• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »      2014      »      Aug 2014      »    தலையங்கம்


தலையங்கம்

பிறந்தநாள் செய்தி


சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் 79 ஆம் உதயநாள் இன்ஷா அல்லாஹ் வரும் ­ ஸவ்வால் பிறை 16, (13-08-2014) புதன் கிழமையன்று மலர்கிறது. குத்புமார்களின்  உதயம் இந்த உலகிற்கு ஓர் அருள் மழை என்பதில் சந்தேகமில்லை.  இறை நேசர்கள் தாங்கள் இவ்வுலகில் மலர்ந்த இலட்சியத்தை தங்கள் வாழ்நாளில் அடைந்தே தீர்வார்கள்மாறும் காலங்களின் மாறுதலுக்கேற்ப குத்புமார்களின் இலட்சியமும் அருட்பணியும் மாறுபடுகிறது. நமது அருட்தந்தை வாப்பா நாயகம் அவர்கள் மலர்ந்த நோக்கத்தை அவர்களின் இதயக்கருத்திலிருந்தே இங்கு நாம் காணலாம்அவர்கள் தங்கள் பேரின்பப்பாதை எனும் நூலில் இவ்வாறு மனம் திறக்கின்றார்கள்அன்று சிலரிடத்து உறைந்தும்; ஓரளவேனும் நிறைந்தும்;  குறைந்த அளவிலேனும் பரந்து மிருந்த ஆத்ம ஞானம் இன்று அறவற்றித் தாகத்திற்ற விப்போர்க்குச்சிறு துளியேனும் பருகிப்பரவசமடைய இல்லாதிருப்பது காணக்கண்கள் அரத்த நீர் சொரிகின்றன எண்ண எண்ண உள்ளம் பிளக்கின்றது கேட்கச்செவிகள் கழிக்கின்றன .....


அறபுநூல்கள் பலவும் தமிழ் நூல்கள் பலவும் ஏகத்துவ ஞானத்தை நிறையப் போதிக்கின்றன . அவற்றிலுள்ள ஏக ஞானத்தைப் பார்ப்பார் இலராதலால் அஃது ஏட்டளவிலே ஆகிவிட்டது. ஆதலின் இவ்வறிவைப் பரப்புவான் வேண்டி நாம் பல முயற்சிகள் எடுத்துள்ளோம். உண்மை எவ்வாறாயினும் வெளியாதல் வேண்டுமாதலால் எமது முயற்சி கூடிய பலனெய்தும் என்பது நிச்சயம் .

நாமெடுத்துள்ள முயற்சிகளில் மற்றையது ஞானசங்கங்களை இந்தியாவில் நம் அன்பர்கள் உறையும் எல்லா ஊர்களிலும்  நிறுவுதலாகும்.  இதில்ஞான விளக்கங்கள் கொடுக்கப்படும். கைதேர்ந்தஞானிகள் இதிற்கூடி ஞானப்பிரசங்கங்கள் செய்வர் .


நூற்களின் மூலம் ஞானத்தைப் பரவச்செய்வதும் , ஏகத்துவ மெய்ஞ்ஞான சபைகளை பல ஊர்களில் நிறுவுவதும் தங்களின் அருட்பணியின் முக்கிய அங்கமாக அறிவித்துள்ளார்கள் செய்குநாயகம் அவர்கள் .ஹக்கைக் காட்டித்தரும் மெய்ஞ்ஞானம் அனைவரையும் சென்றடைய அனைத்து ஊர்களிலும் ஞான சபையினை ஏற்படுத்தவும் தமிழ் பேசும்மக்கள் அனைவரிடமும் அவர்களின் நூற்கள் பரவவும் செய்வதே அவர்களைப் பின்பற்றும் சீடர்களுக்கு அவர்கள் உணர்த்தும் பிறந்த நாள் செய்தியாகும் !