நோயும்சிகிச்சையும் - மூலம்( Piles)
இயற்கைவாழ்வியல்
ஆன்மீகத்தில் தன்னையறிதல் என்பது தனது கல்பு ,ரூஹு சம்பந்தப்பட்ட நிலைகளாகும் .இயற்கை வாழ்வியலில் நம் உடல் உறுப்புகளைப் போல் உள் உறுப்புகளை அறிவது அவசியமாகும் .நாளமில்லாச் சுரப்பிகள் மனிதனுடைய உடல் நலத்தையும் குணநலத்தையும் தருவதால் முக்கியப் பங்கு வகிக்கின்றன .மருத்துவத் துறையில் சிறப்புக் கல்வியாக வரும் விஷ யங்களை வாசகர் நலன் கருதி எளிதாக்கி சுருக்கமாக எழுதுகிறேன் .வல்ல அல்லாஹ் பேருதவி புரிவானாக !
நம் பாரதத் திருநாட்டின் பழங்கால யோகிகள் தங்கள் தியானத்தை நிலைநிறுத்த சில உடல் உறுப்புகளில் கவனம் செலுத்தினர் .அதற்கு சக்கரங்கள் (Chakras)என்று பெயரிட்டனர் .அவைதாம் மருத்துவத் துறையில் பின்னர் நாளமில்லாச் சுரப்பிகள் (DuctlessGlands - Endocrine Glands)என்று அழைக்கப்படுகின்றன .
சுமார் 140வகையான சுரப்புகளை சுரக்கும் இந்த நாளமில்லாச் சுரப்பிகள் அவைகளைஇரத்த ஓட்டத்தில் கலந்து மனிதனின் வசீகர அமைப்புக்கும் காரணமாய் அமைகின்றன .
1.பினியல் சுரப்பி (PinealGland) (Crown Chakra)2.பிட்யூட்டரி சுரப்பி (PituitGland) (Agna Chakra)3.தைராய்டு ,பாரா தைராய்டு சுரப்பிகள் (VishudhaChakra)4.தைமஸ் சுரப்பி (ThymusGland) (Anahat Chakra)
வாசகர்களே !மேற்கண்ட சுரப்பிகளின் பயன்களை அறிந்து கொள்வோம் .இவைகள் இயல்புக்கு மாறாக இயங்குமானால் உங்களுக்கு நீங்களே சரி செய்து கொள்ளப் போகிறீர்கள் .எப்படி என்பது இத்தொடரின் இறுதியில் இன்ஷா அல்லாஹ் சொல்லப்படும் .
1. பினியல் சுரப்பி : ( PinealGland)
மற்ற சுரப்பிகளுடைய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி சீரமைக்கிறது .உடலிலுள்ள நீர் மூலகத்தை சீரமைப்பதால் சோடியம் ,பொட்டாசியம் உடலில் தேவையான அளவு இருக்க உதவுகிறது .பாலுணர்வுகளையும் நிர்வகிக்கிறது .அறிவுஜீவிகள் இதனை நமது ஞானக்கண் ( மூன்றாவது கண் )என்பார்கள் .நெற்றிப் புருவ மையத்திற்கு மேல் அமைந்துள்ளது .ஸஜ்தா செய்யும் போது தரையில் வைக்கப்படும் இடமாதலால் இதனை நப்ஸ் என்றும் பெரியவர்கள் சொல்வர் .ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது .இதன் செயல்பாடுகள் குறைந்தால் உயர் இரத்த அழுத்தம் ,இளம் வயதில் பாலுணர்வு மிகுதல் ,சிறுநீரகக் கோளாறுகள் ,குளிர் காலத்திலும் உள்ளங்கை ,உள்ளங்கால் வியர்த்தல் முதலிய உபாதைகள் உருவாகும் .
2. பிட்யூட்ரி சுரப்பி :( PituitaryGland)
உடலிலுள்ள காற்று மற்றும் ஆகாய மூலகங்களை சீரமைக்கிறது .எல்லா சுரப்பிகளுக்கும் தலைமை வகிக்கிறது .உடல் வளர்ச்சி ,மூளைத்திறன் ,ஞாபக சக்தி வளர துணை புரிகிறது .அதிகமாக சுரந்தால் மனிதனின் உயரம் கூடும் .குறைவாக சுரந்தால் குள்ள மனிதர்களாவர் .இச்சுரப்பி புருவ மையத்தில் அமைந்துள்ளது .
3. தைராய்டு , பேரா தைராய்டு சுரப்பிகள்
தொண்டைக் குழியில் இரு புறங்களிலும் அமைந்துள்ளன .இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன .உடல் வெப்பத்தையும் ,உடல் சக்தியையும் மேலாண்மை செய்கிறது .குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது .அதிகமாக சுரந்தால் முன்கழுத்துக்கழலை ( கட்டி )உருவாகிறது .சுய கட்டுப்பாடு ,பிறர் நலம் பேணுதல் போன்ற பண்புகளை வளர்க்கிறது .
4. தைமஸ் சுரப்பி : ( ThymusGland)
மார்பகப் பகுதியில் உள்ளது .15வயது வரை குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் காக்கிறது .அதன்பின் படிப்படியாக சுருங்கி தனது வேலையை நிறுத்திக் கொள்கிறது .
அன்பார்ந்த வாசகர்களே !
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கண்ட சுரப்பிகளை நாமாகத் தூண்டி சிகிச்சை செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடு இருந்தேன் .சுரப்பிகள் அதிகமாகச் சுரந்தாலும் குறைவாகச் சுரந்தாலும் சிகிச்சை ஒன்றுதான் .
அக்குபிரஸர் முறையில் நமது பெருவிரல்களைக் கொண்டு காலை மாலை இரு வேளைகளிலும் சிகிச்சை செய்து கொள்ளலாம் .
நமது எல்லா உறுப்புகள் மற்றும் சுரப்பிகளின் நரம்புகள் நமது உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலம் முடிகின்றன அல்லது தொடங்குகின்றன .எனவே நமது பெருவிரல்களால் மேற்கண்டவைகளுக்கு அழுத்தம் தருவதன் மூலம் நல்ல பலன் பெறலாம் .ஆரோக்கியமாக இருப்பவர்கள் தற்காப்புக்காக செய்து வரலாம் .குறிப்பிட்ட பிரச்சினை உள்ளவர்கள் அருகிலுள்ள ஒரு தேர்ந்த அக்குபிரஸர் சிகிச்சையாளரை சந்தித்து குறிப்பிட்ட புள்ளிகளை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் .சிக்கனமான சிகிச்சை .MRI போன்ற பரிசோதனைகள் தேவையில்லை .
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !வாழ்க நலமுடன் !
ஸல்லல்லாஹுஅலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .