ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை ஜனவரி மாத ஞான விளக்க கூட்டம்

14.01.13 05:15 AM

ஏகத்துவ மெய்ஞான சபை திருச்சி கிளை சார்பில் 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.15 மணி அளவில் மௌலவி N . சயீத் முஹம்மது ஆலிம் மிச்பாஹி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் உத்தரவிற்கிணங்க, சிதறுண்ட சிந்தனைகளை ஓர்முகப்படுத்தும் விதமாக  3 நிமிட மௌன அனுஷ்டானத்திற்கு பிறகு, வழக்கம் போல் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு மௌலவி. N . அப்துஸ்ஸலாம் ஆலிம் Bcom ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார் . மௌலவி. H . அப்துல் கரீம் ஆலிம் ஹௌதிய்யி BA  அவர்கள் கிராஅத் ஓதினார். திருச்சி கிளையின் அவை துணைத்தலைவர் S .B . ஆரிப் மெய்ஞ்ஞான கீதம் பாடினார்.

ரபீஉல் அவ்வல் மாதம் என்பதால், கூட்டத்தில் பேசுவோர் அனைவரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைமையப்படுத்தி பேசினார்கள்.
தலைமை உரையில், மௌலவி. N . அப்துஸ்ஸலாம் ஆலிம் Bcom ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  உள்ரங்கத்திலும் வெளிரங்கத்திலும் ஹக்காகவே உள்ளார்கள் என்றும் - தன்ஜீஹாஹவும் தஸ்பீஹாஹவும் இலங்குகிறார்கள் என்றும் ஞானத்  தேடல் உள்ளவர்களுக்கும் - மற்றுமுள்ள படைப்பினங்கள் அனைத்திற்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் எழில் மிகு எல்லையாக உள்ளார்கள் என்றும் எடுத்துரைத்தார்கள்.

அடுத்து பேசிய மௌலவி. சத்தார் கான் ஆலிம் யாஸீனிய் அவர்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூரே  முஹம்மதிய்யாவின் சிறப்புகளையும் அவற்றை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

பின்னர் உரையாற்றிய மௌலவி. ஹக்கீம் பாஷா ஆலிம் யாஸீனிய் அவர்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - எவ்வாறு உஸ்வத்துன் ஹஸனாவாக - அழகிய முன்மாதிரியாக திகழ்கிறார்கள் எனப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் மூலம் எடுத்துரைத்தார். 

நிறைவாக உரையாற்றிய மௌலவி. பீர் முஹம்மது ஆலிம் யாஸீனிய் அவர்கள், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - படைப்பினங்கள் அனைத்திற்கும் எவ்வாறு ரஹ்மத்துல் ஆலமீனாக  - அகிலத்திற்கோர் அருட்கொடையாக எவ்வாறு விளங்குகிறார்கள் என சில செய்திகள் மூலம் எடுத்துரைத்தார்.

























தௌபா பைத் - துஆ - சலவாத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. கூட்டத்தில் திருச்சியை சேர்ந்த முரீதுகள் - அஹ்பாபுகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

தகவல்  : A . நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய் M.A ., திருச்சி

emsabai.ansari