• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Sep 2012   »  உமர் (ரலி) புராணம்


உமர் (ரலி) புராணம்

 ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா

          அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

 

 

            என்றலு முமரு மீங்கண்

                  இறைநபி தாமும் யானும்

            தென்றலுங் குணமு மென்னத்

                  திருவிறை கருணை யாலே

            நன்றுயிர் வாழ்கி றோமே

                  நலமொடுவதிகி றோமே

            என்றுயர் கிளவி தன்னை

                  எழிலுறக் கூறி னாரே.

 

கொண்டு கூட்டு:


      என்றலும் உமரும் ஈங்கண் இறை நபிதாமும்  யானும் தென்றலும் குணமும்

      என்னத்  திரு இறை கருணை ஆலே  நன்று  உயிர் வாழ்கிறோமே. நலம் 

      ஒடு வதிகிறோமே என்று உயர் கிளவி தன்னை எழில் உறக் கூறினாரே.


பொருள் : 


      நபியுளாரா? உமர் உளாரா? என்று ஸுப்யான் கேட்டலும் உமர் (ரலி) அவர்கள் இறைவனின் தூதரவர்களும் நானும் தென்றற் காற்றும் அதன் இதமான தன்மையும் போல் திருவிறை கருணையாலே நன்று உயிரோடு வாழ்கிறோம்.  நலமோடு தங்கியிருக்கிறோம் என்று உயர்வான சொற்கள் கொண்டு அழகுறக் கூறினார்கள்.