தலையங்கம்
நபிமார்கள் ,குத்புமார்கள் ,வலிமார்கள் மனிதர்களோடு மனிதர்களாகத் தான் வாழுவார்கள் .ஆனால் அவர்களின் அருகே சென்று “ஸுஹ்பத்” பெற்று நுணுக்கமாக ஆராய்ந்தால் அவர்களுக்கும் நமக்கும் வரம்பே கூறமுடியாத தூர இடைவெளி இருப்பதை உணர முடியும் !
அவர்கள் இந்த உலக மனிதர்களல்லர் ......அவர்களின் சொல் ,செயல் ,நடவடிக்கை ,லட்சியம் எல்லாமே ஹக்கால் -பரம்பொருளால் செதுக்கப்படுகிறது என்பதை உணர்வுப் பூர்வமாக உணர முடியும் !
நபிமார்கள் -குத்புமார்கள் வழக்கமாக நடைபெறும் உலகின் நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சிகளாக வாழ்பவர்களல்லர் -அவர்கள் நிகழ்ச்சிகளை உருவாக்குகின்றவர்கள் .
கண்ணுக்குத் தெரியாத ஒன்றிலிருந்து அழகான காட்சிகளை மலரச் செய்பவர்கள் .
தங்களுக்கான உலகைத் தாங்களே சமைத்துக் கொள்பவர்கள் .பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ;ஒரு தனம் அமுது சுரக்காத ஹலீமா தாயிடமிருந்து அமுதம் சுரக்கச் செய்து பால் குடித்தவர்கள் .
ஹலீமா அம்மையாரின் மற்ற குழந்தைகளின் பங்கிலிருந்து எதையும் அவர்கள் தட்டிப்பறிக்கவில்லை .இல்லாத ஒன்றிலிருந்து இருப்பை உருவாக்கிக் கொண்டார்கள் .
பாலைவனப் பிரயாணத்தில் குட்டியே ஈனாத ஆட்டின் மடியிலிருந்து பால் கறந்து தாங்களும் நண்பரும் பருகியவர்கள் .
தாங்கள் சென்ற இடத்தையெல்லாம் செல்வச் செழிப்பாக்கியவர்கள் .
அதே போலத்தான் காலத்தின் உத்தமரான ஸையிதுனா கலீல் அவுன் நாயகமவர்கள் தொடக்க காலம் தொடுத்து இன்று வரை தங்கள் இலட்சியப்பணிகளை தங்கள் அன்பு முரீதுப்பிள்ளைகள் மூலமாகவே நிறைவேற்றுகிறார்கள் .
சிலருக்கு அறிவையும் -சிலருக்குப் பொருளையும் -சிலருக்கு ஆற்றலையும் -சிலருக்கு விவேகத்தையும் அவர்களே வழங்குகிறார்கள் .பிள்ளைகளை உருவாக்கி உருவாக்கி தங்கள் லட்சியத்துக்கு உருக்கொடுக்கின்றார்கள் .
பிள்ளைகளை அற்புதமாக மாற்றிய பின்னர்தான் அது அற்பமல்ல என்னும் உண்மையைப் புரியவைக்கிறார்கள் .
அண்டியிருப்பவர்களுக்கு பூச்செண்டு கிடைக்கிறது !தடுமாறுகிறவர்கள் இடமாற்றமடைகிறார்கள் .
அல்லாஹ் நம் அனைவரது கைகளிலும் பூச்செண்டுகளைத் தருவானாக !
மறைஞானப் பேழை நிறுவனர்
அஷ்ஷைகுல் காமில் குத்புஸ்ஸமான் ஷ ம்ஸுல் வுஜூத்
ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
உலகம் ஒரு பயிற்சி மேடை .அதில் மனிதன் பயில்கிறான் .அவனுடைய உடலும் உயிரும் பயிற்றப்படுகின்றன .ஆனால் மனிதனோ உடல் மட்டும் தான் பயிற்றப்படுகிறதாக எண்ணி உடலுக்கான எல்லாத் தேவைகளையும் நற்காரியங்களையும் மிகைபடச் செய்து முடிக்கின்றான் .ஆனால் ஆத்மாவைப்பற்றி மனிதன் சற்றும் சிந்திக்கிறானில்லை .
