Pezhai » 2014 » Aug2014 » கனி கின்ற சலவாத்து
கை நகம் கண்தொட்டு கனி கின்ற சலவாத்து
இஸ்லாத்தின் பூர்வீக வழிதான் அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத் . இந்தக் கொள்கைக்கு மாற்றமாக இஸ்லாத்திற்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறிவரும் பல முஸ்லிம் பெயர் தாங்கிகள் தமது அமைப்புகளி ன்மூலம் ஏற்படுத்தும் பல குழப்பங்களால் சிதறுண்டு செய்வதறியாமல் நிற்கிறது நமது சமுதாயம் . குழப்பத்தில் இருந்து தெளிவு பெற நமக்கு அன்றே ஒரு வழியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள் . உங்களில் யாராவது என் காலத்திற்குபின் வாழ்ந்தால் மார்க்கத்தில் ஏராளமான அபிப்ராய வேற்றுமைகளை ( குழப்பங்களை ) பார்க்கநேரிடும் . அந்நேரத்தில் எனது ஸுன்னத்தையும் , குலபாவுர்ராஷிதீன் ( நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் ) ஸுன்னத்தையும் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள் .( நூல் : அஹ்மத் , திர்மிதி , அபூதாவூத்இப்னுமாஜா )( மிஷ்காத் :30)
பாங்கில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று கூறும்போது ஸலவாத் கூறி இரு பெருவிரல்களால் கண்களில் ஒத்திக் கொள்ளுதல் ஹள்ரத் அபூபக்கர் ( ரலி ) அவர்கள் செய்த ஒரு சுன்னத் ஆகும் . ஆனால் இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட ஸுன்னத்தை எல்லாம் திரையிட நினைத்து குழப்பக்காரர்கள் பித்அத் , ஷிர்க் , ஹராம் என்று கூறி உலறிக் கொண்டிருக்கின்றனர் . பாவம் . ஸுன்னத்தான செயலை அலட்சியம் செய்வது குஃப்ர் ஆகும் என்பது மார்க்க மேதைகளின் தீர்ப்புஆகும் . எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஸுன்னத்தையும் குலஃபாவுர் ராஷிதீன்களின் ஸுன்னத்தையும் இலேசாகக் கருதுவது குஃப்ர் ஆகும் . நிச்சயமாக அல்லாஹ்வும் இன்னும் அவனது மலக்குமார்களும் நபியவர்கள் மீது ஸலவாத் செல்கிறார்கள் . ஈமான் கொண்டவர்களே நீங்களும் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள் .( அஹ்ஜாப் :56)
அல்லாஹ் நூரே முஹம்மதியாவை ஆதம் ( அலை ) அவர்களின் இரு பெருவிரல்களில் தவழச் செய்தான் . உடனே , ஆதம் ( அலை ) அவர்கள் அவ்விரு பெருவிரல் நகங்களையும் முத்தமிட்டு கண்ணில் ஒத்திக் கொண்டனர் . இச்செய்தியை ஜிப்ரயீல் ( அலை ) அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு அறிவித்தார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :-
பாங்கில் யார் பெயரைக் கேட்டு அவர்களின் இரு பெருவிரல் நகங்களை முத்தமிட்டு கண்ணில் ஒத்திக்கொண்டாரோ அவர் ஒரு போதும் குருடராகா ( நூல் : கஸஸுல் அன்பியா தப்ஸீர்ரூஹுல் பயான் 648/4)
மேலும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹர்ரம் 10 ஆம் நாள் ஜும்ஆ தொழ பள்ளிவாசலுக்கு வந்து ஒரு தூணின் பக்கம்அமர்ந்தார்கள் . அபூபக்கர் ( ரலி ) அவர்கள் நபியவர்களின் பெயரைக் கேட்டு இரு பெருவிரல்களின் நகங்களை முத்தமிட்டு கண்ணில் ஒத்தி கர்ரத் ஐய்னீ பிக யாரஸூலல்லாஹ் ( நபியே ! நாயகமே ! தங்களின் மூலம் என் கண்கள் குளிர்ச்சி அடைந்தன என்று கூறினார்கள் . பிலால் ( ரலி ) அவர்கள் பாங்கு சொல்லி முடித்ததும் நபியவர்கள் அபூபக்கரே ! உம்மைப் போல் யார் இவ்வாறு பாங்கில் என் பெயர் கேட்டு அவரது இருபெருவிரல்களையும் தன் கண்ணில் ஒத்தி நீங்கள் சொல்வது போல் சொல்கிறாரோ அல்லாஹ் அவரதுஉள் , வெளி , புதிய , பழைய பாவங்களனைத்தையும் மன்னித்து விடுவான் என்று கூறினார்கள் .( நூல் : முஹீத் மற்றும் ரூஹுல் பயான் 648/ 4)
