• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »      2014      »      Aug 2014      »    ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர் 


ஜமாலிய்யாதோட்டத்தில் கொய்த மலர்



  • ஆதி எல்லாப் பொருள்களுக்கும் மூலமானதுமூலாதாரமானதுஅருவாயும் உருவாயும் விளங்கும் அனைத்தும் உற்பத்தியான உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் உற்பத்தியாகவிருக்கும் மூலாதாரமே ஆதி.


  • பரிசுத்த மெய்ஞ்ஞானமே ஹக்கைக் காட்டுவதற்குள்ள ஒரே வழியாகும்வேறெந்த வழியிலும் சென்று இறைவனை அடையவே முடியாது .


  • அல்லாஹ்வை தனித்தனியாகப் பிரித்து அறிவதை விட முழுமையாக அறிவதுதான் முக்கியம் .


  • செல்ல முடியாத இடத்திற்கு அறிவை செலுத்திப் பார்த்துக் கொள்ளலாம் .அறிவுக்குத்தான் முக்கிய இடம் .


  • நாம் சாப்பிடும்போதும் நாம் நினைக்கும் போதும் தூங்கும் போதும் பரிபூரணக் கருத்தைக்கொள்ள வேண்டும் .


  • உண்ணும் போதும் உறங்கும் போதும் அந்தப்பரிபூரணக் கருத்தை கைக்கொள்ளும் போது அந்த பரிபூரண தஜல்லி நம்மிலே வெளியாகும் .எனவே நாம் எதைச் செய்தாலும் அவன் செய்ததாகவே நினைக்க வேண்டும்அது நாளடைவில் ஹக்கு செய்ததாகவே மாறிவிடும் நமது முழுத்தோற்றமும் உருவமும் எண்ணமும் அதுவாகவே மாறிவிடும் .


  • ஞானம் என்பது அல்லாஹ்வை அறிவதுஞானத்தின் மூலம் கலிமாவாகும்கலிமா என்பது நம்மிலும் நம்மிலிருந்து பரந்து விரிந்து நிலம்நீர்தாவரம்மரம்மட்டைவானம்பூமி அண்டசராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளதுபரிபூரணமாகவியாபித்துள்ளது .


  • பரிபூரண தெளஹீது இலங்கும்இலங்குகின்ற எம் இஸ்லாமிய சமூகத்தில் தெளஹீதின் அற்ப அறிவாவது இல்லையே எனக் கவலை கொள்கிறோம்வருங்காலத்தில் இஸ்லாத்தின் கதி என்னவாகுமோ?  நல்அருளை ஹக்கு அருள வேண்டும் .


  • ஷைகிடம் அதிகமான அன்பு கொள்ள வேண்டும். (ஃபனாஃபிஷ்ஷைக்ஷைகிடம் இரண்டறக்கலத்தல் தான் தவ்ஹீதின் முதலாவது படியாகும்அதற்குப்பிறகு தான் ஹக்கில் இரண்டறக்கலப்பது. எனவே ஷைகிடத்தில் உரிய அன்பும் மரியாதையும் பயபக்தியும் இருந்தால் தான் முரீதின் வாழ்வில் சிறப்பு உண்டாகும் .


  • எல்லா ஞானிகளுக்கும் வலிமார்களுக்கும் நாமே தலைவராய் இருக்கிறோம்அவர்கள்( ஞானிகள் தம்மைஅறியாத வகையில் எம்மாலே இயக்கப்படுகிறார்கள் .


 (சங்கைமிகு செய்குநாயகம் அவர்களின் அமுதமொழிகள் தொகுப்பான மனிதா நூலிலிருந்து - தொகுத்தவர் - அபூபாஹிரா )