• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai   »    2014    »    Apr2014    »    முடிதிருத்தப் போறவரே


முடிதிருத்தப் போறவரே ..!
கொஞ்சம் முடிவெடுத்துப் போங்க..!


முஹம்மது உமர் ஹையாம் ஹக்கிய்யுல் காதிரி ,

ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி , திருச்சி .



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸய்யிதுனா அலிய் ( ரஹ் )அவர்களுக்குக் கூறிய சில உபதேசங்கள் ...

அலியே !எவர் மாதம் ஒருமுறை தலைமுடி இறக்கிக் கொண்டாரோ அவர் மருத்துவரளவில் தேவையாக மாட்டார் .

( நபிமொழி )


அலியே !பிறை ஒன்றிலிருந்து பிறை 15வரை தலைமுடியை இறக்கிக் கொள்ளாதீர் .ஏனெனில் ,

பிறை 1,2ல் முடிவெட்டினால் குஷ்டம் ஏற்படும் .

பிறை 3ல் முடிவெட்டினால் வெண்குஷ்டம் ஏற்படும் .

பிறை 4ல் முடிவெட்டினால் வயிற்று வலி ,முதுகு வலி ஏற்படும் .

பிறை 5ல் முடிவெட்டினால் நரம்புத் தளர்ச்சியும் ,முகம் மஞ்சனிப்பும் ஏற்படும் .

பிறை 6ல் முடிவெட்டினால் சளியும் ,ஜலதோஷ ­ மும் ஏற்படும் .

பிறை 7ல் முடிவெட்டினால் நாவரட்சி ஏற்படும் .

பிறை 8ல் முடிவெட்டினால் வாய்வு பிரிந்து கொண்டே இருக்கும் .

பிறை 9ல் முடிவெட்டினால் மூளைக் கோளாறு ஏற்படும் .

பிறை 10ல் முடிவெட்டினால் திடுக்கத்தை உண்டாக்கும் .

பிறை 11ல் முடிவெட்டினால் ஆண்மைக் குறைவு ஏற்படும் ,இல்லறம் பாதிக்கப்படும் .

பிறை 12ல் முடிவெட்டினால் மூல வியாதியை ஏற்படுத்தும் .

பிறை 13ல் முடிவெட்டினால் உடலில் சோர்வு ஏற்படும் .

பிறை 14ல் முடிவெட்டினால் அறிவைக் குறைக்கும் .

பிறை 15ல் முடிவெட்டினால் கண் நோய் உண்டாகும் .


அலியே !பிறை 16- ல் தலை முடியை இறக்கிக் கொள்ளுங்கள் .

பிறை 16ல் முடிவெட்டினால் கண் பார்வையைக் கொடுத்து குஷ்டத்தைத் தடுக்கும் .

பிறை 17ல் முடிவெட்டினால் ஆஸ்துமா வியாதியைத் தடுக்கும் .மேலும் 12வியாதிகளை தடுக்கும் .

பிறை 18ல் முடிவெட்டினால் கண் பார்வையைக் கூர்மையாக்கும் .

பிறை 19ல் முடிவெட்டினால் உடலில் ஏற்படும் புண்களைத் தடுக்கும் .

பிறை 20ல் முடிவெட்டினால் 40விதமான நோய்களை நீக்கும் .

பிறை 21ல் முடிவெட்டினால் சளியை நீக்கும் .

பிறை 22ல் முடிவெட்டினால் மறதியைப் போக்கிவிடும் .

பிறை 23ல் முடிவெட்டினால் இருமல் போன்ற வியாதிகளைப் போக்கும் .

பிறை 24ல் முடிவெட்டினால் உடலில் ஏற்படும் வலிகளை நீக்கும் .

பிறை 25ல் முடிவெட்டினால் கண் நோயை குணமாக்கும் .

பிறை 26ல் முடிவெட்டினால் கடுமையான ஜுரத்தைப் போக்கும் .

பிறை 27ல் முடிவெட்டினால் தலைவலிகளை நீக்கும் .

பிறை 28ல் முடிவெட்டினால் முதுகு வலியையும் ,முழங்கால் வலியையும் போக்கும் .

பிறை 29ல் முடிவெட்டினால் உடலில் ஏற்படும் வியாதிகள் அனைத்தும் குணமாகும் .

பிறை 30ல் முடிவெட்டினால் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடித்தவராவீர் .


நபி ( ஸல் ) அவர்கள் ,நூல் : வஸாயன்னபீ லி அலி ( ரலி )