• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

பக்கவாதத்தைத் தடுப்பது எப்படி ?



பக்கவாதம் தடுப்பது எப்படி ?


        பக்கவாதம் ( ஸ்ட்ரோக் ) என்பது பலரும் அச்சப்படும் முக்கிய உடல்நலப் பிரச்சினையாக இருக்கிறது . மூளை நரம்பியல் வல்லுநர் டாக்டர் . பாலசுப்பிரமணியன் பக்கவாதம் பற்றிய அடிப்படைகளை விளக்குகிறார் .

இதயத்தால் பம்ப் செய்யப்படும் ரத்தம் உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைவது போல மூளையையும் சென்று அடைகிறது. இந்த இரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மூளைத்தாக்கு ஏற்படுகிறது.  இதைஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்கிறோம் .


ஸ்ட்ரோக் எதனால் ஏற்படுகிறது ?

        இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புக் காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படுகிறது . இப்பிரச்சினை பெருமூளையின் வலப்பகுதியில் ஏற்பட்டால் உடலின் இடப்பகுதி பாதிக்கப்படும்.  இடப்பகுதியில் பிரச்சினை உண்டாகும் போது வலப்பகுதி பாதிக்கப்படும் . இதனைப் பக்கவாதம் என்று சொல்வது வழக்கம் . உடலின் ஏதாவது ஒரு பக்கத்தில் இந்தப் பாதிப்பு ஏற்படுவதால் அப்படிப் பெயர் . இதுவே சிறுமூளையில் வலது பக்கத்தில் ஏற்பட்டால் வலது பக்கம் பாதிக்கப்படும் . இடது பக்கத்தில் ஏற்பட்டால் இடதுபக்கம் பாதிக்கப்படும்.


ஸ்ட்ரோக் என்றால் என்ன ?

            மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடித்து , ஏற்படும் இரத்தக் கசிவினால் மூளை பகுதியில் இரத்தம் சேர்ந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இது தான் ஸ்ட்ரோக் .



ஸ்ட்ரோக் ஏற்படக் காரணம் என்ன ?

            பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் தலையில் அடிபடுவதுதான். இரத்தக்கொதிப்பு , மதுஅருந்தும் பழக்கம், புகைப்பிடித்தல் ஆகியவையும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் . இதுவே பெண்களுக்கு வேறு விதமான பாதிப்புகளைத் தரும் . சிலருக்குப் பிரசவத்தின் போதும் , கருக்கலையும் போதும் இரத்தம் உறையக் கூடும் . அவை இரத்த நாளம் வழியாக மூளையை அடைந்து , இரத்த ஓட்டத்தைத் தடுத்து விடும் . இதனால் ஸ்ட்ரோக் ஏற்படும் . இது உடனடியாகவோ , பின்னாளிலோ ஏற்படலாம்.


எந்தெந்த வயதில் ஸ்ட்ரோக் ஏற்படும் ?

        பிறக்காத குழந்தைகளுக்குக் கூட ஸ்ட்ரோக் ஏற்படலாம். கருவிலேயே மூளை வளர்ச்சிகுன்றிய குழந்தைகள் இருப்பார்கள் . கருவில் நன்றாக வளர்ந்த குழந்தை கூட , தாய்க்கு வலி ஏற்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குள் பிறக்காவிட்டால் , மூளைக்கு இரத்தம் பாயாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் .

குழந்தை பிறந்தவுடன் அழாவிட்டால் , மூளைபாதிப்பால் உடல் தொய்ந்துவிடும் . ஸ்ட்ரோக்குக்கு வயது மட்டுமே காரணம் இல்லை . சிறுவயதில் மூளைக் காய்ச்சல் வந்தது கூடத் தெரியாமல்  இருந்திருக்கும். அதுவே பின்னாளில் ஏதேனும் ஒரு வயதில் ஸ்ட்ரோக்காக மாறக் கூடும்.


முன்னெச்சரிக்கையாக மூளைப் பரிசோதனை செய்யலாமா ?

            மாஸ்டர் செக்கப் போல மூளை செக்கப் என்று முன்னெச்சரிக்கை பரிசோதனை எதுவும் கிடையாது . சிலர் திடீரென்று மயக்கமடைந்து விழுந்துவிடுவார்கள் . அப்போது கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் . இரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் . இதன் கரணமாக இரத்த ஓட்டம் தடைபட்டு மூளையைப் பாதித்திருக்கக்கூடும். இந்தநேரங்களில் எம்.ஆர். ,  சி. டி. ஸ்கேன் பேன்ற பரிசோதனைகள் அவசியம் .



உடலில் எங்கு அடிபட்டாலும் பின்னந்தலையில் அடிபடக்கூடாது என்று சொல்வதற்கான காரணம் என்ன ?

            சிறுமூளை , பெருமூளை , தண்டுவடம் ஆகியவற்றை இணைக்கும் பகுதியான மெடுலா ஆப்லங்கேட்டா பின்னந்தலையில்தான் இருக்கிறது . இங்கு அடிபட்டால் உடலின் பல பகுதிகளும் பாதிக்கப்படும் . பெருமூளை பாதிக்கப்படுவதன் காரணமாகக் கை , கால்செயலிழப்பு , சிறுமூளை பதிப்பால் ஐம்புலன்களான பார்த்தல் , கேட்டல் , சுவைத்தல் , முகர்தல் , தொடுதல் ஆகியன பாதிக்கப்படும் . அதனால் எக்காரணம் கொண்டும் பின்னந்தலையில் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் . இருசக்கரவாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது அடிபடாமல் தலையைக் காக்கும்


மூளை பலத்திற்கு என்ன டயட் ?

            டென்ஷன் கூடாது . வறுத்தது , பொரித்தது கூடாது . உணவில் எண்ணெய் , நெய் , வெண்ணெய்அளவுக்கு மீறிய அசைவ உணவு,முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் . அதே நேரத்தில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவுக்கு அதிகமானால் ஜெல் போல் பிசுபிசுதன்மையைப் பெறும் . இந்நிலையில் ரத்தத் திரவத் தன்மையின் மாறுபாட்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இவ்வாறு இரத்தம் ஜெல் போல் மாறினால் பக்கவாதம் ஏற்படும் .