His Holiness' Birthday Celebrations in Chennai, 24 August 2014

04.09.14 06:33 AM


அவ்னியா உலக அமைதி அறக்கட்டளை,   தரீக்கதுல் ஹக்கிய்யதுல் காதிரிய்யா    மற்றும்  ஏகத்துவ   மெய்ஞ்ஞான   சபை சென்னை சார்பில்   பரிசுத்த   அவதார   சந்நிதானமும்   ஈருலக   ரட்சகர்   முஹம்மது   முஸ்தபா   ரஸூலே  கறீம்    ஸல்லல்லாஹு      அலைஹிவஸ்ஸல்லாம்    அவர்களின்   உள்ரங்க   வெளிரங்க   வாரிசும்,   கௌதுல்       அஉளம்    முஹிய்யுத்தீன்    ஆண்டகை   (ரலி)   அவர்களின்   சம்பூர்ண   பிரதிநிதியும்,   காலத்தின்   இமாமும்   ஆத்மா   ஞான     குருநாதருமான   ஷெ ய்குள்   காமில்   குதுபுஸ்ஸமான்    ஷம்சுல்   வுஜுது   ஜமாலிய்யா   செய்யது   கலீல்   அவ்ன்   மௌலா னா   அல்ஹஸனியுள்   ஹுஸைனி யுள்   ஹாஷிமிய்   நாயகம்   அவர்களின்   79 வது புனித உதய தின விழா நிகழ்ச்சிகள் 24.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சென்னை மூர் தெருவில்( G.P.O. பின் புறம் ) உள்ள ஹோட்டல் இந்தியன் பேலஸில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



Er. ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல்   காதிரிய்,   சென்னை வரவேற்புரையாற்றினார்.


Er. Dr. முஹையதீன் Ph.D.,   ஹக்கிய்யுல் காதிரிய் சென்னை அவர்கள் தலைமையில் , ஆன்மீக   கருத்தரங்கம்   நடைபெற்றதுடன்   மெய்ஞ்ஞான   கீதங்களும்   பாடப்பட்டன.


கருத்தரங்கத்தில்   கலீபா.   ஸதக்கத்துல்லாஹ்    ஹக்கிய்யுல்   காதிரிய்   ஈரோடு,  
ஜனாப்   டி.   மகதூம்   ஜான்   எம்.   ஏ.,   பி.   எட்.,     ஹக்கிய்யுல்   காதிரிய்  (முதல்வர்,   மதரஸதுல்   ஹஸனைன்   ஃபி   ஜாமிஆ   யாஸீன்,   திருச்சி   ),


அட்வகேட்.   மீர்   ஜாவித்,ஹக்கிய்யுல்   காதிரிய்   சென்னை,  
மௌலவி   என்.   ஸயீத்   முஹம்மது   ஆலிம்   மிஸ்பாஹி   (பேராசிரியர்,   மதரஸதுல்   ஹஸனைன்   ஃபி   ஜாமிஆ   யாஸீன்,   திருச்சி),  
ஜனாப்.   அப்துர்   ரவுஃப்    ஜின்னா ஹக்கிய்யுல்   காதிரிய், மதுரை,  

ஜனாப்.   ஏ.   பஷீர்   அஹமது    ஹக்கிய்யுல்   காதிரிய்,    கொச்சின்,  

ஜனாப். கிளியனூர்   இஸ்மத்   ஹக்கிய்யுல்   காதிரிய்,   சென்னை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



ஜனாப். எஸ். பி. ஆஸிஃப் ஹக்கிய்யுல்   காதிரிய்,   சென்னை மற்றும் ஆத்மா சகோதரர்கள்  மெய்ஞ்ஞான   கீதங்கள் பாடினர்.



ஜனாப்.முஹம்மது ஸலாஹுதீன் ஹக்கிய்யுல்   காதிரிய்,   சென்னை   நன்றியுரை வழங்கினார்.



வெளிநாடுகளிலிருந்தும்,    பல்வேறு   ஊர்களில்   இருந்தும்   வந்திருந்த   அவ்னியா   உலக   அமைதி   அறக்கட்டளை   மற்றும்     ஏகத்துவ   மெய்ஞ்ஞான   சபை   உறுப்பினர்களும்,   கலீபா   பெருமக்களும்,   உள்ளூர்   மக்களும்   கலந்து   கொண்டு  விழாவினை   சிறப்பித்தனர்.



லுஹர் தொழுகைக்குப்பின் துஆ ஓதப்பட்டது.  கலந்துகொண்ட   அனைத்து   முரீதுகளுக்கும்,   ஏழை   எளிய   மக்களுக்கும், சிறுவர்களுக்கும்  தப்ரூக்       உணவு   வழங்கப்பட்டது.   கலந்து   கொண்ட   அனைத்து   ஊர்   முரீதீன்கள்,   அஹ்பாபுகள்,   பக்தர்கள்   அனைவரும்   ஞானமகானின்   அருளும்   ஆசியும்    ஈருலக   நற்பேறுகளையும்    இறைவனின் கருணையால்   பெற்றுக்கொண்டார்கள். 



அவ்னியா   உலக   அமைதி   அறக்கட்டளை மற்றும்    ஏகத்துவ   மெய்ஞ்ஞான   சபை,   உலகம்   முழுவதும்   ஏழை  எளியவர்களுக்கும்   அனாதைகளுக்கும்   உதவி   புரிவதில்   முன்னணியில்   இருந்து   வருகிறது.  மேலும்    ஏகத்துவ   மெய்ஞ்ஞான   சபை  திருச்சியில்   ஏழை  மற்றும்   அனாதை   குழந்தைகளுக்கான ஒரு   மதரசாவை   முற்றிலும்   இலவசமாக   நடத்திவருகிறது.   இந்த   மதரசாவில்    உள்ள   நூற்றுக்கும்   மேற்பட்ட   மாணவர்களுக்கு   இஸ்லாமியக்கல்வியுடன்,   பள்ளி   மற்றும்   பட்டப்படிப்பிற்கான   வசதிகளுடன்   தொழிற்கல்வி   மற்றும்   கம்ப்யூட்டர்   கல்வியும்   கற்றுத்தரப்படுகிறது.    

 
இந்த   ஆன்மீக,   மனித   நேய,   சமுதாய   நல்லிணக்க    இயக்கத்தின்   ஸ்தாபகரும்   ஆன்மீக   ஞான   குருவுமாகிய  முஹம்மது   நபி       ஸல்லல்லாஹு   அலைஹிவஸ்ஸல்லாம்   அவர்களின்   உள்ரங்க   வெளிரங்க   வாரிசும், குத்புல்   அக்தாப்   ஜமாலிய்யா   செய்யிது   யாஸீன்    மௌலானா    அல்ஹஸனிய்யுல்   ஹாஷிமிய்   (ரலி)   அவர்களின் வாரிசுமான    ஷெ ய்குள்   காமில்   குதுபுஸ்ஸமான்    ஷம்சுல்   வுஜுது   ஜமாலிய்யா   செய்யது   கலீல்   அவ்ன்   மௌலான   அல்ஹஸனியுள்   ஹுஸைனி யுள்   ஹாஷிமிய்   நாயகம்   அவர்களின்   வழி   காட்டுதலின்படி    இந்த   சமுதயப்பணிகள்   சிறப்பாக    நடைபெற்றுவருகின்றன.  

emsabai.ibrahimkhaleel