• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »      2014      »      Aug 2014      »      அமுதமொழிகள்


சங்கைமிகுஷைகு நாயகம் அவர்களின்

அமுதமொழிகள்

துபையில்கலீபா ஏ . பி . ஸஹாபுத்தீன்பி . . எம் . பி . . ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை



அன்புக்குரிய முரீதுப்பிள்ளைகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
(வரஹ்)  நாம் வாழும் வாழ்க்கைக்கு ஓர் இலக்கணம் இருக்கிறது .  மொழியென எடுத்துக் கொண்டால் தமிழ் அறபி எதனை எடுத்துக் கொண்டாலும் எல்லா மொழிகளுக்கும் இலக்கணம் இருக்கிறது. அதையே இலட்சியம் எனவும் சொல்லலாம். அதாவது நமது வாழ்க்கையில் நல்லவை நடப்பதற்கு ஓர் இலக்கணத்தை வகுத்துக் கொள்வது. இன்ன இன்ன மாதிரி வாழப் போகிறோம் என வகுத்துக் கொள்வது. அதை இடையிலே முறித்துக் கொள்ளக்கூடாது. அப்படி நாம் கவனமாகச் செல்லும் புரோகிராமை - முறித்து விட்டால். அதுவே ஒரு தடையாகப் போய்விடும். அப்போது அதற்கு வாழ்க்கைக்கு - ஓர் இலக்கணம் இல்லை. இலக்கணம் வாழ்க்கைக்குக் கட்டாயமானது 


மொழியை எடுத்துக் கொண்டாலும்
ஒரு பாடலாக இருந்தாலும் அதற்குரிய இலக்கணம் அதற்குக் கட்டாயம் தேவை. அதே போல உலக வாழ்க்கை வாழவும் ஓர் இலக்கணம் தேவை. ஒழுங்கு முறைகள் இருக்க வேண்டும்ஆனால் அது எங்கள் பொது மக்கள் மத்தியில் இருக்காது. அதனால் தான் வாழ்க்கையில் பல தொல்லைகளும் துன்பங்களும் துயரங்களும் ஏற்படக் காரணம். துன்பங்கள் இருக்கக் கூடாது என்பது தான் மனித வாழ்க்கைக்கு முக்கியமானது. எனவே அதற்குரிய வழியை வகுத்து இன்று இப்படித் தான் நடக்க வேண்டும். நான் இவ்வாறு தான் நடக்க வேண்டும் என வழிமுறை வகுத்து நடக்கவேண்டும் . அதற்கு மாற்றமாக நாம் நடப்பது தவறு. தவறு என்றால் அது எங்காவது தவறான வழியில் கொண்டு போய் விட்டுவிடும் .



ஒரு நாள் தொழுகையை சரியான முறையில் எப்படியாவது தொழுது முடித்துவிட வேண்டும்லுஹரை அஸருக்கும் அஸரை இஷாவுடைய நேரத்திலும் தொழுதால் அது ஒழுங்கு அல்ல. ஸுபுஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா என ஓர் ஒழுங்கு முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக நாம் போக முடியுமா? ஒழுங்கு முறையில் நடப்பவர்கள் ஜயம் பெறுகிறார்கள். அப்படி இல்லாதவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது கஷ்டம். மார்க்கத்துக்கு ஒரு முறை இருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை உண்ணுவதும் உறங்குவதுமாக மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது.  சாப்பிடுவது - உறங்குவது போக மீதி நேரத்தை என்ன செய்வது? அதை நல்ல வாழ்வை உருவாக்கிக் கொள்ள உபயோகிக்க வேண்டும். அது மிகவும் அவசியம். ஸுபுஹு தொழுது விட்டால் குர்ஆன் ஓதிவிட்டு ஏதாவது பசியாறி விட்டு நம் தொழிலை கவனிக்கப் போகவேண்டும்.  இடையே வரும் லுஹர் அஸர் மற்ற வக்துகளை சரியாகத் தொழுவதற்குள்ள வழிகளை உண்டு பண்ணிக் கொள்ளவேண்டும் .


பாரதியாரின்பாடம்

காலைஎழுந்தவுடன் படிப்பு 
பின்னர்கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு 
மாலைமுழுவதும் விளையாட்டு - என 
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா !

எனபாரதியார் பாடிவைத்தார் .

காலை எழுந்தவுடன் படிப்பு - உண்மையிலேயே காலை எழுந்தவுடன் படித்தால் அது மனதில் தங்கிக் கொள்ளும். எந்த வயதாளிக்கும் அது நல்லது - ஏனெனில் காலையில் எந்த எண்ணங்களும் மனதில் புகுதாமல் இருக்கும் நேரம். அந்தநேரம் படித்தால் மனதில் அதுதங்கி விடும் .

அடுத்து, “ பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு”  அதாவது மனதை சுத்தப்படுத்தக்கூடிய அழகான பாட்டுக்களைப் பாடுவது. சிலருக்குசில பாடல்கள் பிடிக்கும். சிலருக்கு (அறபு இலக்கியமான) “பானத்சு ஆது” பிடிக்கும். சிலருக்கு அவர்களே எழுதிய பாடல்கள் பிடிக்கும்கனிவு கொடுக்கும் பாட்டு என்றால் மனதுக்கு இன்பமளிக்கும் பாடல் என்பது பொருள். அடுத்து பாரதியார் “மாலை முழுவதும் விளையாட்டு” எனப் பாடுவார். அதாவது மாலை முழுவதும் விளையாடுவதல்ல. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் விளையாடி விட்டு புத்தகங்கள் வாசிக்க வேண்டும். விளையாடுவது உடலுக்கு நல்லது. அது மூளையையும் ஒழுங்குபடுத்திவிடும். உடலுக்கு பயிற்சி செய்து விட்டு படிக்கும்போது மூளையும் புத்துணர்ச்சி பெற்று விழிப்பாக இருக்கும். மாலை முழுவதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்ளுபாப்பா என்றார் பாரதியார். அதாவது இப்படி வழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? காலை எழுந்து ஸுபுஹு தொழுதுபின்னர் குர்ஆன் ஓதிவிட்டு காலை உணவு பசியாறிவிட்டு தொழிலுக்குப் போக முயற்சி எடுக்க வேண்டும். இந்த மாதிரியான வழக்கத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்இதுதான் முஸ்லிம்கள் செய்து கொள்ள வேண்டிய ஒழுங்கு .

ஒரு தொழில் செய்யும் போது அதை விருப்பத்தோடு செய்ய வேண்டும். நாம் தொழிலுக்குப் போகும் இடத்தில் இப்படி இப்படியெல்லாம் நடக்கும்; மேலாளர் இப்படியெல்லாம் ஏசுவார். அதைச்சொல்வார் ...... இதைச்சொல்வார் .. எனநினைத்துக் கொள்ளக் கூடாது. நாம் தொழிலுக்குப் போவது நாம் உண்ணுவதற்காகத்தான். நம்தேவைக்குத்தான் நாம் போகிறோம் . யார் என்ன பேசினாலும் எங்கள் வேலையை நாம் நேர்மையாகச் செய்துவிட்டுவர வேண்டும். நாம் நேர்மையாக நடந்து கொண்டால்நமக்கு எந்த இடத்திலும் சிரமம் கஷ்டம் வந்து சேராது. நமக்கு மேலே இருக்கும் மேனேஜரிடம் அவருக்குத் தகுந்தாற் போல நடந்து கொண்டால் அவர் நம்மை ஏச வேண்டிய தேவை இருக்காது . நாம் போகும் இடங்களில் இவ்வாறு தொடர்ந்து நடந்தால் நமக்கு மகிழ்ச்சி போய் விடும். மகிழ்ச்சி இல்லாமல் சம்பாதிக்கும் சம்பாதிப்பு திருப்தியைத்தராது. பொருத்தமானதாகவும் அழகானதாகவும் இருக்காது . அப்படித் தானே. எனவே மேலாளர் பேசுவதை சிந்தித்துக் கொண்டே இராமல் நம்முடைய கடமையை சரியாக செய்து வர வேண்டும். இங்கே ( வெளிநாடுகளுக்கு ) நாம் வருவது சம்பாதிப்பதற்கு. சும்மா இருக்க வரவில்லையே. நமக்குரிய         விஷயத்தை சரியாக செய்து விட வேண்டும் . இப்படியான ஒழுங்கு முறையை எங்கள் வாழ்க்கையில் வைத்துக் கொள்ளவேண்டும்.


தொழிலொடு ஞானமும் வேண்டும் 

நாம் கூறி வந்த இவையெல்லாம் பொதுவாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள். இவற்றை ஒழுங்குபடுத்தி நடந்து வருவதோடு எங்களுக்கு முக்கியமான - இல்லை. இல்லை எல்லோருக்குமே தேவையான ஞானத்தை அறிய முயல வேண்டும்.  நாம் எங்கிருந்து வந்தோம்? என்பதை அறிவது! இந்தஅறிவு எல்லோருக்குமே தேவை! இறைவன், கடவுள், அல்லாஹ் எனவெல்லாம் சொல்கின்றார்களே அது என்ன? என்பதை அறிய வேண்டும்.  இதனை அறியாமல் இருப்பதால் புண்ணியம் இல்லையே!எங்களுடைய வாழ்க்கையில் இறைவனை அறிவதும் ஓர் அங்கம் எனக் கொள்ள வேண்டும்மார்க்கத்தில் முதலாவது “அவ்வலுத்தீனி மஃரிபதுல்லாஹ்” அல்லாஹ்வைப்பற்றி அறிவது தான் என ரஸுல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள். மார்க்கத்தில் முந்தியது தொழுகை என அவர்கள் கூறவில்லைகொஞ்சம்பேர் தொழுகையையே பிடித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அல்லாஹ்வைப் பற்றி அறிவதில்லை. இதைப்பார்த்தால் ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாற்றமாக இருக்கிறதல்லவா ?


இரண்டும் வேண்டும்

அதையும் செய்ய வேண்டும்! இதையும் செய்ய வேண்டும். ஆனால் முதல் வேலை எதுவென்றால் அல்லாஹ்வை அறிவது தான்! மக்கள் அதைப் பார்ப்பதில்லை. சிந்திப்பதில்லையே! தப்லீக் இயக்கத்தினர் எப்போது பார்த்தாலும் தொழவாருங்கள் தொழவாருங்கள் என அழைத்துக் கெண்டே இருப்பர். அவர்கள் கலிமாவைப் பற்றி  இதற்கு இப்படிப் பெருள் உள்ளது ...... விளக்கம் உள்ளது எனச் சொல்கிறார்களாஅப்படிச் சொன்னால் அவர்கள் பின்னே பலர் போவார்கள் தேவை இல்லாத செய்திகளைப் பற்றித்தான் கதைக்கிறார்கள். எங்களுக்கு அல்லாஹ்வும் ரஸூலும் சொல்லிக்கொடுத்தது குர்ஆன் ஷரீபைப் பற்றித்தான். வேறு ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொல்லவில்லை. (இதோ எதிரே வைக்கப்பட்டுள்ள) “இறையருட்பா” நூலைப் படியுங்கள் என அல்லாஹ்வோ ரஸுலுல்லாஹ்வோ கட்டளையிட்டார்களா? குர்ஆன்தானே ஓதச் சொன்னார்கள் . யார் யாரோ எழுதிய கண்ட கண்ட புத்தகங்களை வாசிப்பதைவிட  குர்ஆன் ஓதுவது எவ்வளவோ மேலானது. சிலர் கேட்பார்கள். எங்களுக்குத்தான் பொருள் தெரியவில்லையே பொருள் அறியாமல் ஓதிக் கொண்டு போகிறோமே? பயன் என்ன எனக் கேட்டார்கள் .


ஆத்மா அறியும்

அப்படி ஓதுவது நல்லது தான். சொல்லப்போனால் மிக மிக நல்லது . ஜும்ஆவில் அரபியில் குத்பா ஓதுகிறார்கள். ஏதாவதுபொருள் உங்களுக்கு புரிகிறதா? அல்ஹம்துலில்லாஹ் என்பதும் மேலும் ஏதாவது ஓரிரு வார்த்தைகள் தெரிந்திருக்கும். ஒன்றும் புரியாத அதனை குத்பா ஓதும்போது காது தாழ்த்திக் கேளுங்கள் என ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏன் சொன்னார்கள்? அதன் ரகசியம் என்னவென்றால் உங்கள் ஆத்மாவுக்கு அது விளங்கும் என்ற கருத்தில்தான் . உங்களுக்கு விளங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஆத்மாவுக்கு அதன் பொருள்விளங்கும் என்பதால்தான்! ஆத்மா உள்ளே திருத்திக் கொள்ளும். ஆத்மாவுக்கு எல்லாமே தெரியும்! ஆத்மாவுக்கு தமிழ்தான் தெரியும் ஆங்கிலம்தான் தெரியும் அரபிதான் தெரியும் என்று சொல்ல முடியாது. அறபு மொழியே  தெரியாத ஒருவர் இறந்த பின் அறபு பேசுவார் ! தமிழே அறிமுகமில்லாத ஓர் ஆங்கிலேயன் சுத்தமான தமிழில் பேசுவான்! இதிலிருந்து ஆத்மாவுக்கு எல்லாமே தெரியும் என்பதுதான் இதன் கருத்து. அதனால் தான் குத்பாவை காது தாழ்த்திக் கேட்டால் உங்களுக்கு தவாபு எனச் சொல்லப்பட்டுள்ளது .


