கஷ்டங்களில் யாஸீனை நாடு!
பூரணத்தினாற் பூரிப்படைதல்
(பைத்து)
1. அல்லாஹ்வின் அர்ஷிலே உறங்குகிற மனிதர், பூமியிலே அவர் கருமங் கொண்டு நிற்கிறவர்.
2. அவர் பார்வையால் செல்வங்கள் அதிகமாயின. அல்லாஹ்வை அவர் உகந்ததால் சுக வாழ்வை வெறுத்தார்.
3. அவர் தமது இறைவனின் சுபீட்சமடங்கலுடனும் வந்தார். அவரின் வருகையினால் உலகங்கள் சந்தோஷமடைந்தன.
4. அவர் ஆதமின் மக்களில் மேலான முக்தார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோன்றல்களில் ஒரு தோன்றல்.
5. நபீ முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சோதி அவரிற் பிரதிபிம்பித்து உலகம் ஜ்வலித்தது.
6. றஹ்மானின் பிரதிநிதித்துவம் கொண்டு வந்தார். தெளஹீதின் உள்ளமையை அறிந்தவர்.
7. யதார்த்தத்தை அறிந்தார். அவரினின்றும் திரை நீங்கியது, பழிக்கிறவன் பேறு கெட்டான்.
8. ஆத்ம உலகிலே நீந்துகிறவராய், புகழப்பட்டவராய் உயர்ந்த சோதிகள் கொண்டு உயர்ந்தார்.
9. தாழ்மை கொண்டும் அழகிய எளிமை கொண்டும் உயர்ந்த பகுதிகளில் அதிகாரியானார்.
10. நப்ஸுடன் போர் செய்து, பாடுகள் பட்டதால் ஜபரூத்திலே (சிருஷ்டி, கருத்தா என்ற பாகுபாடு இல்லாத அந்தஸ்து) சேமமானவராய்ச் சிறப்பை அடைந்தார்.
11. கலப்பற்ற உண்மை கொண்டும், ஆசை கொண்டும் லாஹுத்திலே (தெய்வீக உலகு) நிற்கிறவரானார்.
12. அவர், உண்மையும், உண்மை கூறுகிறவரும், உண்மையாக்கப்பட்டவரும் ஐஸ்வரியம் கொண்டு வந்தவருமாவர்.
13. கஷ்டங்களில் யாஸீனை நாடு, நீ நாடுகிறதை நல்ல பாதுகாப்பை அடைவாய்.
சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா (ரலி) அவர்களின் கலிமா விருட்சக்கனிந்த கனிநூலிலிருந்து........