• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    Apr2014    »    சங்கைமிகுஇமாம் ஷாஃபிஈ ( ரஹ் )


சங்கைமிகுஇமாம் ஷாஃபிஈ ( ரஹ் )


அறபுத்தமிழில் :மராகிபுல்மவாஹிபு ஃபீ மனாகிபி உலில்மதாஹிப்

அழகுதமிழில் :கிப்லாஹள்ரத் ,திருச்சி .



சங்கைமிகு இமாம் ஷாபிஈ ( ரஹ் )அவர்கள் கூறினார்கள் :“ குலாபாஉர் ராஷிதீன்கள்” நால்வர் தாம் .அந்நால்வருக்கும் அடுத்து அப்பட்டியலில் சேர்ப்பிக்கத் தகுதியானவர்களில் ஒருவர் தான் கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் ( ரஹ் )அவர்கள் .



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பனூ உமய்யாக்களில் மர்வான் பிறந்த போது அவருடைய தகப்பனார் ,நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தமது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து துஆச் செய்யும்படி கோரினார் .அப்போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ,



அவர் பேரிலும் அவரது சந்ததியினர் பேரிலும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும் ; அவர்களிலிருந்து சிலரைத் தவிர” என்று பிரார்த்தித்தார்கள் .



அந்தச் “சிலரைத் தவிர” என்னும் வரிசையில் உதித்தவர்கள்தாம் ஹள்ரத் உமர் இப்னு அஜீஸ் ( ரஹ் )அவர்கள் .இவர்கள் கலீபா .ஹள்ரத் உமர் ( ரலி )அவர்களின் நேரடிப் பேரராவார்கள் .அதாவது கலீபா உமர் ( ரலி )அவர்களின் மகளாரின் மகளாருக்குப் பிறந்தவர்கள் தாம் ஹள்ரத் உமர் இபுனு அப்துல் அஜீஸ் ( ரலி )அவர்கள் .



ஹள்ரத் உமர் இபுனு அப்துல் அஜீஸ் ( ரலி )அவர்கள் நீதத்தின் தூணாக விளங்கினார்கள் .இவர்களுக்கு உமர் ஸானீ ( இரண்டாவது உமர் )எனப் பட்டப் பெயர் உண்டு .இவர்கள் 2வருடங்கள் 5மாதங்கள் ஆட்சி புரிந்தார்கள் .இக்காலத்தில் பைத்துல்மால் என்னும் பொது நிதியிலிருந்து ஒரு சல்லிக் காசைக் கூட எடுத்ததில்லை .இவர்கள் பதவியேற்றதிலிருந்து மரணிக்கும் வரை ஒரே ஆடையை மட்டுமே கட்டியிருந்தார்கள் .இவர்களின் பதவி காலத்தின் போது ஒருமுறை கூட ஃபர்ளான முழுக்கு விதியானதில்லை .இரவெல்லாம் விழித்திருந்து தொழுவதும் பகலெல்லாம் தொழுவதும் நாட்டையாளும்திருப்பணியிலும் கழித்து வந்தார்கள் .இவர்கள் ஆட்சிக் காலத்தில் ஒரே குட்டையில் மானும் புலியும் ,ஆடும் மாடும் நீர் அருந்தும் ;ஒன்றையொன்று அடித்துக் கொல்லுவதில்லை !மக்களும் மிருகங்களும் செழிப்புற்று நிம்மதியாக வாழ்ந்து வந்தனர் !



ஹள்ரத் உமர் இபுனு அப்துல் அஜீஸ் ( ரலி )அவர்களின் மனைவி பாத்திமா .இவர் அப்துல் மலிக் இபுனு மர்வான் என்னும் அரசரின் மகளாவார் .



ஹள்ரத் உமர் இபுனு அப்துல் அஜீஸ் ( ரலி )அவர்களின் மரணத் தருவாயில் அவர்களைச் சந்திக்க வந்தவர்களில் ஒருவர் ,மன்னருக்கு வேறு ஆடையை உடுத்தி விடலாமே என்றார் .அப்போது உமர் ( ரஹ் )அவர்களின் மனைவி பாத்திமா ,“ அல்லாஹ்வின் மீது ஆணை ,மன்னருக்கு வேறு ஆடை ஏதுமில்லை” என்று பதிலளித்தார் .



ஹள்ரத் உமர் இபுனு அப்துல் அஜீஸ் ( ரலி )அவர்கள்மரணித்து விட்டார்கள் .அன்னவர்களின் ஜனாஸாவிற்கு அருகில் அனைவரும் கூடியிருந்த போது விண்ணிலிருந்து கடிதம் ஒன்று பறந்து வந்து ஜனாஸாவின் நெஞ்சில் வந்தமர்ந்தது !அதனையெடுத்துப் படித்துப் பார்த்தார்கள் !அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி !அக்கடிதத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் ,



ஹாதிஹி பராஅதுன் மினல் அஸீஸில் ஜப்பார் லி உமரிப்னி அப்துல் அஸீஸிமினன்னார் .( முறிந்த இதயங்கள் பொருத்தி ,வம்பர்களையடக்கியாளும் சிறப்புடைய நாயனிலிருந்து உமர் இபுனு அப்துல் அஜீஸை நரகத்தை விட்டும் உரிமை விடப்பட்டதற்கான சிட்டை இது ...)அல்ஹம்துலில்லாஹ் .


இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்


சங்கைமிகு இமாம் ஷாபிஈ ( ரஹ் )அவர்கள் அருளும் கல்விச் சோலையைத் தரிசிப்போம் .