• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »      2014      »      Aug 2014      »      குத்பிய்யத் எனும் மகத்துவ ஆடை 



குத்பிய்யத் எனும் மகத்துவ ஆடை !



ஞானமே நாமாவோம். எனவே, எம் உடலைக் கண்டு இவர் யார் ?  என்ன ? என்று மருட்சி அடைகின்றனர்.  எம் உடலைப் பார்க்க வேண்டாம். அதுவோ தசை, எலும்பு, நரம்பு, இரத்தம் முதலானவைகளையும் பொதிந்த ஒரு பெட்டியாகும். எம்கருத்தைக் கவனியுங்கள். என்ளாஹிரியத்தைக் கண்டு ஓடிவிடாதீர்கள். எம்பாதினிய்யத்தைக் கண்டு என்பக்கம் நெருங்குங்கள். என் சொல்லைக் கேட்டு வெளியே ஓடிவிடாதீர்கள்.  என்சொல்லிற் பொதிந்துள்ள ஆழமான கருத்தைக் கண்டு என்னை அணுகுங்கள். என் நடையை அல்லது நடத்தையைக் கவனிக்காதீர்கள்ஏனெனில் அவையெல்லாம் ஹக்காகவே நடாத்திவைக்கிறது. எம் நடத்தையில் பிழை கண்டு ஓடிவிடாதீர்கள். ஓடுவீர்களாயின் வழுக்கி விழுவீர்கள். அப்போது உம்மை நேர் நிறுத்த எவரும் சக்தி பெற மாட்டார். எம் உடையைப் பார்த்து என்ன இவர்யார்? எனப்பிரச்சினைகளைக் கிளப்பி விடாதீர்கள். ஏனெனில் நாமே உடைக்கு உடையாயுள்ளோம். நாமோ காலத்தின் உடையாகிய குத்பிய்யத்தின் உடையை அணிந்துள்ளோம் . எமது வெளியுடையில் மருண்டுவிடாதீர்கள்.  நாம் உடுத்திருக்கும் அந்தரங்க உடையே மிக மேலானது .

எம்மை நெருங்கினவர் ஜயம் பெற்றார். எம்மைவிட்டு ஓடியவர் பயம் உற்றார். எம்மை உள்ளாலும் வெளியாலும் நேசித்தவர் எம் ஆட்சி பீடத்தின் அங்கத்தவர்கள் .  எம்மை உள்ளும் புறமும் நேசித்து அவர்கள் தம்மையே நமக்குத் தியாகம் செய்தவர்கள் நம் ஆட்சி பீடத்தின் மந்திரிமாராவர்.  நாமே சக்கரவர்த்தி. உலகத்தை ஹக்கு நம் வயப்படுத்தியுள்ளது. இஃது எமக்குக் கிடைத்த மாபெரும் சிறப்பாகும். தன்னயத்தை நாடி தற்பெருமையை நாடி ஹக்காகிய குத்பை அணுக வேண்டாம். ஹக்கில் ஹக்காய்க் கலக்கவும் தற்சிறப்புத் தேடியும் ஹக்கை நாடுங்கள். குத்பிடத்தில் அற்புதம் (கராமாத்) நாடிச் செல்ல வேண்டாம். கராமாத் காட்டுவதும் கராமாத்தும் ஒன்றேயாகும். அது நாடிய நேரம் கராமாத்தைக் காட்டும்உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அது அடி பணியாது.  கராமாத்தைக் கொண்டு விலாயத்தை அளப்பது மடமையாகும் .  எவரிடத்தில் மகாமே லாத அய்யுன் உள்ளதோ அவரே ஒப்பற்ற மகானாவார்.  ஹக்கைத் தெளிவாக அறிந்தவனே வொலி ஆவான்.  அற்ப அறிவேனும் ஹக்கில் அற்றவன்பதர் ஆவான்.  அவன் ஒதுங்குந்தலம் மாபெரும் நரகமாகும் அர்ஷைக் கடந்த அவரே குத்பு ஆவார் .

இது அனைவருக்கும் பொதுவான ஓர் அறிவித்தல்.  விஷய விளக்கம் உள்ளவர் இதை அறிதல் மிக மிக முக்கியமும் அவசியமும் ஆகும்.  இது ஹக்கின்  கட்டளையாகும். இதனை நம் முரீத்களின் விஷய விளக்கம் உள்ளவர்களுக்கு அறிவியுங்கள். மற்றவர்களுக்கு  தேவையான விளக்கத்தை மாத்திரம் அறிவியுங்கள் .

சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் கலீபா. மர்ஹூம் காதிர் முஹம்மது ஆலிம் அவர்களுக்கு எழுதியபட்டோலையிலிருந்து.


 (பார்த்து எழுதியவர் : ஆலிம்புலவர் )