படும் ஃபாத்திஹா மெளலூது சீரணியும் ஹராமாகும். மேலும் இந்துக்களின் செய்கைக்கு ஒப்பானதுமாகும்.

(நூல் : பத்தாவா ரUதிய்யா பக்கம் : 16, 17)


15. பெரியவர்கள் பேரில் 3 அல்லது 10 அல்லது 40- ம் தினம் அன்றும் மற்ற தினங்களிலும் ஓதக்கூடிய ஹத்தம் ஃபாத்திஹா இந்துக்களின் பழக்கத்திற்கு ஒப்பாகும்.

(நூல்: பராஹினே காத்திஆ)


16. அஞ்சல் விநியோகிப்பவர் (போஸ்ட்மேன்) வந்து கடிதங்களைத் தந்து விட்டுப் போய்விட்டார். இப்போது எங்களுக்குப் போஸ்ட்மேன் தேவைப்படமாட்டார்.  கடிதந்தான் தேவைப்படும் என வஹ்ஹாபிகள் நவீனமான ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளார்கள்.  ஆகா!  என்னே இவர்களின் ஞான திருஷ்டி! என்னே இவர்களின் உவமான உவமேயங்கள்! என்னே இவர்களின் அறிவின் முதிர்ச்சி ! மாள்க! நாசமாகுக!


     

இந்த முனாஃபிக்களான வஹ்ஹாபிக் கூட்டத்தினர்கள் மேற்கண்ட கொள்கைகளையும் உடையவர்களாக இருப்பதுடன் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களாகிய நமது கொள்கைகளையும் செயல் முறைகளையும் குறித்து ஷிர்கு, குஃப்ரு என்று குறை கூறிப் பாமர மக்களை வழிகெடுத்தும் வருகிறார்கள்.  மேற்கூறப்பட்ட கெட்ட கொள்கைகளை நம்மில் திணிப்பதற்காக நம்மிடையே பல்வேறு வேடம் பூண்டு மக்களை ஏமாற்றியும் வருகிறார்கள்.

இவர்கள் வி­யத்தில் நாம் சதாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நம் சுன்னத்வல் ஜமாஅத் மக்கள் இவ்வித கெட்ட கொள்கையுடைய இவர்களை நம் பக்கம் வர அனுமதிக்காமலும் அவர்களிடம் நம்மக்கள் சகவாசம் தொடர்பு கொள்ளாமலுமிருந்தால் மட்டும் நமது உயிரிலும் மேலான ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கிருபையுள்ள ரஹ்மான் நம் அனைவரையும் அவனது இன்னருட் கிருபையைக் கெண்டு தீய கொள்கையுடைய தீயவர்களின் தீங்கை விட்டும் காப்பாற்றி நல்லருள் புரிவானாகவும், ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

வஹ்ஹாபிகளின் மரியாதை கெட்ட குஃப்ரை வருத்தும் கொடிய வார்த்தைளை அறிந்து உண்மையின் பக்கம் திரும்புவதற்காகவே இவ்வறிவற்ற வார்த்தைளை மேலே எழுதினோம், இவைகளை வாசித்துவிட்டு அல்லா(ஹ்)விடத்தில் தவ்பா செய்து கொள்ளுங்கள்.  எம்பெருமானாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். பெருமானாரைப் புகழாமல் இழிவுபடுத்துபவன் எவனாயிருப்பினும் அவன் நிச்சயமாக சித்திரவதை செய்யப்பட்டு இழிவு படுத்தப்பட்டு நாய், பேய்கள் போல்தான் சாகுவான். இவைகள் முன்னரும் கண்கூடாகக் கண்ட உண்மைக் காட்சிகள்.  உண்மை அழிவதில்லை.

(தொடரும்)