உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யாஸய்யிதுகலீல்அவ்ன்மெளலானா
அல்ஹாஷிமிய்நாயகம்அவர்கள்
அகழ்யுத்தம்
( கலிவிருத்தம் )
தறித்தசென்னியைத் தங்கரங்கொண்டே
திரித்திடற்கெண்ணிய தீயயூ தர்கணே
உருத்தலோடெறிந்தன ருத்தம நாயகி
ஒருத்தலின்காப்பவ ருளரென வஞ்சினர் .
கொண்டுகூட்டு :
திரித்திடற்கு எண்ணிய தீய யூதர் கண்ணே தறித்த சென்னியை தங்கள் கரங்கொண்டே உத்தம நாயகி உருத்தலோடு எறிந்தனர் அவ்யஹூதிகள் ஒருத்தலின் காப்பவர் அரணுள்ளே உளரென அஞ்சினர் .
பொருள் :
நாசப்படுத்துவதற்காக எண்ணி வந்த தீய யூதர் கூட்டத்திடத்தே வெட்டியெடுத்த தலையை தங்கள் கரங்கொண்டே உத்தம நாயகியான ஸபிய்யா நாயகிகோபத்தோடு எறிந்தனர். விலங்கேறுபோன்று அரணைக்காப்போர் உள்ளே உள்ளனர் எனக் கருதி அஞ்சி ஓடினர் துரோகிகள் .
குறிப்பு :
தறித்தல் : வெட்டல். சென்னி : தலை. கரம் : கை. திரித்திடல் : நாசப்படுத்தல். கண் : இடம். உருத்தல் : கோபம். ஒருத்தல் : விலங்கேறு. இன் : போல் .