- பேரின்பப்பாதை நூலில் -சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் -
மனிதனுக்குப் போதும் ...
( தகவல் - உமர்கையாம் )
(1)எவர் ஒருவர் நண்பரை தேடி அலைகிறாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் .
(2)எவர் ஒரு வழிகாட்டியைத் தேடி அலைகிறாரோ அவருக்கு குர்ஆன் போதும் .
(3)எவர் ஒரு உபதேசியை தேடி அலைகிறாரோ அவருக்கு மரணம் போதும் .
(4)எவர் பணத்தை தேடி அலைகிறாரோ அவருக்கு போதுமென்ற மனமே போதும் .
(5)எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ அவருக்கு நரகம் போதும் .
- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் -
திப்பு ( பட்டு ) சுல்தான்
இன்று இந்தியாவில் 15ஆயிரம் மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது .பட்டு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மநிலம் கர்நாடகம் .இதற்குக் காரணம் திப்பு சுல்தான் .அவர்தான் 18- ஆம் நூற்றாண்டிலேயே மைசூரில் பட்டுப்புழு உற்பத்தி நிலையங்களை அமைத்தார் .இந்தியர்களின் பட்டுத் தேவை ஆண்டுக்கு 26ஆயிரம் மெட்ரிக் டன் ஆகும் .நமது உற்பத்தியை விடக் கூடுதலாக 14டன் நமக்குத் தேவைப்படுகிறது .தேவைப்படும் மீதப் பட்டைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் .
ஆடைகளில் ஜரிகை சேர்க்கிறது முகலாயர் காலக் கட்டத்தில் வந்தது .இன்று தங்கம் ,வெள்ளி ஜரிகைப் பட்டில் சேர்த்து நெய்யப்படுகிறது .ஒரிஜினல் தங்கம் ,வெள்ளி இல்லாமல் எலக்ட்ரோப்ளேட்டிங்கில் ImitationZan யும் இப்போது தயாரிக்கப்படுகிறது .( இந்துநாளிதழ் )
இயற்கையும் மனிதனும்
இயற்கை இரண்டாக இருக்கிறது .படுபயங்கரமான குளிர் ,படுபயங்கரமான வெப்பம் .ஆண் -பெண் .இரவு -பகல் .இதை எப்போது மனிதன் இரண்டாகப் பார்க்காமல் ஒன்றாகப் பார்க்கத் தொடங்குகிறானோ அப்போது தான் நமக்கு ஞானம் வரும் .இயற்கையை விட்டுவிட்டு மனிதன் கலாச்சாரத்துக்குள் இறங்கும் போது தகராறும் முரண்பாடும் தொடங்கி விடுகின்றன .
இயற்கை ஓர் ஒழுங்கில் இருக்கிறது .அதற்கான பெரிய அடையாளமாகப் புலியைப் பார்க்கிறேன் .வரிக்குதிரையின் உடலில் உள்ள கோடுகள் கோணல் மாணலாகப் போடப்பட்டிருப்பது போலத் தெரிந்தாலும் படுபயங்கர ஒழுங்கு வடிவில் வேப்ப மரத்தின் கழே படுத்துக் கொண்டு மரத்தைப் பார்த்தீர்கள் என்றால் ,இலைக் கூட்டம் அத்தனையும் ஒரு சீரொழுங்கில் ,வடிவத்தில் இருக்கும் .புலி நடக்கும் போது அதன் கோடுகள் சேர்ந்து பிரிவதைப் பார்ப்பது அற்புதமான நிகழ்வாக இருக்கும் .ஒரு போதையே வரும் .
( படித்ததில்பிடித்தது ...)