ஹள்ரத் குஹ்ஸ்தானி ( ரலி ) அவர்கள் கூறுகிறார்கள் :
பாங்கில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் எனும் இரு ஷஹாதத்தில் முதலாவது ஷஹாதத்தை கேட்கும்போது ஸல்லல்லாஹு அலய்க்க யாரஸுலல்லாஹ் என்றும் இரண்டாவது ஷஹாதத் கேட்கும்போது கர்ரத் ஐய்னீபிக யாரஸூல்லாஹ் என்று கூறி தனது இரு பெருவிரல்களையும் கண்கள்மீது வைத்து யா அல்லாஹ் பார்வையிலும் , கேள்வியிலும் சுகத்தை அதிகப்படுத்துவாயாக ! எனச்சொல்ல வேண்டும் . ஏனெனில் நபியவர்கள் இவ்வாறு செய்பவர்களுக்கு சுவனத்தின் பக்கம் அழைத்துச் செல்லக் கூடியவர்களாவார்கள் . ( நூல் : கன்ஜூல் இபாத் ரஹு ந்நுகாயஹ் )
வஹப் இப்னு முனப்பஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
பனீ இஸ்ராயீலர்களில் ஒருவர் 200 வருடகாலமாக இறைவனுக்கு மாறு செய்து கொண்டருந்தார் . இவ்வாறு பல பாவங்களை செய்து நீண்ட காலமாக மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தார் . அவர் மரணித்தவுடன் மக்கள் அவரை மாட்டு கொட்டகையில் தூக்கி எறிந்து விட்டனர் . அல்லாஹுதஆலா நபி மூஸா ( அலை ) அவர்களுக்கு அந்த மனிதரை நல்லடக்கம் செய்யவும் என வஹி அறிவித்தான் . அப்போது மூஸா ( அலை ) அவர்களிடம் பனூ இஸ்ராயீலர்கள் இவர் மிகப்பெரும் பாவி . மோசமானவர் எனக் கூறினர் . இதைக் கேட்ட மூஸா ( அலை ) அவர்கள் இறைவனிடம் யா அல்லாஹ் இவரை என் மூலம் சங்கை செய்த காரணம்என்ன ? என்றார்கள் . அதற்கு அல்லாஹ் அவரைப் பற்றி பனூஇஸ்ராயீலர்கள் சொல்வது சரிதான் . எனினும் அவர் தெளராத்தை திறந்து முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பெயரைப்பார்க்கும் போதெல்லாம் அதை முத்தமிட்டு அவரது இரு கண்களிலும் ஒற்றிக் கொள்வார் . இதனால் தான்நான் அவருக்கு அந்தத் தகுதியைக் கொடுத்து , அவர் பாவத்தை மன்னித்தேன் . அவருக்கு 70 ஹூருல்ஈன்களை மணமுடித்துக் கொடுத்தேன் என்று இறைவன் கூறினான் . ( நூல் : ஸீரதுல் ஹலஃபிய்யா பாகம் 1/ பக்கம் 85, ஹில்யதுல் அவ்லியா பாகம் 4/ பக்கம் 46)
மேற்கூறப்பட்ட ஆயத் , ஹதீஸ்களில் இருந்து பெருமானாரின் பெயர் கேட்டால் ஸலவாத் கூறி இரு பெருவிரல்களையும் முத்தமிட்டு கண்ணில் ஒற்றிக் கெள்வது ஸுன்னத் ஆகும் . அப்படி ஒற்றிக் கெள்வதன் மூலம் நமக்கு அதிகமான நன்மைகள் இருக்கின்றன , நிவாரணமும் இருக்கிறது, பாவமன்னிப்பும் இருக்கிறது இன்னும் சுவர்க்கமும் கிடைக்கிறது . மேற்கூறப்பட்ட ஒரு ஹதீஸில் பனூ இஸ்ரயீலர்ஒருவர் எந்தவொரு நன்மையும் செய்யாமல் 200 வருடமாக பாவம் செய்தவர் கண்ணில் ஒற்றிக் கொண்டு பெருமானாரின் பெயரைச் சிறப்பித்ததற்கு இறைவன் அளித்த கூலி சொர்க்கம் . எனவே நாமும் அகிலத்தின் அருட்கொடையின் அருளான பெயரைக் கேட்டு ஸலவாத் ஓதி கண்ணில் ஒற்றிக்கொள்வோம் ! அனைத்து விதமான நன்மைகளையும் எல்லாம்வல்ல அல்லாஹ் நபியவர்கள் பொருட்டால் அனைவருக்கும் தந்தருள்வானாக . ஆமீன் .