சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்
தங்கள் மேலான உரையில் குறிப்பிட்டுள்ள
ஷிர்க் பற்றி இண்டர் நெட்டில் வந்த விஷயம்.
யூதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வும் நீங்களும் நாடினீர்கள் என்று கூறுவதின் மூலமும் கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறுவதின் மூலமும் நிகராக்குகிறீர்கள் இணை கற்பிக்கிறீர்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்)அவர்கள் (ஸஹாபாக்கள்) சத்தியம் செய்ய நாடினால் கஃபாவின் இரட்சகன் மீதாணையாக என்று சத்தியம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அல்லாஹ் நாடினான் பின்னர் நீங்கள் நாடினீர்கள் என்றும் அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர் : கதீலா (ரலி) (ஆதாரம் : ஸுனன் அஸ்ஸுஃர(நஸாயீ) இலக்கம் :3733
மேற்குறித்த ஆதாரத்தை கவனமாக சிந்தித்தால் பல பாடங்களைப் பெறலாம். முதலாவது : யூதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் இணை வைக்கிறீர்கள் என்று கூறி, கஃபாவின் மீது சத்தியம் செய்வதைக் கூறிட நபி (ஸல்) அவர்களும் அவர் கூறியதில் எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்காமல் இதற்குப் பிறகு இவ்வாறு செய்யக் கூடாது என்பதை கட்டளையாகவே பிறப்பிக்கிறார்கள். இதிலிருந்து ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் அறியாததினால் இதைச் செய்தார்கள். யூதர்சுட்டிக் காட்டியவுடன் திருத்திக்
கொள்கிறார்கள் எனப் புரியலாம்.
இரண்டாவது : கஃபாவின் மீது சத்தியமிட்டுக் கூறுவதும் அல்லாஹ்வும் நீங்களும் நாடினீர்கள் என்பதும் இணை வைப்பு என்பதை யூதர்கள் கூட உணர்ந்திருக்கின்றனர் அதனால்தான் அதனை நபி (ஸல்)அவர்களிடம் இந்த யூதர் எடுத்துரைக்கிறார்.
மூன்றாவது : யார் தவறை முறையாகச் சுட்டிக் காட்டினாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் ஷிர்க்கை ஒழிக்கவே இந்த சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள் என்பதை ஒரு கணமும் நாம் மறுக்கமாட்டோம்.ஷிர்க்கை ஊக்குவிப்பதற்கு நபி வந்தார்கள் என்று எந்த முஸ்லிமும் கூற மாட்டான், கூறினால் அவன் முஸ்லிமாகவே இருக்க மாட்டான். ஆனால் இந்த ஷிர்க்கை நபி (ஸல்) அவர்கள் தெரியாமல் செய்தார்கள் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்)அவர்கள் முன்னுக்குப் பின் முரண்படுகிறார்கள். அவர்களே தடை செய்த காரியத்தை அவர்களே செய்திருக்கிறர்கள் என்று முரண்பாடாக இதை சித்தரிப்பது ஒரு விசுவாசிக்கு எவ்வகையிலும் தகாது. அதை ஷிர்க் என்பதை அறியாமல் செய்தார்கள் அது ஷிர்க் என்று சுட்டிக்காட்டப்பட்டவுடன் திருத்திக் கொள்கிறார்கள்.