• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »2014    »Apr2014    »    2014 இலங்கை மீலாது நினைவலைகள்

2014 இலங்கை மீலாது  நினைவலைகள்

ஆலிம்புலவர்


இலங்கை மீலாது விழாவிற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம் .முரீதுகளில் முக்கியஸ்தர்கள் சிலரது மனத்தில் ....நாம் எல்லோரும் பெருங்கூட்டமாக விழாவுக்குச் செல்கிறோம் .அங்கு எம்மை வசதியாக தங்கச் செய்கிறார்கள் .வேளாவேளைக்கு விஷேச உணவு பரிமாறப்படுகிறது .ஆகமொத்தத்தில் பெரும் செலவு செய்யப்படுகிறது .ஏதோ நம்மால் முடிந்த அளவு சிரமத்தைக் குறைத்தால் நல்லது என்ற எண்ணம் .


இலங்கை விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கு இலங்கைப் பிள்ளைகள் அன்புமிகு பிஷ்ரு மெளலானா அவர்கள் - ­ பீர் அஹமது ( ஹக்கிய்யுல் காதிரிய்கள் )மற்றும் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்கள் ,முன்னரே வரவேற்க வந்து காத்திருப்பார்கள் .கூடியவரை சென்னை -திருச்சி விமானங்கள் ஒரே நாளில் வருமாறு ஏற்பாடு செய்திருந்தாலும் இரண்டு -மூன்று மணி நேரங்கள்முன்னே பின்னே வந்து சேர்வது வழக்கம் .அதுவரை இலங்கைப் பிள்ளைகள் காத்திருப்பார்கள் .மேலும் அன்று இரவு துபையிலிருந்தோ -குவைத்திலிருந்தோ -சிங்கப்பூர் -மலேஷியாவிலிருந்தோ பிள்ளைகள் வருவார்களானால் முந்தி இரவிலிருந்தே விமான நிலையத்தில் காத்திருந்து அவ்வப்போது வருவோரை வரவேற்று ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள் .



விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும் வெளியே சொகுசு பஸ்கள் காத்திருக்கும் .அவரவரர் லக்கேஜுகளை வாங்கி பொறுப்பாக அடுக்கிவைத்தபின் பேருந்தில் ஏறி அவரவர் சீட்டில் அவரவர் அமரச்செய்வர் .விமான நிலையத்திலிருந்து கொழும்பு வந்து கொழும்பிலிருந்து வெலிகாமம் செல்ல வேண்டும் .செல்லும் வழியில் அவசியம் மதிய சாப்பாட்டு வேளை வந்து விடும் .பகல் உணவுக்காக பெரிய ஹோட்டல் ஒன்றில் நிறுத்தி அனைவருக்கும் விஷேசமான உணவை ஏற்பாடு செய்வார்கள் .



நாம் மேலே குறிப்பிட்டபடி இந்த விஷ ­ யத்தை யோசித்துத்தான் கொழும்பிலிருந்து வெலிகாமம் செல்லும் வழியில் ஹோட்டலில் சாப்பிடும் செலவைக் குறைக்கும் எண்ணத்தில் இந்தியாவிலிருந்து புறப்படும் போதே திருச்சியில் பிரியாணி உணவு சமைத்து பேக்கிங் டப்பாக்களில் அடைத்துக் கொண்டுபோய் விட்டால் நல்லதே என சிந்தித்து அதற்கான ஏற்பாடுகளையும் தியாகி முஹம்மது ராவுத்தர் ,மூ .முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ,ஜாபர் அலி மற்றும் சிலர் செய்யத் தொடங்கினார்கள் .அதனை Sponserசெய்யவும் -சிலர் முன்வந்துவிட சமையலுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்த வேளையில் ஒரு நாள் இலங்கைப் பிள்ளை ஒருவரிடமிருந்து ஒருதகவல் !அது என்ன தகவல் ?


( நினைவுகள்தொடரும் )