• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Sep 2012  ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்கள்​


அஷ்ஷைகுல் காமில் 

குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜுத்

 ஜமாலிய்யா

ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்கள்​

அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


எம் வாப்பா நாயகத்தின் ஒளிவுஅழியாத ஒளிவு. 

நூருல் முஹம்மதிய்யா ஒளிவுக்குப் 

பாத்தியமானவர்கள்.                                       

     அது எம்மைச் சீர்படுத்துகிறது.                       

             அவர்களின் எழுத்துக் கருவூலங்கள் சிறப்பும் 

ஒளிவும் கருத்துமுடையன.                                  

  அவர்களின்றி நாங்களெங்கே!

 

                                                                                 - சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் -

 

 

வரும்காலம் ஞானம் நிறைந்தகாலமே !

  

    ற்பெருமை, பொறாமை,எனக்குத் தான் எல்லாம் தெரியும் எனும் மமதை, மற்றவர்களை மக்கள் மத்தியில் வைத்து இழிவுபடுத்துவது போன்ற செயற்பாடுகள் எல்லாம் ஒரு மனிதனை இழிவுபடுத்திவிடும். மற்றவர் சொல்வதில் உண்மை இருக்க தன்னலனுக்காக அதைப் பொய்ப்படுத்த முனைதல்,ஒன்றைச் செய்ய முடியுமாய் இருக்க ஒரு சிலரின் கோபத்திற்காக அது தனக்கு முடியாத காரியம் எனக் கூறி மற்றவர்களின் மனதையும் கெடுத்தல் போன்ற அடாச் செயல்கள் ஒருமனிதனின் உள்ளத்து ஒளிவை அமாவாசையாக்கி விடும்.


      உள்ளத்துள்  கள்ளம் இருக்கக்கூடாது. கள்ளம்  என்னும் கறை உள்ளத்துள் பதிந்து விட்டால் அவனைச் சீர் திருத்துவதே முடியாத காரியமாகி விடும். அந்தக் கறையைப் போக்க கெமிகல்களும் இல்லை. 

 

       நாம் ஆணையிட்டுள்ள காரியங்களை இனிதே செய்யாது அக்காரியங்களிற் பராமுகமாக இருப்பது நம்மை இழிவுபடுத்துவது.


      ஒரு காலத்தில் ஞானம் அழிந்து போனதற்குக் காரணமாக இருந்தவர்களே இப்படிப்பட்ட திறமைசாலிகள்.  எது எப்படியிருப்பினும் வருங்காலம் ஞானம் நிறைந்த காலமாகவிருந்து வஹ்ஹாபி எதிரிகளை அடியோடு அழிக்கும் மருந்தாகத் தெளஹீத் ஆக வேண்டும் என்பதே நமது முக்கிய எண்ணம்.


    ( சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் நமது உதவி ஆசிரியர் மெளலவி அப்துஸ்ஸலாம்

ஆலிம்  அவர்களுக்கு அருளிய பட்டோலையிலிருந்து )                                             

 

 குத்புல் ஃபரீத்,

ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா (ரலி)

 

 ஞானத்தி னுயர்நிலையி லுயர்ந்து நின்றார்  - மானக்

கோனவனின் பொருத்தத்திற் கூடி நின்றார்

தேனமுதாஞ் ஞானத்தைச் சேர்த்துத் தந்தார் - உண்மை

தானேதா னானென்று தனித்து நின்றார்.

  

                                                   (சங்கைமிகு செய்கு நாயகம்அவர்கள்)

 

 

சிறப்புச் செய்திகள்

 

 சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் கலந்து கொண்ட

 மெளலவி ஆலிம் யாஸீனிய் பட்டமளிப்பு விழா !

 

    திருச்சி மதுரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரியில் ஆறாம் ஆண்டு மெளலவி ஆலிம் யாஸீனிய் பட்டமளிப்பு விழா 06.09.12, வியாழக்கிழமை அஸருக்குப்பின் தொடங்கி மக்ரிபு வரை சங்கைமிகு யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள் நினைவரங்கில் நடைபெற்றது. சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்  6  மாணவர்களுக்கு மெளலவி, ஆலிம் யாஸீனிய் பட்டத்தை வழங்கினார்கள்.


      விழா தொடக்கமாக A. ஹக்கீம் பாஷா  கிராஅத் ஓத A.சத்தார்கான் வஹ்தத்துல் வுஜூத் பாட, பீர் முஹம்மது நபி புகழ் பாட, கல்லூரியின் முதல்வர் T. மக்தூம்ஜான் ஹக்கிய்யுல் காதிரிய், M.A, B.Ed., வரவேற்புரை நிகழ்த்தினார்.


      தலைமை கலீபா H.M. ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரி, B.Sc., துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைத் தலைவர் கலீபா Er. சஹாபுத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் B.E.,M.B.A.

கலீபா ஆலிம் புலவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


      பின்னர் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள், மதுரஸாவின் இன்றைய நிலை பற்றியும், எதிர்காலத்தில் அது ஆற்ற வேண்டிய அரும்பணி பற்றியும், உலமாக்கள் பெற வேண்டிய நிறை கல்வி பற்றியும் உணர்ச்சியுரை ஆற்றினார்கள். மறைஞானப்பேழை வெளியீட்டாளர் ஜே. முஹம்மது ரஹ்மத்துல்லாஹ், பி.ஏ. பி.காம். நன்றியுரை நிகழ்த்தினார்.கிப்லா ஆசிரியர் மெளலவி தமிழ்மாமணி அப்துஸ்ஸலாம் ஆலிம் விழாவைத் தொகுத்து  வழங்கினார். சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் துஆவுடன் விழா நிறைவுபெற்றது.  விழாவிற்கு பட்டம் பெற்ற ஆலிம்களின் பெற்றோர்கள் கலீபாக்கள், முரீதுகள், முன்னாள் மாணவர்கள், கல்லூரியின் அறபுப் பேராசிரியர்கள் மற்றும்  தமிழ் ஆங்கிலம்  கணக்குப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.                                                  - நமது நிரூபர் -