பிரபஞ்சஉண்மைகள்
இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான் ;( வானில் தத்தமக்குரிய )வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன .
சூரியன் சந்திரனை ( நெருங்கிப் )பிடிக்க முடியாது ;இரவு பகலை முந்த முடியாது .இவ்வாறே எல்லாம் ( தம் )வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன .
( யாசீன்- 36:40)
ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா ?”
(71:15)
இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும் ,சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான்”
(71:16)
மேற்கண்ட குர்ஆன் வசனங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்வோம் .
திருக்குர்ஆனில் சூரியனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் அறபுச் சொல் ஷ ம்ஸ் ஆகும் .இதனை ஸிராஜ் ( ஒளிரும் விளக்கு )மற்றும் வஹ்ஹாஜ் ( பிரகாசிக்கும் விளக்கு )என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது .பால்வெளி மண்டலத்தில் உள்ள 2400பில்லியன் விண்மீன்களில் ஒன்று சூரியன் .இதன் விட்டம் 1400000கி . மீ ஆகும் .பூமியை விட 100பங்கு பெரியது .இது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவைகளான ஒரு சுழலும் வெப்ப வாயு .சூரியனின் மையப் பகுதியின் வெப்பம் 15மில்லியன் oCஇவ்வெப்பத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியத்தை உருவாக்குகின்றன .(NuclearFusion)இதன் காரணமாக மிக அதிகமான வெப்பச் சக்தியும் ,ஒளிச் சக்தியும் வெளிப்பட்டு விண்வெளி வழியே 8நிமிடங்களில் 150மில்லியன் கி . மீ கடந்து பூமியை அடைகின்றன .சூரியனின் புறவெப்பம் 55000oCஇவ்வாறு கடுமையான வெப்பத்தையும் ,ஒளியையும் உமிழ்ந்து கொண்டே இருப்பதால் சூரியனை ஒளிரும் விளக்கு என்றும் கூறப்பட்டுள்ளது ,ஆனால் அதே சமயம் சந்திரனுக்குச் சுயஒளி இல்லாததாலும் ,அது சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதாலும் ,சந்திரனைக் குறிப்பிட்ட “முனீர்” என்ற அரபுச் சொல்பயன்படுத்தப்பட்டுள்ளது முற்றிலும் பொருத்தமானதே .அதாவது “முனீர்” என்றால் ஒளி .அதனால் ஒளிவான சந்திரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும்“கமர்” என்னும் அரபுச் சொல்லும் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது .
கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையில் (EllipticalPath)சூரியனைச் சுற்றி வருகின்றன .இறைவன் இவ்வியக்கங்களை வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன என்று அழகாகச் சொல்கிறான் .ஏனென்றால் அவை பயணம் மேற்கொள்ளும் மேற் கொள்ளும் இடம் ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளியாகும் .(Zerogravity)விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் விண்ணிற்குச் சென்று பின் -விண்கலத்திலிருந்து வெளிவந்து விண்வெளியில் ஆராய்ச்சியில் ஈடுபடும் பொழுது வெற்றிடத்தில் (Space)மிதந்த நிலையில்தான் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள் .அங்கு அவர்கள் நடப்பதற்கோ அல்லது அமருவதற்கோ ஒரு தாங்குதலம் இல்லை .அதனால் அவர்கள் மிதந்து நீந்திக் கொண்டு தங்கள் வேலையில் ஈடுபடுகிறார்கள் .உறங்கும்பொழுது மிதந்து கொண்டே உறங்குவார்கள் .இடம் பெயரும் பொழுது டைவ் அடித்துக் கொண்டு இடம் பெயர்வார்கள் .அதனால் தான் விண்ணில் சுழலும் கோளங்களை நீந்துகின்றன என்று இறைவனால் பொருத்தமாகச் சொல்லப்படுகிறது .பூமி ,சந்திரன் மற்றும் அனைத்துக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் விண்ணில் நீந்தி வருவதை விவரித்த குர்ஆன் வசனங்கள் ,பூமியின் சுழற்சி ,அதன் கால அளவு ,இரவு பகல் மாறி மாறிச் சுழற்சியில் வருதல் போன்றவற்றையும் விளக்குகின்றன .
