தரீகத்துல்ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின்கண்ணியமிகு
கலீபாபெருந்தகைகள்
ஒருசிறப்புப் பார்வை !
மெளலவிஎன் . எஸ் . என் .ஆலிம் .பி . காம் . திருச்சி
கலீபா .வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் கண்கள் கலங்கிய இரண்டாவது தருணம் ,மரண வேளை .ஆனால் அது மரணத்தைப் பயந்து அல்ல .ஏனெனில் சூஃபியாக்களின் மரணம் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குப் பிரயாணிப்பது தான் என்னும் உண்மையை விளங்கியவர்கள் தாம் நமது கலீபா .அப்படியானால் ..வேறு எதற்கு ?கசப்பாயினும் உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும் ?
ஆம் !கலீபா அவர்களுக்கு எல்லாம் சிறப்பாகத்தான் அமைந்திருந்தன ;மனைவியைத் தவிர !
சுமார் இருபது வருடங்கள் ஒரே வீட்டில் குடியிருந்தும் கணவரை ஏறிட்டுப் பார்க்காமல் வாழ்ந்தார் மனைவி !இத்தனைக்கும் எந்தச் சண்டையோ சச்சரவோ இல்லை !காரணம் கேட்டிருக்கிறோம் பலமுறை !வீட்டிற்கு மருமகள் வந்ததற்குப் பிறகு அவர் பக்கத்தில் செல்ல வெட்கமாக இருக்கிறது என்று கூறி வந்தார் .சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் எவ்வளவோ முறை எடுத்துக் கூறியும் மனைவி கணவருக்குப் பக்கத்தில் கூட செல்லவில்லை ;ஊழியம் செய்ததில்லை !மருமகள்தான் ( மெளலவி அப்துல் கறீம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் மனைவி )தனது மாமனாருக்கு இறுதி வரை பொன்னான ஊழியஞ் செய்தார் .குடிக்கத் தண்ணீர் கொடுப்பதிலிருந்து ,குளிப்பதற்கு வெண்ணீர் தந்துதவுவது ,உணவு அளிப்பது ,துணிமணிகளைத் துவைத்தளிப்பது வரை அனைத்துப் பணிகளையும் கண்ணியத்தோடு செய்து வந்தார் .( எங்கள் மாமி அவர்கள் சங்கைமிகு வாப்பா நாயகமவர்களின் நல்லாசியைப் பெற்று இன்னும் பல்லாண்டு வாழ மனமொழி மெய்யன்புடன் இறைஞ்சுகிறோம் )
மனைவி உடனிருந்தும் பேசாமல் சுமார் ( இருபது வருடங்கள் )இருந்தது எவ்வளவு பெரிய சோதனை ?அதனையும் பொறுத்துச் சகித்துக் கொண்டுதான் ஆன்மிகப்பணி செய்தார்கள் நமது கலீபா .மரண வேளை .என்னவோ முணுமுணுத்தார்கள் .அருகிற்சென்று கேட்டோம் .கைருன்னிஸா ..கைருன்னிஸா !ஆம் ..மனைவியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள் .அவர் தான் ஷ ர்ருன்னிஸா வாகிவிட்டாரே !?எப்படி அருகில் வருவார் ?எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடி ஒரேயொரு முறை கண்ணில் படும்படி வந்து நிற்கும்படி வேண்டினோம் !ஆனால் கடைசி வரை வரவில்லை !வரவேயில்லை !!அதுமட்டுமல்ல ..கலீபா அவர்களின் மரண வேளையில் திருச்சியிலிருந்து பாளையத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் !கடைசி தீதார் கூடப் பார்க்கவில்லை !( என்னமனுஷி அவர் ?)கண்ணியத்திற்குரிய கலீபா பெருந்தகை வலிய்யுல் அஹ்ஸன் உடலால் மறைந்தாலும் நினைவால் ,அறிவால் நற்குணங்களால் நல்லுபதேசங்களால் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் ..
இத்தொடரை நிறைவு செய்ய விருப்பமில்லைதான் !எனினும் கண்ணியத்திற்குரிய நமது ஏனைய கலீபாக்களின் விசே ஷச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வசதியாக இத்தொடர் நிறைவு பெறுகிறது .அல்ஹம்து லில்லாஹ் ...
இன்ஷா அல்லாஹ் .....அடுத்த இதழில் நாம் சந்திக்க உள்ள கலீபாப் பெருந்தகை?!