உள்ளிருந்து வேலை செய்யும்

அதே போலத்தான் குர்ஆன்  ஷரீஃபை பொருள் தெரியாமல் ஓதினாலும் - தெரிந்து ஓதினாலும் குர்ஆன் ­ ஷரீஃபை மனதில் பதிந்து அது உங்களை நேர்வழிப்படுத்தும். அதனால்தான் குர்ஆன் ஓதுங்கள் எனச் சொல்லப்பட்டது . ஏதோ ஓதி விட்டுப் போவோம் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அது உள்ளிருந்து வேலை செய்வது தெரியாது! அதுதானே - ஆத்மாதானே சுத்தப்பட வேண்டும்! ஆகையால் குர்ஆன் ஷரீபை எல்லோரும் ஓதலாம். எந்த சட்டதிட்டமும் இல்லை. இஃராபுகளை (ஜேர் - ஜபர்) ஒழுங்காக ஓதி வந்தால் போதும். தஜ்வீதுப்படியே இழுத்து இழுத்து ஓத வேண்டுமென்ற சட்டம் இல்லை. ஆகவே குர்ஆன் ஓதுவதும், குர்ஆனுக்கு மரியாதை செய்வதும், அதனை தக்க இடத்தில் வைப்பதும் அவசியம். (மதுரஸாவுக்குச்செல்லும்) குழந்தைகள் தங்கள் கைகளின் கக்கத்தில் வைத்துக் கொண்டு போவார்கள்.  அதுஅதபுக்கேடு !


மாமறைக்கு மரியாதை

அதேபோல பையில் போட்டு முழங்காலுக்குக் கீழே கைலியைத் தூக்கிக் கொண்டு போவார்கள்குழந்தைப் பிள்ளைகளுக்கு இப்படிச் செய்யக் கூடாது என நாம் சொல்லித்தர வேண்டும். ஏன் குர்ஆனை தலையில் வைத்துக்கொண்டு போக வேண்டியது தானே ! அப்படிக்கொண்டு போனாலும் அது மேலும் மரியாதைதான் ! உள்ளே இருக்கும் மூளைக்கும் நன்மை இருக்கும்! குர்ஆனை ஹதீஸை கீழே வைத்து மரியாதையின்றி ஓதுவது, ஏதாவது ஒரு பொருளுடன் சமமாக வைப்பது இவையெல்லாம் கூடாது. நான் ஒரு பள்ளிக்குச் சென்றபோது குர்ஆனை ­ ஷரீஃப் அடுக்கி வைத்த இடத்தில் அதற்குசமமாக கைலிகளையும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டேன். உடனேஅந்த கைலியை எடுத்து வீசியெறிந்தேன். எவ்வளவுபெரிய பாபமான செயல்? குர்ஆன் அல்லாஹ்விலிருந்து வந்தது. அதுபரிபூரணமாக இருந்தது! அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு இறக்கப்பட்டது! இத்தகைய மதிப்புக்குரிய ஒரு பொருளை - குர்ஆனை - அது இயற்கையிலேயே உண்டானதுதான். படைக்கப்பட்டதல்ல . அத்தகு ஒரு மாண்பான பொருளை - அதற்குநிகராக தன்னுடைய கைலியை ஒருவன் வைத்தான் என்றால் அவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் !!

அவர்களிடம் குர்ஆனுக்கு மரியாதை இல்லை. அல்லாஹ்வுக்கு மட்டும் தான் மரியாதை! அல்லாஹ் அவர்கள் வந்தார்கள் .... இருந்தார்கள் .... போனார்கள். இப்படிப்பேசுவதுதான் மரியாதையா? அல்லாஹ்வுக்குமரியாதை செய்கிறார்களாம் . வேறு எவருக்கும் மரியாதை இல்லை .


சொல்லிப்பழக்குக

மூத்தவர்கள் ஓரிடத்துக்குச் சென்றால் சிறுவர்கள் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும்! இப்போது அப்படி நடக்கிறதா? வகுப்பறைகளுக்குப் போகும்போது மாணவர்கள் எழுந்துநின்றால் வேண்டாம்! வேண்டாம்! நீங்கள் அப்படியே இருங்கள் என ஆசிரியர்களே சொல்லிவிடுகிறார்கள். மாணவர்கள் அப்படியே இருந்து விடுகின்றனர். இப்போது அந்த அதபும் போய் விட்டது! ஒழுங்கு முறை ஒன்று இருக்க வேண்டுமே! அதுவும் இல்லை. அந்தமாதிரியான நிலையினை உண்டுபண்ணிக் கொள்கிறார்கள். வாழ்க்கை முறை தெரியாததே இதற்குக்காரணம்.

( அமுதம் பொழியும் )