சூரியனைச் சுற்றி வரும் பூமி தன் அச்சை மையமாகக் கெண்டு தன்னைத் தானே 231/2பாகை சாய்வான நிலையில் நீள்வட்டப் பாதையில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது .இதனால் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன .ஒருமுறை பூமி தன்னைத் தானே பம்பரத்தைப் போல சுற்றுவதற்கு 24மணி நேரம் (23மணி ,56நிமிடங்கள் )எடுத்துக் கொள்கிறது என்பதையும் ,அதன் சுழற்சி ஒரு நொடிக்கு 30கி . மீ வேகம் என்பதையும் ,சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365.25நாட்கள் ஆகின்றன என்பதையும் அறிவியல் உதவியால் அறிவோம் .இவ்வாறு தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் சூரியஒளி பூமியின் ஒரு பகுதியில் படும்பொழுது அப்பகுதி பகலாகவும் ,ஒளிபடாத மறுபகுதி இரவாகவும் உள்ளது .பூமி தொடர்ச்சியாக இவ்வாறு சுழன்று கெண்டு இருப்பதால் சூரிய ஒளிபடாத பகுதி கொஞ்சங் கொஞ்சமக சூரிய ஒளியைப் பெற்றுக் கொண்டும் அதே சமயம் சூரிய ஒளியைப்பெற்ற பகுதி சிறிது சிறிதாக இருளிலும் மூழ்குகிறது .
இதனைக் கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் எடுத்தியம்புகிறது .
நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகிறான் ; பகலை இரவில் புகுத்துகிறான் ; இன்னும் நிச்சயமாக அல்லாஹ் கேட்பவனாகவும் , பார்ப்பவனாகவும் இருக்கின்றான் .
( அல்ஹஜ் 22:61)
ஆக இந்த இறைவசனம் பூமி உருண்டை என்பதையும் ,பூமி சுழல்கிறது என்பதையும் அழகாகத் தெரிவிக்கிறது .ஒருவர் பூமியை விண்வெளியிலிருந்து கொண்டு பார்ப்பதாக வைத்துக் கொண்டால் மேலே சொல்லப்படும் உவமை எவ்வளவு உண்மை என்பது தெளிவாகும் .விண்வெளியிலிருந்து செயற்கைக் கோள்களால் எடுக்கப்பட்ட வீடியோ படங்களும் இந்த உண்மையைப் பறைசாற்றுகின்றன .அடுத்து வரும் “அஜ்ஜுமர்” அத்தியாயத்திலுள்ள வசனம் பூமியின் சுழற்சியால் இரவு பகல் மாறி வருவதை அழகாக குறிப்பிடுகிறது .
அவன் வானங்களையும் ,பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான் .அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான் .இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான் ;சூரியனையும் ,சந்திரனையும் ( தன்ஆதிக்கத்திற்குள் )வசப்படுத் தினான் .இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப்படி நடக்கின்றது ;( நபியே !)அறிந்துகொள்வீராக !அவன் ( யாவரையும் )மிகைத்தவன் ;மிகமன்னிப்பவன் ( அஜ்ஜூமர்39:5)
மேலும் இரவு பகலின் தேவையைப் பற்றியும் திருக்குர்ஆன் வசனங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன .உழைப்பதற்காகப் பகலையும் ,ஓய்விற்காக இரவையும் இறைவன் ஆக்கியுள்ளான் என்பதையும் குர்ஆன் வசனங்கள் மூலம் அறிகிறோம் .
அவன் தான் உங்களுக்கு ,இரவை ஆடையாகவும் ,நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான் ;இன்னும் அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கின்றான்”
( அல்ஃபுர்கான்25:47)
தொகுப்பு : என் . ஏ . எஸ் . திருச்சி .